மனித உரிமைகள்

மரியாதைக்குரிய இக்கல்லூரியின் முதல்வர் அவர்கள, என்னை இக்கல்லூரிக்கு பங்கேற்க அழைத்து பெருமைப்படுத்தி யிருக்கிற சுந்தரராஜன் அவர்கள, புலவர் பழனிச்சாமி அவர்கள, கணேசன் அவர்கள, எதிர்கால ஆசிரியப் பெருமக்கள, உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். எந்தத் திட்டத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது என்ற அந்தப் பின்புலம் எனக்குத் தெரியாது. ஆனால் என்னை மனித உரிமைகள் பற்றிப் பேச வேண்டும் என்று அழைத்தவுடன், மனித உரிமைகளப் பற்றி உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட முடியும் என்பதற்காக நான் வரவில்லை. மனித உரிமைகளப் பற்றி உங்கள் முன்னாலே, உரத்த சிந்தனையாக சில கருத்துக்கள உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரலாம் என்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் செய்தித் தாளிலும், எல்லா ஊடகங்களிலும், திரையிலும், சின்னத்திரையிலும் உரிமை உரிமைஎன்கிற இந்த சத்தத்தை மிக அதிகமாகவே நாம் கேட்கிறோம். மனித உரிமைகள் என்றப் பெயரில் மனித உரிமைகளப் பறிக்கிற பல விஷயங்கள் பேசப்படுகின்றன. காஷ்மீரிலே பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறவர்கள், மும்பையிலே வெடிகுண்டு வைத்துத் தகர்க்கிறவர்கள், உலகம் முழுவதற்கும் பயங்கரவாதத்தைக் கடைபிடித்து மக்கள அச்சுறுத்தகிறவர்கள் கைது செய்யப்படுகிறபொழுது அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று முயற்சி எடுக்கிறபொழுதெல்லாம் நீங்கள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் அவர்கள் துன்புறுத்தப் படுகிறார்கள், அவர்களுக்கு அந்த உரிமை இல்லை, இந்த உரிமை இல்லை என்றுப் பேசுவதை நீங்கள் அதிகமாகப் பார்க்கலாம். மனித உரிமைகள் இயக்கம் என்று பல பேர் வைத்திருக்கிறார்கள். அவர்கள் பேசுகிற பெரும்பாலான விஷயங்களப் பார்த்தால், யார் சமூகத்திற்குத் துன்பம் விளவித்து குற்றம் இழைத்திருக்கிறானோ, யார் தண்டனைக்குரியக் குற்றங்கள செய்திருக்கிறானோ அவனுடையத் துன்பத்தைப் பற்றிப் பேசுவதையே மிக அதிகமாக நம்முடைய மனித உரிமை இயக்கம் என்ற பெயரிலே நடக்கிற பல அமைப்புகள் பேசுவதை நீங்கள் கவனிக்கலாம். ஆகவே எது மனித உரிமை? அப்படி என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது? என்பதைப் பற்றி நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

மனித உரிமைகள் என்ற இந்த சிந்தனை வெகு காலமாக இருந்தாலும், மிக அழுத்தமாக பிரஞ்சு புரட்சிக் காலத்தில் இருந்துதான் வந்தது. பிரஞ்சுப் புரட்சி 1789ல் நடந்தது. அப்பொழுது மன்னராட்சிப் போய் (the ancient regine) புரட்சி செய்தவர்களுடைய ஆட்சி; இது ஒரு ஜனநாயக அமைப்பு தோன்றியக் காலத்தில் அந்த அசெம்ப்ளியில் 1789 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி புரட்சிகர தேசிய அவையில் Bill of rights என்கிற ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்கள். மனித உரிமைகளப் பற்றி உலகில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனித உரிமைகள் பற்றி ஒரு சட்ட வடிவம் கொடுக்க பிரெஞ்சுப் புரட்சி தேவைப்பட்டது. The bill of rights of the French Revolution was decree by the revolutionery national assembly after heated public debate on Augest 27, 1789. அந்த ஆவணத்தை பழமைக்கு மரணச் சான்று, புதுமையின் அடையாளம் என்று சொன்னார்கள். அதில் முதல் article “The assembly consequentry recognizes and declares in the presence under the auspices of the supreme being (கடவுள்) கடவுள சாட்சியாக வைத்து the following lighrs of man and the citizen என்பது ஒரு அரசாங்கத்திற்கு கீழே இருக்கிற, கட்டுப்பட்டிருக்கிற மனிதனுக்குப் பெயர். மனிதன் என்பது உலகத்திற்குப் பொதுவான விஷயம். அந்த முதல் ஆவணத்தில் Men are born and remain free and equal in right social distinction may be based only on common utility. நான் எல்லாவற்றையும் படிக்கவில்லை. ரூசோ எழுதினார், The man is born free and he is everywhere is chains. மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் அவன் எல்லா இடங்களிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறான். அந்த மனிதர்கள் எல்லோரும் சுதந்திரமாகப் பிறக்கிறார்கள், சமமானவர்கள் என்கிற விஷயத்தை பிரஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட அரசாங்கம் அந்தத் தேசிய அவை, சட்டமாக நிறைவேற்றிக்கொண்டது. இதுதான் உலகுக்கு பிரஞ்சுப் புரட்சி கொடுத்த மூன்று முழக்கங்கள். The Liberty, Equality and fraternity. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். மகாகவி பாரதியார் பாண்டிச்சேரியில் இந்தியா பத்திரிக்கை நடத்துகிறபொழுது அதனுடைய இலச்சினையாக இந்த மூன்றைத்தான் போட்டார். அது பிரஞ்சு அரசாங்கம். 18ஆம் நூற்றாண்டிலே நடைபெற்றப் பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னால் பிரஞ்சு மக்கள் உலகுக்குக் கொடுத்த செய்தி . மனித உரிமைகள் என்பது நம்முடைய அரசியல் சட்டத்திலே கூட Fundamental rights என்று ஒரு பகுதி இருக்கிறது. நம்முடைய அரசியல் சட்டம் 1950ல் நிறைவேற்றப்பட்டது. அந்த அரசியல் சட்டத்தின் மூன்றாவது பிரிவு Fundamental rights என்று இருக்கிறது. மக்களுடைய அடிப்படை உரிமைகள். அந்த அடிப்படை உரிமைகள் சொல்லுகிறபொழுது இந்த உரிமைகள் நமக்குத் தரப்பட்டதாக கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் மனித உரிமை என்பது யாராலும் கொடுக்கப்படவில்லை. மனித உரிமை என்பது ஒருவன் பிறக்கிறபொழுது அவனோடு இருக்கிறது.
In ears in man; it is inherent to man
மனித உரிமை என்பது இறைவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது. இறைவன் இங்கே இல்லாவிட்டால் மனிதனோடு பிறக்கும்போதே இருப்பது. எனவே மனிதனுடைய உரிமையை இன்னொரு மனிதன் கொடுப்பதில்லை. அதனால்தான் அமெரிக்க அரசியல் சட்டத்திலே Man is endowed with invariable rights என்று எழுதிக்கொண்டார்கள். கடவுளால் பிறருக்குக் கொடுக்க முடியாத பராதீபன் செய்ய முடியாத, விற்க முடியாத உரிமைகள கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

