பாரதி வழி

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்,
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே யிம்மூன்றுஞ் செய்

திருச்சி வானொலி நிலைய இயக்குநர் அவர்கள, கீழப்பாவூர் அ.சண்முகையா அவர்கள, இங்கே குழுமி இருக்கின்ற பெரியோர்கள, தாய்மார்கள, மகாகவி பாரதியாருடைய 130ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவினை, நான் தனியாக நடத்த முடியாமல், அகில இந்திய வானொலி நிலையத்தோடும் பாரதி இயக்கத்தோடும் சேர்ந்து இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவை சிந்தித்து வடிவமைத்தவர் சண்முகையா அவர்கள் திருச்சி வானொலி நிலையத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஞாயிற்றுக்கிழமை. காலை பத்து மணிக்கு யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. வீட்டிலே உட்கார்ந்து டி.வி. பார்ப்பார்கள். அல்லது ஏதாவது வெட்டிக் கதைகள் பேசிக்கொண்டிருப்பார்கள். டி.வியிலே இருக்கிற பாழாய்ப் போனப் பட்டிமன்றங்கள கேட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த பாரதி பிறந்தநாள் விழா பற்றி திருச்சி வானொலி நிலையத்திலே பல முறை அறிவிக்கப் பட்டிருக்கிறது. இன்றைக்கு செய்தித்தாள்களில் எல்லாம் வந்திருக்கிறது. விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த மன்றத்திலே ஒரு நூறு பேர் கூட இல்லை. மகாகவி பாரதியாருக்கே இந்த நிலைமை. மகாகவி பாரதியாரைப் பற்றி யோசித்தால் வருவார்கள். ஆனால் இன்றைக்கு யார் பேசுகிறார்கள், என்ன விளம்பரம் செய்யப்படுகிறது, எந்த சூழ்நிலையில் நடத்தப்படுகிறது, அதை வைத்துத்தான் கூட்டமே தவிர, கருத்துக்காக கூட்டம் வருவது இல்லை. அதற்காக நாம் அதை அப்படியே விட்டுவிட முடியாது. நாம் கருத்துக்கள சொல்லியே ஆகவேண்டும். அதுவும் இந்தத் தருணத்திலே சொல்லியாக வேண்டும்.

