அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
மலேசியாவில் :::

மலேசியாவில் அண்ணா நூற்றாண்டு விழா

மலேசிய திராவிடர் கழகம் சார்பில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா 21.09.2008 ஞாயிறு அன்று காலை 10.00 மணியளவில் கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் என்ற இடத்தில் உள்ள டான் சிறி டத்தோ கே.ஆர்.சோமா அரங்கத்தில் நடைபெற்றது. டான் சிறி டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். கொள்கைச்சுடர் ரெ.சு.முத்தையா அவர்கள் தலைமையுரையாற்றினார். இரா.திருமாவளவன் அவர்கள் சிந்தனையுரையாற்றினார். தமிழ்நாடு திராவிடர் கழகத்தைச் சார்ந்த அருள்மொழி அவர்கள் இனமான பேருரையாற்றினார்.
விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம், அண்ணாவின் நாடகம், கலைநிகழ்ச்சி மற்றும் இலக்கிய உரைகள் சிறப்பாக நடைபெற்றன. விழா ஏற்பாட்டில் மு.க.மணியம், அன்பு இதயன், நாக பஞ்சு ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர்.

மலேசிய விவசாயிகள் சங்கம்
மலேசியாவில் உள்ள சபா என்ற இடத்தில் விவசாயிகள் சங்கத்தில் அண்ணா நூற்றாண்டு விழா நடைபெற்றது சிறப்புக்குறியது.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.