நம்முடைய சட்டங்களல்லாம் நம்முடைய முயற்சி யெல்லாம் மக்களுக்கு இருக்கிற உரிமைகள பாதுகாப்பதுதான். மனிதனுக்கு உரிமைகள வழங்குவதில்லை. நம்முடைய சட்டங்களல்லாம் அதைதான் செய்கின்றன. இன்றைக்கு நாம் மிக எளிதாக மனித உரிமையைப் பற்றியும், உரிமை பறிபோகிறது என்பதைப் பற்றியும், உரிமையைப் பறிக்கலாமா என்பது பற்றியும், அது பெரிய பாவம் என்றால் நாம் உணர்கிறோமோ இல்லையோ அது உள்ளத்துக்குள்ள சரியாக அது ஊரியிருக்கிறதோ இல்லையோ இவர்கள் வாயாலேயே எல்லாரும் பேசுகிறோம். பத்திரிகைகளிலே பார்த்தீர்களன்றால் மிக பிரமாதமாக எழுதுவார்கள். உள்ள போய்ப் பார்த்தால் அவர் வேறு ஒரு சிறை அதிகாரியிடம் கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அதைப் பார்க்கலாம்.

இவ்வளவு அதிகமாக பேசுகிற இந்த உரிமைகள் எப்பொழுதும் அப்படி இருந்தனவா? இல்லை. நம்முடைய மனித சமூக வளர்ச்சியை இன்றைக்கு மனித உரிமைகள் பற்றி பேசுகிற சிந்திக்கிற முறையில் நாம் முற்காலத்திலே சிந்தித்தது இல்லை. உலகத்துக்கு மிகப்பெரிய தத்துவத்தையும் நாகரிகத்தையும் வழங்கியதாக கருதப்படும் கிரேக்க நாட்டில், விஞ்ஞானத்திற்கு வித்திட்ட கிரேக்க நாட்டில் democracy என்கிற வார்த்தை கிரேக்க வார்த்தை. மக்கள தங்களத் தாங்கள நேராக ஆண்டு கொள்வது என்பது ஏதென்ஸில் இருந்தது. கிரேக்க நகரங்களிலே இருந்தது. அங்கு மக்கள் கூடுவார்கள். சட்டங்கள் விவாதிக்கப்படும். அப்படி எல்லா மக்களும் கூட அவர்கள் சட்டத்தை நிறைவேற்றுக்கொள்வார்கள். அது நாகரிகம் என்று சொல்கிறோமே, அது என்ன? நகரிலிருந்து வந்தது நாகரிகம். நகரத்திலே இருப்பவர்கள் கண்டுபிடித்தது நாகரிகம் என்பதை சொல்லிக்கொள்ளலாம். Civilization comes fron the word, ‘civitas’ அப்படி மிகப்பெரிய நகரமாக விளங்கிய ஏதென்ஸ் என்ற நகரில் Democracy வந்தது. அந்த கிரேக்க நாகரிகம் அடிமைத்தனத்தின் மீது கட்டப்பட்டது. ‘Republic’ என்ற பெரிய நூலை எழுதிய ப்ளட்டோ அவர்கள் ஒரு அடிமையினுடைய உதவியோடுதான் வாழ்ந்தார். அங்கே அடிமைகள் இருந்தார்கள். எல்லா மனிதர்களும் சமம் இல்லை. அங்கே ஓட்டுரிமை என்பது மேல் ஜாதி மக்களுக்குத்தான். அடிமைகளுக்கு இல்லை. அடிமைகள விற்பதும் வாங்குவதும் ரோம் நாட்டிலும் கிரேக்க நாட்டிலும் சர்வ சாதாரணமாக இருந்தது.

உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிற இந்திய நாட்டில் எத்தனையோ நீதி நூல்கள் வேதகாலம் தொடங்கி இன்று வரையிலே அனந்தம். ஆனால் இந்த நாட்டில்தான் தீண்டாமைக் கொடுமை என்பது ஆயிரக் கணக்கான ஆண்டுக் காலமாக இருந்தது. வள்ளுவர் சொன்னார் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையாம் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னால். ஆனால் இங்குதான் பிறப்பின் அடிப்படையில் மேல் ஜாதி, கீழ் ஜாதி, என்று வைத்துக்கொண்டோம். தெருவிலே நடக்கக் கூட உரிமை இல்லாமல் ஒரு பகுதி மக்கள, நம்மைப் போன்ற மனிதர்கள விலக்கி வைத்திருந்தோம். ஆனால் பெரிய பெரிய நீதி நூல்கள் நம்மிடம் இருந்தன. உலகம் முழுதும் படித்தார்கள். சீனாவை எடுத்துக்கொண்டால் அப்படி. ஜப்பானை எடுத்துக்கொண்டால் அப்படி. எல்லா நாடுகளிலும் அடிமைகள் வாழ்ந்தார்கள். கீழோர் மேலோர் இருந்தனர். பையப் பைய மனித சிந்தனை வளர வளர இது தீமை என்கிற உணர்வு காலங்காலமாக சிந்தனையாளர்கள் மூலம் பரவி பரவி வந்து, இன்று அது எல்லாக் காலத்திலும் இருந்தது போலவும் இப்பொழுதுதான் கொடுமை நடப்பது போலவும் நமக்குத் தோன்றுகிற அளவுக்கு நமக்கு மனித உரிமைகளப் பற்றிய ஞானம் வந்திருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப் பட்டு வந்த விஷயம். ஆண்டான் அடிமை என்பதையும் மேல் ஜாதி கீழ் ஜாதி என்பதையும் நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டிருந்தோம்.

மகாத்மா காந்தி இந்தியாவிலே தோன்றுவதற்கு முன்னால் தீண்டாமை தவறு என்று பேசிக்கொண்டிருந்தோமே தவிர தீண்டாமையைப் பாவம் என்று யாரும் கருதவில்லை. அதற்கு பெரிய இயக்கத்தை மகாத்மா நடத்தி நமக்கு அதை உணர வைத்து மனிதனுக்கு மனிதன் எப்படி அடிமையாவான் என்று சொல்லி, நமக்குக் கற்றுக்கொடுத்ததினுடைய விளவு இன்றைக்குத் தீண்டாமை நமக்குக் கொடுமையாகத் தெரிகிறது. அதற்கு முன்னாலே எனக்குத் தெரிந்த என்னுடைய இளவயதுக் காலத்தில் தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு மனிதனைப் போய் மேல் ஜாதிக்காரன் தொடப்போனால் சாமீ! தொடாதீங்க என்பார். ஏன் என்றால் ஏதோ முற்காலத்தில் பாவம் பண்ணியிருக்கிறேன். அதனாலே இப்படி நான் பிறந்தேன். மறுபடியும் அந்த பாவத்துக்கு ஆளாக்காதீங்க, நீங்க தொட்டால் எனக்குப் பாவம் என்றார். இது உண்மை; நான் ஒன்றும் கற்பனையாக சொல்லவில்லை. மகாத்மாவைப் போன்றவர்கள், பாரதியாரைப் போன்றவர்கள் அட முட்டாள நீ மண்ணில் மண்ணன்று நீ மனிதன்; நீ யாருக்கும் அடிமை இல்லை; மற்றவர்களுக்கு இணையானவன் நீ; ஏன் உன்னைத் தாழ்த்திக் கொள்கிறாய்? என்று சொல்லிக்கொடுத்து அவர்கள மேலே தூக்கிவிட்டார்கள். இப்படி நம்நாட்டிலே நம் காலத்திலேயே இந்த உரிமைகளப் பற்றிய சிந்தனை இல்லாமல் நாம் வாழ்ந்தோம்.