பாரதியார் எதற்காகவெல்லாம் குரல் கொடுத்தாரோ, பாரதியார் எப்படிப்பட்ட தமிழகமும் இந்தியாவும் வரவேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அது சுத்தமாக இல்லை. ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார், திலகர், விவேகானந்தர், வ.உ.சி இவர்களல்லாம் அடிமை நாட்டிலே வாழ்ந்த சுதந்திர புருஷர்கள்; நாமெல்லாம் சுதந்திர நாட்டில் வாழ்கிற அடிமைகள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்கமிட்ட பாரதி 1921ல் இறந்துபோனார். வெள்ளக்காரனுடைய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலத்துக்குத்தான் மரியாதை என்று இருந்த காலத்தில், ஆங்கிலேயர்களல்லாம் ஆளப்பிறந்தவர்கள், நாம் அவர்களுடைய அடிமைகள் என்று நாமே நம்பிக்கொண்டிருந்தக் காலத்தில், ஏதோ வெள்ளக்காரன் அடிமைப் படுத்திவிட்டான் என்பது அல்ல. அது ஒரு பொய். நாம் அடிமையாக இருக்கிறோம் என்கிற நினைவே நமக்குக் கிடையாது. நாம் வெள்ளக்காரனுடைய ஆட்சியிலே மிக சுகமாக வாழ்ந்தோம். தீனி போட்டு வளர்த்த மாடுகள், பன்றிகளப்போல் நாம் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். இது அடிமைத்தனம் என்று சொல்லிக் கொடுத்தார்கள அவர்கள் ஏதோ நம்மை தொல்லை செய்கிறார்கள் என்று மக்கள் நினைத்தார்கள். ஏதோ இந்தியாவிலே இருக்கிற மக்கள் எல்லாம் கொதித்து எழுந்திருந்தார்கள், வெள்ளக்காரன் துப்பாக்கியை வைத்து அடிமைப் படுத்தியிருந்தான் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம். நமக்கு அந்த சிந்தனையே கிடையாது. 1921ல் பாரதியார் சாகிறபொழுது இந்தியா என்பது எழுச்சி ஏற்படாமல் இருந்த நாடு. அதுவும் தமிழகத்திலே வெள்ளக்காரனைப்போல் நாம் ஆங்கிலம் பேசுவதிலே திறமையானவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் நமக்குப் பெருமை. அந்தக் காலத்திலே பாரதியார் சொன்னார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று. தமிழர்களப் பார்த்து நீ உயர்ந்தவன், நீ உயர்ந்தக் குலத்தில் பிறந்தவன், உனக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது என்று தட்டி எழுப்பினார் பாரதி. நமக்கு அந்த உணர்ச்சியை ஊட்டினார். வ.ரா அவரைப் பார்ப்பதற்குப் பாண்டிச்சேரி போனார். அது 191016ல். பாரதியாரைப் பார்த்தார்.யார் என்று கேட்டவுடனே I am Ramasamy Iyangar from Thirupazhanam என்றார் வ.ரா. தோட்டத்திலிருந்த வேலைக்காரனை பாரதியார், ஏய் பாலு, இங்கே வாடா! உன்கிட்ட பேச இங்கே ஒரு ஆள் வந்திருக்கிறான் என்றார் எறிச்சலில் வ.ரா. அதிர்ச்சி அடைந்து நின்றவுடனே, பாரதியார் வ.ரா.விடம், ஏனய்யா, தமிழனும் தமிழனும் பார்க்கிறபோது, எவ்வளவு காலத்துக்கு ஆங்கிலத்திலே பேசுவீர்கள்? என்று கேட்டார். ஒரு தமிழன் ஆங்கிலத்திலே தமிழனிடம் பேசுவதை வெறுத்தார் பாரதியார். நம்முடைய எல்லா நடவடிக்கைகளும் தமிழிலே இருக்கவேண்டும் என்று குரல் கொடுத்தார். எல்லா ஐரோப்பிய சாஸ்திரங்களும் தமிழ் பாஷையிலே தரவேண்டும் என்று பாரதியார் சொன்னார். பாரதியார் மட்டுமல்ல, அவருக்கு அரசியல் கற்றுக்கொடுத்த ஜி.சுப்பிரமணிய ஐயர் சொன்னார். இன்றைக்கு நிலைமை என்ன? எதை நாம் உயர்வான பாடமாகக் கருதுகிறோம்? அரசாங்கத்தில் சமச்சீர் கல்வி என்று போட்டவுடனே அதை மாற்றுவதற்கு அத்தனைப் பேர் துடிக்கிறார்கள்! எதற்காக? கல்வியிலே மேல் ஜாதி கீழ் ஜாதி வந்துவிட்டது.

கல்வியால் ஜாதியை ஒழிப்போம் என்று கல்வி தரவேண்டும் என்று சொன்னார்கள். பள்ளிக்கூடங்களில்தான் ஜாதியை ஒழிக்க முடியும் என்று நம் முன்னோர்கள் கனவு கண்டார்கள். ஆனால் கல்வியிலேயே ஜாதி இருக்கிறது. மேல்ஜாதிக் கல்வி, கீழ்ஜாதிக் கல்வி. ஆங்கிலத்திலே படிப்பதெல்லாம் மேல்ஜாதி. தமிழிலே படிப்பதெல்லாம் கீழ்ஜாதி. தமிழில் யாரும் படிப்பதே இல்லை. ஆங்கிலத்திலே படித்தால்தான் பெருமை என்று வந்துவிட்டது. பாரதியாரைப் பற்றி நீங்கள் சரியாகத் தெரிந்துகொண்டிருந்தால், இந்த நிலை வருமா? அதிலே பாரதியாரைப் பற்றி புதிய ஆராய்ச்சி பண்ணுகிறேன் என்று பாரதி மேல்ஜாதிக்குப் பாடினார். பாரதி ஆரியர் என்றுப் பாடினார். ஒருத்தனும் பாரதியை முழுவதுமாக படிக்கவே இல்லை. பாரதியை புரிந்துகொள்ளவில்லை. குவளக் கண்ணன் ஒரு முறை பாரதியாருடன் நடந்துபோகிறபோது ஐயா, நீங்கள் பெரிய மகான். ஆனால் உங்கள பலபேருக்கு இன்னும் தெரியவில்லையே! என்று கேட்டார். அதற்குப் பாரதியார் நாம் நானூறு வருடங்களுக்கு முன்னாலே பிறந்துவிட்டோம் என்று சொன்னார். என்னைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் நானூரு வருஷம் ஆகும் என்று அதற்கு அர்த்தம். 39 ஆண்டுகள வாழ்ந்த பாரதியார், எழுதிவைத்தவற்றை நம்மால் படிப்பதற்கு, இன்னும் படித்துப் புரிந்துகொள்ள நமக்கு ஞானம் வளரவில்லை. நம்முடைய அறிவு தெளிவில்லை. பாரதியார் என்பர், நீங்கள் அறிவு பெறப்பெற அவரைப் படித்துப் படித்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளக்கொள்ள புதுப்புது வெளிச்சத்தை அவர் நமக்குக் கொடுக்கிறார்.

