அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: தி.மு.க. :::

26.09.2009 அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்
தி.மு.க. முப்பெரும் விழா - காஞ்சிபுரம்

26.09.2009 அன்று காலை முதல் மாலை வரை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க.முப்பெரும் விழா அறிஞர் அண்ணா நகர், நசரத் பேட்டை காஞ்சிபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் விழா நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு அண்ணா கவியரங்கம் நடைபெற்றது. இதில் காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, கவிஞர் விவேகா, கவிஞர் யுகபாரதி ஆகியோர் கவிதை வாசித்தனர்.
மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா விருதுகள் விழாத் தலைவர் பேராசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது. அண்ணா விருது டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், பெரியார் விருது திரு.கி.வீரமணி அவர்களுக்கும், கலைஞர் விருது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
காஞ்சிபுரம் நூழைவாயிலில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அண்ணா உருவம் பொறித்த நாணயத்தின் வடிவம் செதுக்கப்பட்டு வைக்கப்பட்ட நிணைவுத் தூண் ஒன்றை டாக்டர் கலைஞர் திறந்து வைத்தார்.

தி.மு.க.இலக்கிய அணி சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா
தி.மு.க.இலக்கிய அணி சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா நடைபெற்றது. காலையில் நாதசுரஇசை நிகழ்சியும், அதனைத் தொடர்ந்து பட்டிமன்றமும் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் தலைப்பு கலைஞரிடம் இருப்பது அண்ணாவின் கனிவா, பெரியாரின் துணிவா. இதில் நடுவராக அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களும் இரு அணிகளில் அமைச்சர் திரு. அ.ராசா, அமைச்சர் திரு.பொன்முடி, திரு.வெற்றிகொண்டான், தஞ்சை கூத்தரசன், அமைச்சர் திரு. ஏ.வ.வேலு ஆகியோர் உரையாற்றினர்.


செப்டம்பர் 21, 2008 - தி.மு.க. - திருச்சி
தி.மு.க சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 21 அன்று முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. அன்று அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாகத் தொடங்கப்பட்டது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.