அப்புறம் இன்னொன்று, மன்னராட்சிக் காலத்திலே மன்னனுக்காக எல்லோரும் வாழ்ந்தார்கள். மன்னன் சொல்வதுதான் சட்டம். அது சரியா தவறா? யாரும் கேள்வி கேட்க முடியாது. மன்னன் இறைவனின் வடிவம் என்று எல்லா நாடுகளிலும் நம்பினார்கள். திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேனே என்று நாலாயிரத் திவ்ய பிரபந்தம் சொல்கிறது. Divine theory என்பது மேல் நாடுகளிலே இருந்தது. ஆங்கில நாட்டிலே அந்த பழமொழி எப்படி வந்ததென்றால் ‘The king can do no wrong’ மன்னன் தவறு செய்ய மாட்டான் என்று மன்னனுக்கு மக்கள் அடிமைகளாக இருந்தார்கள். மன்னன் மக்களப் பாதுகாப்பதற்குள்ள கடமை உணர்ச்சியோடு இருந்தான். அவன் பாதுகாக்கவில்லை என்றால் கொடுங்கோலன் என்று நீங்கள் திட்டலாம். ஆனால் உங்களுக்கு அவனை எதிர்க்கவும் கேள்வி கேட்கவும் சட்டப்படி உரிமை இல்லை. அப்படிப்பட்டக் காலத்திலிருந்து வளர்ந்து, யாரும் ஆண்டான் அடிமை இல்லை; ஒருவனுக்காக ஒருவன் வாழவேண்டியதில்லை; மனிதன் மனிதனை அடிமைப் படுத்தக் கூடாது என்ற சிந்தனை வளர்ந்து வந்தது.

பிரஞ்சுப் புரட்சி உலகம் முழுமைக்கும் அந்த சிந்தனையைக் கொடுத்தது. பிரஞ்சுப் புரட்சி தவறு என்று ஆங்கில நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் சிந்தனையாளராகவும் மிகப்பெரிய சொற்பொழிவாளராகவும் பாராளுமன்றவாதியாகவும் இருந்த எட்மண்ட் பர்க் பிரஞ்சு நாட்டு மக்கள் கொல்லப் பட்டதையும் பிரபுக்கள் கொல்லப்பட்டதையும் எதிர்த்து நூல் எழுதினார். அந்த நூல் தவறு என்று காட்டுவதற்கு என்று தாமஸ் பெயில் என்கிற ஞானி ஒரு புத்தகத்தை எழுதினார். பிரஞ்சுப் புரட்சி நியாயம் என்று சொன்னார். சார்லஸ் மன்னன் தலை வெட்டப்பட்டபோது இங்கிலாந்தில் அது சரி என்று எழுதிய ஜான் மில்டன் என்ற மகாகவி, அது நியாயம் என்று எழுதினார். மனித உரிமைகளுக்காக அவர் எழுதினார். ஆங்கில நாட்டில் மனித அடிப்படை உரிமைகளுக்காக எல்லா சிந்தனையாளர்களும் போராடினார்கள். அப்படிப் போராடிப் போராடி மன்னனுக்காக மக்கள் இல்லை மக்களுக்காக மன்னன் வாழ வேண்டும் என்றக் கருத்து வந்தது. அதைப் புலவர்கள் பாடினார்கள். ஞானிகள் சொன்னார்கள். மக்களுக்குத் தேவையான வழியிலே நீ ஆளவில்லை என்றால் அதுவே உன்னை அழிக்கும் படை. ஏழை வடிக்கும் கண்ணீர் மன்னனை அழிக்கும் படை என்று திருக்குரலிலே வள்ளுவர் எழுதினார். ஆனால் மன்னர் ஆட்சிப் போகவில்லை. இன்றைக்கு அது இல்லை. முன்னால் இருந்தது அப்படியே இருக்கிறது என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. எனவே மன்னனை வைத்து அல்ல மக்கள். மக்களுக்காக மன்னன் என்ற கருத்து வர இப்பொழுது மக்களாட்சி வந்தது. மக்களுக்காக மக்கள ஆண்டுகொள்கிற ஆட்சி மக்களாட்சி. Democracy is for the people by the people and off the people என்று ஆப்ரகாம் லிங்கம் சொன்னார். இன்றைக்கு வாயளவிலே அதை நாம் சொல்கிறோம்.

அன்று நாஸி ஆட்சி வந்தது. ஹிட்லருடைய ஆட்சி வந்தது. யூத மக்கள லட்சக்கணக்கிலே கொன்றுக் குவித்தான். மாதா கோலிலே பார்த்தால் அங்கிருக்கிற அங்கு வணங்கப்பட்ட உருவங்கள மாற்றி ஹிட்லருடைய ஸ்வஸ்திகாவை வைத்துக் கும்பிட்டான். ஹிட்லர்தான் கடவுள் மாதிரி கும்பிட்டார்கள். ஹிட்லர் சொன்னான் தலைவர் எப்பொழுதும் சரியாகத்தான் இருப்பார் என்று. ஏனென்றால் ஹிட்லரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவன் ஆரிய இனம்தான் மனித இனத்திலே உயர்ந்த இனம் என்று அவன் சொல்லிக்கொண்டான். நீங்கள் நம்ம ஊர் விஷயத்தை அதில் சேர்த்துவிடக் கூடாது. ஒரு கூட்டத்திலே அவன் சொன்னான் “We are barbarians and we want to be barbarians” ஐரோப்பாவினுடைய வடக்குப் பகுதியிலே இருந்து ரோம் நகரத்திற்குப் படையெடுத்து வந்த காட்டுமிராண்டிகளாக வந்த பார்பேரியன்ஸ் இருக்கிறார்கள The pure Germanic rays அந்த இனத்தை அப்படியே நான் காப்பாற்றுவேன் என்று சொன்னான். ஜெர்மானிய இனம்தான் ஆளப்பிறந்தது. மற்றவர்கள் எல்லாம் அடிமையாக இருக்கப் பிறந்தவர்கள் என்று 20ம் நூற்றாண்டில் சொன்னான். நீட்சே என்கிற ஒரு ஞானி ஒரு கருத்தை சொன்னான், ஆதிமனிதர்கள் அவர்கள் ஆளப்பிறந்தவர்க்ள மற்றவர்கள் அவர்கள் கீழே இருக்கப் பிறந்தவர்கள் என்று. ஜெர்மானிய மக்கள்தான் ஆளப்பிறந்தவர்கள் மற்றவர்கள் அவர்கள் கீழே இருக்கப் பிறந்தவர்கள் என்ற நீட்சேவினுடைய கருத்தை எடுத்துக் கொண்டான். ஜெர்மானிய மக்கள்தான் ஆளப்பிறந்தவர்கள் என்று சொல்லி அந்த ஜெர்மானிய மக்களுக்கு ஏற்பட்ட அத்தனை துன்பங்களுக்கும் காரணம் யூத மக்கள் என்று சொல்லி அந்த யூத மக்கள அழித்தான். யூத மக்கள கூட்டம் கூட்டமாகக் கொன்றான். அவனுடைய பயங்கரத்துக்கு பயந்து வெளியே போனவர்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜெர்மானியை விட்டு வெளியே போனவர்தான் மனோதத்துவத்துக்கு பிதாவாகக் கருதப்படுகிற சிக்மன் ஃப்ராய்டு. சிக்மன் ஃப்ராய்டு ஒரு யூதர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு யூதர், கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர். இருக்கிற அவ்வளவு யூதர்களும் ஜெர்மனியைவிட்டு வெளியே ஓடினார்கள். அவ்வளவு பேரையும் அடித்து விரட்டினான்.