இன்றைக்கு எடுத்து அவர் கட்டுரைகளப் படியுங்கள், அவருடைய கவிதைகளப் படியுங்கள். இன்றைக்கு 2011க்கு எழுதப்பட்டக் கவிதைகள் போல கட்டுரைகள் போல அது சுடர்விடுவதை நாம் பார்க்கலாம். அவருடைய ஒரு கவிதைக்கு நிகராக இன்றைக்கு ஒருவர் புத்தகம்கூட எழுதுவதில்லை. இன்னொரு செய்தி, அதுவும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி, பாரதியாருடைய எழுத்துக்களில் கமா, ஃபுல்ஸ்டாப் விடாமல் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். பாரதியார் ஒரு சொல்லைகூட தேவையில்லாமல் சொல்லவில்லை. ஒரு சொல்லைகூட தேவைக்கு மேலே சொல்லவில்லை. ஒரு சொல்லைக்கூட பொருளில்லாமல் சொல்லவில்லை. இன்னொரு பெரிய விஷயம் யாருக்காகவும், யாரை திருப்திப்படுத்தவும், யாருடைய ஆசைக்காகவும் ஒரு வார்த்தைக்கூட எழுதியதில்லை. தான் மனம் ஒப்பாத ஒரு விஷயத்தை அவர் சொன்னது இல்லை. தான் எதை உண்மை என்று கருதினாரோ, அதை மட்டுமே சொன்னார். ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் என்று சொன்னார். ஏனென்றால், பாரதியார் என்பர் நம்முடைய குரு. தமிழ் மக்கள கடைத்தேற்றுவதற்காக வந்த குரு. அவர் ஒரு ரிஷி. இந்த ஞாபகத்தோடு பாரதியாரைப் படிக்க வேண்டும். நீங்கள் வைரமுத்து கவிதையைப் படிக்கிறேன்; பா.விஜய் கவிதையைப் படிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு பாரதியைப் படித்தால் உங்களுக்கு விளங்காது. பாரதி என்னுடைய குரு என்கிற பக்தியோடு படிக்கவேண்டும்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாரதியார் சொன்னார். தமிழைத் தொழுது படிக்கச் சொன்னார். நான் அதே வார்த்தைகள பாரதிக்குச் சொல்கிறேன். நீங்கள் பாரதியைத் தொழுது படிக்க வேண்டும். உங்கள வாழ்விக்க வந்தவர்.
பாரதியார் எப்படி வந்தார். அவரே சொல்கிறார்,

மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளத் துணையாக்கி,
எய்க்கு நெஞ்சை வலியுறுத்த,
யுடலை யிரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிஃதே

பாரதி சும்மா வரவில்லை. அவர் அவதாரம். தெய்வ விதியால் பிறந்தவர். அவர் சொல்கிறார்.

பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங்க கிருத யுகத்தினையே

கொணர்வேன் கிருத யுகத்தை இப்போது நான் கொணர்வேன். செத்த பிறகு அல்ல சிவலோகம். கலி என்றால் என்ன? எல்லா துன்பங்களும் நோயும் மிடியும் அத்தனை அக்கரமங்களும், கொடுமைகளும் கலி. இது நம்முடைய மனதிலே இருக்கிறது. கலி என்பது கொடுமையானது. அதை அப்படியே எடுத்துக்கொண்டார். அதற்குப் புதியப் பொருளக் கொடுத்தார். இத்தனைத் துன்பங்களும் தர்மம் நிலவுகிற யுகம் கிருத யுகம். இது நம்முடைய மிஷ்மிஷ்லிஐ ல் இருக்கிறது. ஆனால் அதனுடைய அர்த்தத்தை பாரதியார் புதிதாகச் சொன்னார்.

பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங்க கிருத யுகத்தினையே
கொணர்வேன் நான்

புதிய உலகத்தைக் கொண்டு வருவேன். இந்த மக்கள, பன்றிகளாக வாழ்கின்ற இந்த மக்கள சிங்கப் போத்துக்களாய் நான் மாற்றுவேன். அவர் வேண்டுவதே அதுதான். பன்றிகள சிங்கங்களாக மாற்றுகிற வலிமை எனக்கு வேண்டும். இவர்கள மக்களாக மாற்றுகிற வலிமை எனக்கு வேண்டும். அவர் பாடியப் பாடல்களல்லாம் நம்மை மனிதர்களாக்குவதற்காக. நம்மைத் தமிழர்களாக்குவதற்காக. தமிழர்கள் என்று சொன்னால், உலகத்தைவிட்டு விலகி குருகிப்போய் இருப்பதற்காக அல்ல. உண்மையான தமிழனாக இருந்தால் உலகம் நம் வசப்படும் என்று அவர் நம்பினார். கீழ்த்திசை நாடுகள்தான் உலகத்துக்கு வழிகாட்டப் போகிறது. அந்தக் கீழ்த்திசைக்கு வழிகாட்டுவதற்கு தமிழ்நாடுதான் வரப்போகிறது. தூங்கிக் கிடக்கிற அந்தத் தமிழகத்தை எழுப்புகிற வேலைகள என்னுடைய நூல்கள் செய்யும் என்று மதுரையிலே இருக்கிற வக்கீலுக்கு ஆங்கிலத்திலே கடிதம் எழுதினார். அவர் எழுத்திலே அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. அவர் எழுத்து செய்யுமா செய்யாதா என்பதல்ல. அவருடைய நோக்கம் அது. அதோடு நீங்கள் படிக்கவேண்டும்.

பாரதியார் சொன்னார், சூழ்கலி நீங்க தமிழ்மொழி ஓங்க
துலங்குக வையகமே

வையகம் துலங்கவேண்டுமானால், கலி நீங்க வேண்டும். எப்போது கலி நீங்கும்? தமிழ்மொழி ஓங்கினால் கலி நீங்கும். சூழ்கலி நீங்க, தமிழ் மொழி ஓங்கவேண்டும். தமிழ்மொழி ஓங்கி, சூழ்கலி நீங்க, துலங்குக வையகமே. பாரதிக்கு எவ்வளவு நம்பிக்கை நம் மீது! தமிழுக்கு அந்த வலிமை உண்டு. ஆனால் நம்மது தமிழென வாழ்த்துகிறோம். பாரதி காலத்திலே ஒரு அம்மாக்கணணுக்கு பாரதியைத் தெரிந்தது. குவளக்கண்ணன் கிருஷ்ணமாச்சாரிக்குத் தெரிந்தது. வை.சு.சண்முகம் செட்டியாருக்குத் தெரிந்தது. அன்றைக்கு அவரோடு வாழ்ந்த எலிக்குஞ்சு செட்டியாருக்குத் தெரிந்தது. செட்டியார் வாடகைக் கேட்க வந்தார். பாரதியார், இந்தியா சுதந்திரம் அடைந்துவிடும், நான் உனக்குக் காசோலைக் கொடுக்கிறேன். கஜானாவிலே போய் வாங்கிக்கொள் என்றார். நீங்கள் மகான். சொன்னால் பலிக்கும் என்றார் அவர். வாடகைக்கு வீடுவிட்டவர். அவர் மகான். அது தெரியாமல், இவன் பெரிய ஆராய்ச்சிக் கண்ணோடு பார்க்கிறானாம். பாரதியை முதலில் படி.

