அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
அண்ணா தமிழ்க் கழகம் – காரைக்குடி :::

டிசம்பர் 6,7 2008 அண்ணா தமிழ்க் கழகம் – காரைக்குடி

அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழா, 35-ஆம் ஆண்டு அண்ணா விழா 2008 டிசம்பர் 6, 7 ஆகிய நாட்களில் காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் அண்ணா தமிழ்க் கழகத்தார் சிறப்பாக நடத்தினர்.
டிசம்பர் 6 அன்று மாலை அறிஞர் அண்ணா அவர்களின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணமாய் அமைந்திருப்பது அவர் ஒரு போராளி என்பதாலே! அவர் ஒரு படைப்பாளி என்பதாலே! என்ற தலைப்பில் திரு.அ.இரகுமான்கான், முன்னால் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி என்.செல்வேந்திரன், திருமதி. பாரதி பாபு, கம்பம் பெ.செல்வேந்திரன், பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்குபெற்றனர். டிசம்பர் 7 அன்று மாலை மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் அமைச்சர் கே.வேங்கடபதி, திருச்சி சிவா மற்றம் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உரையாற்றினர். கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.