இந்தக் கொடுமையைப் பார்த்த பின்னால், இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பின்னால் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அந்த ஐக்கிய நாடுகள் சபையில் முதலில் ஒவ்வொரு நாடு ஒரு நாட்டில் உரிமை கூட இருக்கிறது குறைந்து இருக்கிறது, இதெல்லாம் சொன்னார்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை சொன்னது, மனிதன் பாதுகாப்பாக வாழவேண்டும். அவன் எந்த நாடாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனிதன் என்று பிறந்துவிட்டால் அவர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருதி பல நாட்கள் யோசித்து அவர்கள் மனித உரிமைகள் பிரகடனம் என்பதை ஐக்கிய நாடுகள் சபை சார்பாக பிரகடனப் படுத்தினார். அதற்குப் பெயர் ‘The Universal Declaration of Human Rights’ இது 1947 நிறைவேற்றப்பட்டது. அதன் படி First Article: All human beings are born free and equal in diginity and rights. They are endowe with reason conscience and should act towards one another in spirit of brotherhood’ பார்த்தால், மனிதன் பிறக்கும்பொழுதே அவனுக்கு அறிவும் மனசாட்சியும் வைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு மனிதன் அவனுக்கு அந்த உரிமையைத் தரவில்லை. பிறக்கும்போதே இந்த உரிமைகளாடு பிறக்கிறான். இந்த உரிமைகளுக்குக் குந்தகம் வராமல் எல்லா நாடுகளும் பார்த்துக்கொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபைக்கு கட்டுப்பட்டிருக்கிற நாடுகள் அனைத்தும் தன்னுடைய மக்களுக்கு இந்த உரிமையை பாதுகாத்துத் தரவேண்டும். இன்று இலங்கையிலே தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் உலகத்திலே இருக்கிற எல்லா மக்களும் கொல்லாதே என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், அது மனித உரிமையினுடைய மீறல்.

மனித உரிமை என்ன? அடுத்த article : Every one has the rights to live liberty and security of the person முதல் article ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்வாழ, பாதுகாப்பாக உயிர்வாழ உரிமை இருக்கிறது. எந்த மனிதனுடைய உயிரையும் யாரும் பறித்துவிடக் கூடாது. அந்தப் பாதுகாப்பு இழந்துவிடக்கூடாது. இப்படி ஒவ்வொன்றாகப் பார்த்தால் அவனுக்கு சிந்திக்கிற உரிமை இருக்கிறது. சிந்தனையை வெளிப்படுத்துகிற உரிமை இருக்கிறது. அதைப் பேசுகிற உரிமை இருக்கிறது. அதை எழுத்து மூலமாக வெளிப்படுத்துகிற உரிமை இருக்கிறது. அதைப்போலவே கூட்டம் கூடி அவனுடைய கருத்துக்களப் பரிமாறிக்கொள்கிற உரிமை இருக்கிறது. சிந்தனை சுதந்திரம் இருக்கிறது. இந்தக் கருத்தைத்தான் சிந்திக்க வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. சிந்தனை வெளிப்படுத்துகிற சுதந்திரம். அதைப்போல கடவுள் நம்பிக்கையைப் பற்றிய சுதந்திரம். அவன் எந்த மதத்துடனும் இருந்து கொள்ளலாம். மதமே இல்லாமல் இருந்துகொள்ளலாம். இந்தக் கடவுள இப்படி வணங்கவேண்டும் என்றுக் கட்டாயப்படுத்த முடியாது. எனவே இந்த மாதிரியான சுதந்திரங்கள் எல்லா மனிதர்களுக்கும் இருக்கின்றன. மனிதன் காட்டிலே வாழ்கிற போது தனியாக இருக்கிறபோது, அவனுக்குக் கட்டுப்பாடுகள இல்லை. எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சிக்கல் எப்போது வருகிறது? அவன் கூட்டமாகக் கூடி ஒரு சமூகமாக வாழத்தொடங்குகிறபோதுதான் குழப்பம் வருகிறது. எல்லோரும் உரிமை உடையவர்கள். அப்போது அதற்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். அப்படி வருகிறபோதுதான் ஒரு மனித உரிமை இன்னொரு மனிதனுடைய உரிமையோடு உராயாமல் மோதாமல் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்ளாமல் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர் நம்முடைய உரிமையை எப்படி இன்னொருவன் பறிக்கமுடியாதோ, அப்படியே அடுத்தவனுடைய உரிமையை நாம் பறிக்கக் கூடாது. என் சுதந்திரம் எதுவரை வருகிறது என்றால் என்னுடைய மூக்கு நுணி வரை வருகிறது என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. ஒருவன் குச்சியை சுற்றிக்கொண்டே போகிறான். நிழியிவஷ்ஐஆ விமிஷ்உவஐ எதுவரை போகலாம் என்றால் அடுத்தவன் மூக்கை இடிக்காத வரையில். சமூகமாக வாழத் தொடங்கிய பின்னால் ஒருவனுடைய உரிமை இன்னொருவனுடைய உரிமையோடு உராய்கிறபோதுதான் குழப்பம் வருகிறது. அப்படி இன்னொருவருடைய உரிமையோடு மோதிக்கொள்ளாமல், ஒன்றுக்கொன்று அழிவில்லாமல் வாழ்வதற்காகத்தான் சட்டம் என்று ஒன்று வருகிறது. ஆட்சி எனறு ஒன்று வருகிறது. அது உரிமைகளக் கொடுப்பதில்லை. இருக்கிற உரிமைகள சிதறாமல் ஒவ்வொருவருக்கும் காப்பாற்றிக் கொடுக்கிறது. காப்பாற்றிக் கொடுப்பதற்காக இயங்குவதுதான் அரசாங்கம். காப்பாற்றி கொடுப்பதற்காக இயற்றப்படுவதுதான் சட்டம். அந்த சட்டம் ஒழுங்கு இல்லை என்றால் அந்த சட்டத்தின் மூலம் நீங்கள் உரிமையை பெறவில்லை, சட்டத்தின் மூலம் உங்கள் உரிமை கெட்டுப்போகாமல்; பார்த்துக்கொள்கிறீர்கள்.