நம்முடைய கரிச்சான் குஞ்சு சொன்னார் ஒரு கூட்டத்தில், திரிலோகம் பாரதியினுடைய ஞானப் புத்திரர், திரிலோகத்திடம் போய், என்ன திரிலோகம், பாரதியைப் பற்றி பேசியாச்சு, எழுதியாச்சு என்ன பண்ணலாம்? என்று கேட்டாராம். உடனே திரிலோகம் எல்லாம் சரி, போய் பாரதியைப் படி என்றாராம். பாரதியைப் படிக்க வேண்டும். எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு ஒரு அவலம், நம்முடைய பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பாரதி பயிற்சி இல்லை. ஏன் இல்லை? சாயி சொன்னார். நாம் பேசுகிறோம் கூட்டமே வரவில்லை. விலிஐழியிஷ்மிதீ ஸயிலிஸ்ரீதுஐமி உலிற்உ நடத்துகிறார்கள். கூட்டமாக வந்து நிற்கிறார்கள் என்று ஏனென்றால் நீங்கள் எல்லாம் மனிதர்களாவதற்குப் படிக்கவில்லை. நீங்கள் எந்திரங்காளாகி பணம் சம்பாதிப்பதற்காகப் படிக்கிறீர்கள். நம் படிப்பெல்லாம் என்ன? எந்தக் கல்லூரியிலே கூட்டம்? எதற்கு பத்து லட்சம் இருபது லட்சம் பணம் கொடுக்கிறோம்? எல்லாம் அமெரிக்காக் காரனிடமும், இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் போய் கூலி வேலை, அடிமை வேலை செய்வதற்காக இந்திய மூள பயன்படுகிறது. இதில் பெரிய பெருமை, அமெரிக்காவில் இருக்கிற பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் இந்தியர்கள்.

உன் விஞ்ஞானம் என்ன செய்தது? தமிழ்நாட்டிலே இருக்கிற அடிமட்ட மக்கள முன்னேற்றுகிறதா? உங்கள மனிதனாக்குகிறதா? கோடிகோடியாக சம்பாதித்து நீ செய்வது என்ன? கண்டுபிடித்தது என்ன? அமெரிக்காரன் இன்றைக்கு விரட்டுகிறான். நீ பிச்சை எடுக்கப் போகிறாய்? ஏனென்றால் அமெரிக்காக்காரன் தூங்கிக்கொண்டிருப்பதற்காக, உங்களிடம் வேலை வாங்குகிறான். பணத்தைப் பார்த்தவுடன் கூலிக்காரனாகப் போகிறோம். நமக்கு சுதந்திர உணர்ச்சி இல்லை.

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

முதல் அடி என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் தாகம் இருந்தால் தண்ணீர் குடிப்பான். தணித்துக்கொள்ளலாம். எங்கேயாவது தேடி தணிப்பான். ஆனால் அந்தத் தாகமே இல்லையே. நாம் எப்படி இருக்கிறோம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் அடிமைத் தனத்திலே ஒரு ருசி. அதிலே இருக்கிற லயிப்பு. பாரதியாரே ஒரு பன்றிக் கதை சொல்லியிருக்கிறார். ஒரு அரசன் சாபத்தினாலே பன்றியாகப் போய்விட்டான். அப்போது சாபம் நீங்குவதற்கு என்ன வழி என்றால்? அவனுடைய மகன் ஒரு நாள் வந்து அந்தப் பன்றியைக் கொல்வான். கொன்ற உடனே மனித உருவம் வந்துவிடும், என்று ஒரு சாபம். இவன் பன்றியாகப் போன பிறகு பன்றியாக இருந்து பல குட்டி போட்டு சகதியில் இருந்தான். அவனுடைய பையன் வெட்டவந்தான். அந்தப் பன்றியாக இருக்கிற அரசன் சொன்னான் ஐய்யா வெட்டாதே, இதுவே எனக்கு சுகமாக இருக்கிறது என்று, இது பாரதியார் சொன்ன கதை. அந்த நிலையிலே நாம் இருக்கிறோம்.