சட்டம் போடுவது அரசாங்கம். அரசு என்பது அந்தக் காலத்திலே மன்னன். இன்றைக்கு அரசாங்கம் ஜனநாயகமாக இருந்தால், மக்கள் உருவாக்குகிற அரசாங்கம். சவுதி அரேபியாவில்; எனக்கு உரிமை இருக்கிறது என்று கேட்க முடியாது. அங்கே இருக்கிற ஷேக் இன்றைக்கும் 2009லும் அரபு நாடுகளுக்குப் போனால் அங்கே இருக்கிற ஷேக் சொல்வதுதான் சட்டம். இந்த அடிப்படை உரிமை சட்டம், அங்கே பெண்கள் யாரும் வெளியே வர முடியாது. ஆணும் பெண்ணும் சமம் என்று இங்கே சொல்லிக்கொண்டிருக்கலாம். சவுதி அரேபியாவில் சொல்ல முடியாது. துணியைப் போடும்போது, கண் எதுவரையில் தெரியலாம் என்று சட்டம் போட்டு வைத்திருக்கிறான். தாலிபான் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் இருக்கும்பொழுது கண்ணைத் தாண்டி இங்கே இதுவரையில் துணி வந்துவிட்டால் அடித்தான். உலகத்தில் அந்த நாடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. மக்களாட்சி இருக்கிற நாட்டில் நாம் உருவாக்குகிற அரசாங்கம் சட்டம் நமக்காகப் போடுகிறது. முதலில் மனிதன் ஆண்டான். மன்னன் ஆண்டான். இப்போது மன்னன் மனிதன் ஆளவில்லை. நம் உரிமைகள பாதுகாப்பதற்காக இன்றைக்கு நடப்பது சட்டத்தின் அடிப்படையில். யூற்யி லிக்ஷூ யிழிழ. சட்டத்தின் ஆட்சி. ஹிலி துழிஐ ற்யி ழிஐலிமிஜு துழிஐ. பாரதியார் சொன்னார், பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்வோம். பரிபூரணணுக்கே அடிமை செய்து வாழ்வோம். சுதந்திரத்திற்கு இலக்கணம் அதுதான். நான் இன்னொரு மனிதனுக்காக இல்லை. இந்த நாட்டிலே முதலமைச்சருக்காகவோ, பிரதமருக்காகவோ, கவர்னருக்காகவோ இந்த நாடு இல்லை. நம்முடைய வாழ்க்கையை நம்முடைய வேலைகளப் பார்ப்பதற்காக அவர்கள் இருக்கிறார்கள். ஆள்வது எது? சுர்ஜித் சிங் பர்ணாலா அல்ல, கலைஞர் கருணாநிதி அல்ல, மன்மோகன் சிங் அல்ல. நம்மை ஆள்வது சட்டம். இந்திய அரசியல் சட்டம் என்று ஒரு சட்டம் நமக்கு இருக்கிறது. இந்த சட்டப்படிதான் நாமும் நடக்கவேண்டும். அரசாங்கமும் நடக்க வேண்டும். அரசாங்கம் சட்டம் போடுவதற்கு பாராளுமன்றத்திற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த உரிமையைக் கொடுப்பது யார். நாம்தாம்.

இப்போது தேர்தல் வரப்போகிறது. அது பெரிய திருவிழா மாதிரி, கேலிக் கூத்து போல, தீபாவளி போல, பொங்கல் போல அல்லது ரம்ஜான் போல திருவிழாதான் நாம் நடத்துகிறோம். தேர்தல் நடத்தவில்லை. ஆனால் உண்மையில் இந்தத் தேர்தலின் மூலம் நீங்கள் உங்கள ஆள்வதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் கொடுக்கிறீர்கள். உங்கள் பிரதிநிதிகளாக, உங்கள் விஷயங்களப் பார்ப்பதற்காக, உங்களுக்கு சட்டம் செய்வதற்காக பிரதிநிதிகள நீங்கள் அனுப்புகிறீர்கள். உங்களிடம் பெற்ற உரிமையை வைத்துக்கொண்டு பாராளுமன்றம் சட்டம் செய்கிறது. ஆனால் பாராளுமன்றம் என்று வந்துவிட்டவுடனே அது போடுகின்ற சட்டத்திற்கு எல்லா மக்களும் கட்டுப்பட்டவர்கள். அந்த சட்டத்திற்கு நாம் கட்டுப்பட்டவர்கள். சட்டம் இயற்றுகின்றவர்கள் நம்முடைய பிரதிநிதிகள். சட்டம் போடுவதற்கு எல்லா அதிகாரமும் பாராளுமன்றத்திற்கு இருக்கிறது. எந்த சட்டம் போடவேண்டும் என்று நீங்கள் கேட்க முடியாது. எந்த கோர்ட்டும் கேட்க முடியாது. ஆனால், இந்த அரசியல் சட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிற சட்டத்திற்கு விரோதமாக கொள்கைக்கு விரோதமாக ஒரு சட்டம் இயற்றப்படுமானால் எந்தக் குடிமகனும் நீதிமன்றத்திற்குப் போய் இந்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது எனவே இந்த சட்டத்தை செல்லாது என்று சொல்லுங்கள் என்று கோர்ட்டைக் கேட்கலாம். பாராளுமன்றத்தில் எல்லோரும் சேர்ந்து, ஐந்நூற்றுக்கு மேல் இருக்கிறார்கள உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு சட்டத்தை இயற்றி அது இந்த அரசியல் சட்டத்திற்குள் விரோதமாக இருக்குமானால் அந்த சட்டம் செல்லாது என்று சொல்லுவதற்கு உயர்நீதி மன்றத்திற்கும் உச்சநீதி மன்றத்திற்கும் அதிகாரம் இருக்கிறது. நம்முடைய அடிப்படை உரிமைகள மீறுகிற, அடிப்படை உரிமைகளப் பறிக்கிற, அடிப்படை உரிமைகளுக்கு தீங்கு செய்கிற எந்த சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட் செல்லாது என்று சொல்லலாம். அதை சொல்லுவதற்காகத்தான் அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிற உரிமைகள் நமக்குப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அடிப்படை உரிமைக்கு விரோதமாக சட்டம் இயற்றப்பட்டால் அந்த சட்டம் செல்லாது.

மனித உரிமைகள் என்று உலகம் ஒத்துக்கொண்டிருக்கின்ற அத்தனை உரிமைகளும் நமக்குப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. நாம் முன்னேறியிருக்கிறோம். மனித சமூகம் முன்னேறியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனித்துவமுள்ள தனி அதிகாரம் படைத்த தனி அமைப்பு. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஒரு நாடு என்பது ஒரு காலத்தில் ஒரு நாட்டுக்குள்ள நடப்பதை அடுத்தவன் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இப்போது ஒரு நாட்டில் அடிப்படை உரிமை மீறல் நடந்தால் ஐக்கிய நாடுகள் சபை கேட்கலாம். ஹேக் என்ற இடத்திலே சர்வதேச நீதி மன்றம் அதைக் கேட்கலாம். ஐக்கிய நாடுகள் சபை அந்த இடத்திற்கே சென்று தலையிட்டு அதை நிறுத்தலாம். அந்த அளவுக்கு மனித குலம் முழுமையானது என்கிறக் கருத்தை நாம் வளர்த்திருக்கிறோம். அது என்னுடைய நாடு என்று சொல்லி அதில் அக்கிரமம் செய்யக்கூடாது என்று சொல்லுகிற அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம். ஆனால் அதில் நாம் இன்னும் முழுமை அடையவில்லை. இருந்தாலும் நாம் வளர்ந்திருக்கிறோம். அமெரிக்கா ஒரு நாட்டிலே போய் தலையிடுகிறபோது, அது சரியோ தவறோ அது என்ன சொல்லி தலையிடுகிறதென்றால், அங்கே மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு நான் போகிறேன் என்று சொல்லிக்கொண்டுதான் அமெரிக்கா தலையிடுகிறது. அப்படிப் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் உயிர், உடைமை, அறிவுத் தேடல், நம்முடைய கலாச்சாரத்தை பாதுகாப்பது, மொழியைப் பாதுகாப்பது, இனத்தைப் பாதுகாப்பது, சமயத்தைப் பாதுகாப்பது இவை அத்தனைக்கும் உலக நாடுகள் ஒப்புக்கொண்டிருக்கிற உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமைகள் என்று இவ்வளவு உரிமைகள் நமக்கு இருக்கிறது. உரிமைகள் இருக்கிறது என்று சொன்னால் அந்த உரிமைகள நாம்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உரிமைகள பாதுக்காத்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுடைய கடமை. நீங்கள் தூங்கக் கூடாது. அமெரிக்காவில் இருக்கிற உலகத்திலே மிகப்பெரிய நூகலம் The library of U.S. Congress. அந்த நூலகத்தில் பெரிய வாசகம் எழுதி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கடையில் வர என்று பாரதிதாசன் பாடினார். சுதந்திரமாக இருப்பது என்பது எளிமையான காரியமில்லை. சுதந்திரத்திற்கு நீங்கள் கொடுக்கிற விலை என்ன? நிரந்தரமாக விழிப்போடு இருப்பதுதான். தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும் நீங்கா நிலனாள்பவர்க்கு இது வள்ளுவர் அரசனுக்கு சொன்னார். இன்றைக்கு எல்லாரும் இன்னாட்டு மன்னர். ஆகவே இது இப்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேண்டும். நீங்கள் தூங்கினால் நாளக்கு சுதந்திரம் உங்களுக்கு இல்லை. கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட விழிப்போடு இருப்பதுதான். சுதந்திரத்திற்கு நீங்கள் கொடுக்கிற விலை.

இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதந்திரு விரண்டு மாறிப்
பழிமிகுத் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி யின்னல்
விளந்தெனை யழித்திட் டாலும்
சுதந்திரத் தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே

என்று பாரதியார் பாடினார். வீட்டிலிருப்பதுதான் இதம் சுகம். அதைவிட்டு நீங்கி, எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் நான் சிறைப்பட்டாலும் எவ்வளவு பழி வந்தாலும், எத்தனை அழிவு வந்தாலும், சுதந்திர தேவி நினை துதித்திடல் மறக்கிலேனே என்று பாரதி பாடினாரே அந்த நினைவு இருக்கிற வரையில்தான் நம்முடைய சுதந்திரம் இருக்கும். இல்லையென்றால் ஓட்டுப் போட்டவுடனே உங்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நீங்கள் அடிமை, உங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீங்கள் அடிமை, உங்களது பஞ்சாயத்து போர்டு பிரசிடண்டுக்கு நீங்கள் அடிமை. உங்கள் வார்டு கவுன்சிலருக்கு அடிமை. தெருவில் வருகிற போலீஸ் காரர்களுக்கு அடிமை. எல்லாவற்றிற்கும் மீறி சமூகத்திலே வாழ்கிற தாதாக்களுக்கு அடிமை. ரவுடிகளுக்கு அடிமை. தீயவர்களுக்கு அடிமை. வாழ்கிறோமா அல்லவா?

மனித உரிமை என்பது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்கிற உரிமை. அதை நீங்கள விட்டுக்கொடுத்தல் பிறகு அடிமாகத்தான் இருக்க வேண்டும். எனவே மனித உரிமைகள் என்பது நம்முடன் பிறக்கும் அந்த உரிமைகள் எதற்காக? எதற்காக அதை வைத்துக்கொள்ளவேண்டும். மனிதன் தன்னுடையை முழு வளர்ச்சியைப் பெறுவதற்கு. தன்னுடைய சக்தியை முழுமையாக வளர்த்துக்கொள்வதற்கு. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு. மனிதன் தெய்வ நிலையை அடைவதற்கு. இந்த உரிமைகள் வழிவகுக்கின்றன. அடிமையாக இருக்கிறவன் அறிஞனாக முடியாது. அடிமையாக இருக்கிறவன் அன்போடு இருக்க முடியாது. அடிமையாக இருக்கின்றவன் நல்லது செய்ய முடியாது. அடிமையாக இருக்கிறவன் மகிழ்ச்சியாக வாழ முடியாது. மனித மேன்மைகள அடிமை பெற முடியாது. சுதந்திரமாக இருக்கிறவன் பெரிய விஷயங்கள செய்ய முடியும். ஆனால் நாம் எப்படி இருக்கிறோம். நாம் பொன்னுக்கும் பொருளுக்கும் அற்ப சுகங்களுக்காக நம்முடைய உரிமையை விட்டுக்கொடுக்கிறோம். நம்முடைய ஆன்மாவை விற்றுக்கொடுக்கிறோம். பாரதியார் சொன்னார் இந்தியா சுதந்திரத்துக்காக மாடு மனை சுற்றம் அத்தனையும் தம்முடைய ஆன்மாவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்துவிட சித்தமாக இருங்கள் எனறு. அந்தக் காலத்து சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள். ஆன்மாவை இழக்கவில்லை. ஜெயகாந்தன் சொன்னர் ஒரு கூட்டத்தில் விவேகானந்தர், திலகர், மகாத்மா போன்றவர்கள் அடிமை நாட்டிலே வாழ்ந்த சுதந்திர புருஷர்கள்; நாமெல்லாம் சுதந்திர நாட்டில் வாழ்கிற அடிமைகள் என்று சொன்னார். அடிமை நாட்டிலே வாழ்ந்தவர்கள் சுதந்திரமான சிந்தனையோடு இருந்தார்கள். நாம் இன்றைக்கு ஜனநாயகம் என்ற பெயரில் நம்முடைய உரிமைகளயும் இன்பங்களயும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அடிமைகளாக இருக்கிறோம். நாம் சுதந்திரமாக இருந்தால்தான் நம்மால் சாதிக்க முடியும்.

மனிதன் ஒவ்வொருவனும் உரிமையோடு இருப்பது இன்னொரு வகையிலும் இருக்கிறது. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். எல்லா பொருளிலும் எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன் என்றார் கண்ண பெருமான் என்று பாரதி சொன்னார். மகாத்மா சொன்னார் மனிதன் அத்தனை பேரும் இறைவனின் வடிவங்கள். ஒரு இறைவனின் வடிவம் மற்றொரு இறைவனின் வடிவத்துக்கு அடிமையாக இருக்க முடியுமா? இறைவன் என்று சொன்னாலே சுதந்திரம். இறைவன் என்றாலே கட்டுப்பாடற்றவன் என்பது பொருள். தானே சுதந்திரமாக இயங்குபவர்தான் இறைவன். நாம் சுதந்திரமாக இயங்கவேண்டும். அப்படியே ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக இயங்க நாம் வழிவகுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நம்முடைய உரிமையைப் பற்றிய அக்கரையும் கவலையும் நமக்கு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு மற்றவர்கள் உரிமையைப் பற்றிய கவலை நமக்கு இருக்கவேண்டும்.

உரிமைகளப் பற்றி அதிகமாக பேசுகிற நாம், கடமைகளப் பற்றி பேசுவதே இல்லை. எத்தனைத் தொழிற்சங்கங்கள்! எந்த சங்கத்தைப் பார்த்தாலும் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் அவர்களுக்கு கடமை என்ன? சமூகத்திலே அவர்கள் செய்ய வேண்டிய செயல் என்ன? யாராவது பேசுகிறோமா? மருத்துவர்கள் கூடி எனக்கு சம்பளம் வரவில்லை என்றால் ஊசி போட மாட்டேன் என்கிறார்கள். ஆசிரியர்கள் கூடி எனக்கு பணம் வரவில்லை என்றால் நான் பாடம் நடத்த மாட்டேன். வழக்கறிஞர்கள் நான் கோர்ட்டுக்கு போகமாட்டேன். அதனாலே மகாத்மா சொன்னார். பைபிளில் சொன்னது மாதிரி, உரிமையின் மறுபக்கம் கடமை. நான் உரிமையை கேட்பேன் கடமையைச் செய்யமாட்டேன் என்று சொன்னால் அந்த உரிமை போலியான உரிமை. அது நிற்காது. கடமையைச் செய்துகொண்டே இருந்தால் உரிமையை விட்டுக்கொடுக்க தேவை வராது. நீங்கள் உங்கள் கடமையைச் சரியாகச் செய்தால் உங்கள யார் கேள்வி கேட்க முடியும்? எனவே கடமையைச் செய்ய வேண்டும். உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது. இந்த இரண்டும் சேர்ந்ததுதான். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். கடமையை நினைக்காமல் வெறும் உரிமையைப் பற்றிப் பேசுவது, சமூகத்தில் அழிவை உருவாக்கும். உரிமையைப் பற்றி உரத்தக் குரலில் பேசும்போதுதான் பலபேருடைய உரிமை பரிபோனதுகூட தெரியாமல் இருக்கிறார்கள்.

எவன் உரிமைக்கு குரல் கொடுக்கிறோம் என்று உரத்தக் குரலில் பேசுகிறானோ அவனுக்கு அத்தனை பேரும் அடிமையாகப் போகிறார்கள். ஒரு தலைவர் வருகிறான். உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்த உடனே அவனிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள். உங்களுக்காக இன்னொருவன் எப்படி சிந்திக்க முடியும்? உங்களுடைய கடமையை எப்படி இன்னொருவன் செய்ய முடியும்? எனவே உரிமையும் கடமையும் சேர்ந்தே போகவேண்டும். அந்த உரிமையைப் பற்றிப் பிரக்ஙை வாயாலே பேசுவதிலே இல்லை. உங்களுடைய சிந்தையிலே இருக்க வேண்டும். அந்த உரிமை உங்கள் உள்ளத்துக்குள்ள இருந்தால் நீங்கள் அடிமை இல்லை. யாரையும் எவனும் அவனுடைய விருப்பத்திற்கு விரோதமாக அடிமையாக்க முடியாது. என் கையைக் காட்டலாம். விலங்கு போடலாம். சிறையிலே அடைக்கலாம். ஆனால் என் ஆன்மாவை அடிமைப்படுத்த முடியாது. நான் சுதந்திரமாக இருப்பேன். என்றைக்கு இந்த ஆன்மா சுதந்திரமாக இருக்கிறதோ அன்று வரையிலே நான் முழுமையானவன். நான் பேச முடியாமல் இருக்கலாம், எழுத முடியாமல் இருக்கலாம். ஆனால் சுதந்திரமானவன். பேச முடிகிறது, எழுத முடிகிறது, நடக்க முடிகிறது, ஓட முடிகிறது ஆனால் புத்தி அடமானமிருந்தால் நீங்கள் அடிமை. அடிமைத்தனம் என்பது வெளிப்புறத்திலே இல்லை அது உள்ளத்திலே இருக்கிறது. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த சிட்டுக் குருவியைப் போலே என்று பாரதியார் பாடினாரே அப்படி விடுதலை பெற்ற ஆன்மாவாக நீங்கள் இருந்தால் நீங்கள் அடிமை இல்லை.

சார்லஸ் மன்னனைக் கொன்றுவிட்டார்கள். மனிதனுடைய உரிமைக்காக போராட்டம் நடந்தது. ஜான் மில்டன் அதற்கு எழுதினார். க்ராம்வெல் ஆட்சி நடந்தது. மறுபடியும் மன்னர் ஆட்சி வந்தது. அதற்கு பெயர் சொன்னார்கள் ஏனென்றால் மனித சுதந்திரம் என்பது மனிதனோடு பிறந்தது. அதற்காகப் போராடினார்கள். எவனெல்லாம் மன்னராட்சியை எதிர்த்துப் போராடினானோ மன்னனைக் கொல்வதற்கு எவன் வாரண்டில் கையெழுத்துப் போட்டானோ அவர்கள் மீது விசாரணை நடந்தது. அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். பல பேர் பயந்து ஓடிவிட்டார்கள். அதிலே ஒரு போர் வீரன், அடுத்த நிமிஷம் அவன் தலை வெட்டப்போகிறார்கள். அல்லது தூக்கிலே போடப்போகிறார்கள். அப்படிப் போய்க்கொண்டிருக்கிறான், தூக்கு மேடைக்கு. கூட்டத்தில் இருக்கிறவன் கேட்டான், Hei, Where is your good old cause என்று கேட்டான். உன்னுடைய பெரிய தத்துவம் என்ன ஆச்சு என்று கேட்டான். அவன் பதில் சொன்னான். It is here in my buso. I will seal it with my blood என்று சொன்னான். அது என்னுடைய உள்ளத்துக்குள்ள இருக்கிறது. அதை என்னுடைய இரத்தத்தால் உறுதி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செத்துப்போய்விட்டான். இது சுதந்திரம். அடுத்த நிமிடம் சாகப்போகிறவன் நான் சுதந்திரத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதனால் சாவேன் என்று போகிறானே அந்த உறுதியும் அந்த சுதந்திர உள்ளமும் இருந்தால் நீங்கள் உரிமை உடையவர்கள். அதை நாம் ஒன்றும் படிக்க முடியாது. இறைவனால் தரப்பட்டது. யாரும் படிக்க முடியாது. அதனால்தான் அப்பர் பாடினார் நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்படோம். அவர் ஒரு ஞானி. மகேந்திரப் பல்லவன் என்கிற ஜனநாயக ஆட்சி இல்லை. மன்னர் ஆட்சியிலே அப்பர் பாடினார் நாமார்க்கும் குடியல்லோம். நான் உனக்கு குடியில்லை. என்று சொல்கிற மனவலிமை உள்ள உறுதி உண்மையான அறிவால் வருகிறது. அந்த உள்ள உறுதி, துணிவு உங்களுக்கு வந்துவிட்டால் பிறகு அன்பு தானே வரும். பிறகு சமூகத்தை எது இணைக்கும்? சட்டமா உங்கள இணைத்து வைக்கிறது? வெறும் சட்டம் மக்களக் காப்பாற்றி விடாது. ஏதாவது தவறுதல் நடந்தால் சட்டம் சரிபண்ணும். ஒரு மக்கள் சமுகமே தரிகெட்டுப்போனால்! ஊரில் எவ்வளவு போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது? ஒரு ஸ்டேஷனில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அங்கு இருக்கிற மக்கள் எவ்வளவு பேர்? யாராவது இரண்டு பேர் தப்பு பண்ணினால் போலீஸ்காரர் பிடிக்கலாம். மக்கள் முழுவதும் தவறு செய்தால், குழப்பம் வந்தால் ஒருவராலும் காப்பாற்ற முடியாது.

ஆக, எது உங்கள இணைத்து வைக்கிறது? இவ்வளவு உரிமைகளயும் நாம் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்றால், நாம் அன்பால் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்கவேண்டும். அதுதான் Universal declaration of rights-ல் அவர்கள் சொல்கிறார்கள். மறுபடியும் படிக்கிறேன். It is here in my buso. I will seal it with my blood என்பது அன்பு. சகோதரத்துவம் என்கிற அந்த அன்பு பினணப்புதான் மக்கள இணைக்கவேண்டும். வெறும் துப்பாக்கி, குண்டு, அரசு அதிகாரம், ஆள்பலம் என்பது அல்ல. சமூகத்தை மக்கள அன்பு சகோதரத்தும் இணைத்தால் உலகத்திலே அமைதி நிலவும். உலகத்திலே அமைதி நிலவினால்தான் மனிதர்கள் சுகமாக வாழ முடியும். எனவே மனித வாழ்க்கையினுடைய உன்னதமென்பது மனித உரிமைகளில் அடங்கி இருக்கிறது. அந்த உரிமைகள் நாம் காப்பாற்றிக் கொள்வதிலே அடங்கியிருக்கிறது என்பதை மட்டும் சொல்லி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.

சட்டப்படி இதற்கு என்னென்ன இருக்கிறது கோர்ட் இருக்கிறது என்பது பற்றி நிறைய இருக்கிறது, அதை சொல்வதற்கு இன்னொரு முறை வரவேண்டும். மனித உரிமைகள் பற்றிய ஷ்ழிவை மட்டும் சொன்னேன். உங்களுக்கு ஏதாவது கேட்கவேண்டும் என்று தோன்றினால் கேட்கலாம். அதற்கு உங்கள் முதல்வர் அனுமதி கொடுத்தால் கேட்கலாம் எது வேண்டுமானாலும் கேளுங்கள்.

கேள்வி : இலங்கையிலே இருக்கிற மனித உரிமை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : சொல்கிறேன். இலங்கையிலே இருக்கிற தமிழர்கள் என்பவர்கள், பூர்வீகமாக அந்த நாட்டிலே வாழ்கிற ஒரு இனம். சிங்களவர்கள் அவர்கள் சொல்கிற வரலாறுபடி ஒரிசாவிலிருந்து அங்கு சேர்ந்து ஸ்ரீவிஜயன் எங்களுடைய வழித்தோன்றல்கள்தான் சிங்களர்கள். இதை நான் சொல்லவில்லை. Ceylon------- என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பாலி மொழியில் மகாவாம்சம் என்கிற ஒரு வரலாற்று நூல் எழுதப்பட்டிருக்கிறது. மகாராமா என்கிற தேரா ஒரு புத்த பிக்கு, கி.பி. நான்காம் நூற்றாண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் எழுதி முடித்த ஒரு வரலாற்று நூல். அது சொல்கிறது, ஸ்ரீவிஜயன் என்பவன் ஒரிசாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு அவனுடைய தந்தையார், அவன் ஒரு காலிப்பயல் என்று சொல்லி அவனை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நாடுகடத்தி அனுப்பப்பட்டு அவன் இலங்கையின் தென் கரைப்பகுதியிலே போய் கரையேறினார்கள். அவனுடைய வழித்தோன்றல்கள் தான் இன்றைக்கு சிங்கள மக்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அது மகாவம்சம். மிகச் சிறந்த வம்சன் என்று அவன் பண்ணிக் கொள்கிறான். புத்த மதத்தைப் பரப்புவதற்காக ஸ்ரீவிஜயன் அங்கு அனுப்பப்பட்டான் என்று அவர்கள் நம்பிக்கை. அந்த ஸ்ரீவிஜயனுக்கு பெண் கொடுத்தவர் மதுரையை ஆண்ட பாண்டியன் என்ற தமிழ் மன்னன். அவன் தன் பெண்ணை மட்டும் கொடுக்கவில்லை; மதுரையில் இருக்கிற தமிழ் மக்கள் பலர் தம்முடைய பெண்ணையும் கொடுத்து பாண்டிய மன்னன் ஆயிரக்கணக்கான கைவினைஞர்கள அனுப்பி நகரங்கள உருவாக்கினான். அதனால் ஸ்ரீவிஜயன் சாகிறவரையில் மதுரை பாண்டியனுக்கு கடலிலே விளகிற பெரிய முத்தை அனுப்பி வந்தான். இது அவன் வரலாறு. அதைப்போலவே யாழ்பாணத்தின் வடபகுதியிலே வாழ்கிற மக்கள் பூர்வீகமான தமிழ் மக்கள். அவர்களுக்கென்று மொழி இருக்கிறது. அவர்களுக்கென்று நாகரிகம் இருக்கிறது. அவர்களுக்கென்று சமயம் இருக்கிறது. இன்றைக்குத் தமிழர்கள் என்று சொல்கிறவர்கள், ஒன்று சைவர்கள் இன்னொன்று கிருஸ்தவர்கள். ஆனால் இனத்தாலே தமிழர்கள். அந்த தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். இது இந்த Universal declaratioon of human rights இருக்கிறதே ஒவ்வொரு மக்களும் தம்முடைய மொழியை இனத்தை கலாச்சாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள உரிமை படைத்தவர்கள். ஒவ்வொரு அரசாங்கமும் அந்தப் பாதுகாப்பைக் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறது. அதை இலங்கை அரசாங்கம் மீறுகிறது. எனவே உலக மக்கள் அனைவரும் அதை தடுத்து நிறுத்த உரிமை உடையவர்கள் கடமைப் பட்டவர்கள்.

(தஞ்சாவூர், பாரத் கல்வியியல் கல்லூரியில்
மாணவர்களிடையே ஆற்றிய உரை)