அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: தஞ்சை :::

நாவலர் ந.மு.வேங்கரசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞர் அறக்கட்டளைப் பேச்சுப் போட்டியை தஞ்சை நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நடத்தியது. 24.09.2009 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர், முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள் தலைமையேற்றார். வழக்கறிஞர் திரு. ச.சு. இராசுகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். திருச்சி வழக்கறிஞர் திரு.எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் தான் எழுதிய 'நான் கண்ட அண்ணா' என்னும் நூலை அறிமுகப்படுத்திக் கருத்துரை வழங்கினார்.
தஞ்சை வழக்குரைஞர் திரு.வீ.சு.இராமலிங்கம் அவர்கள் 'பேரறிஞர் அண்ணாவின் தமிழ்ப் பெருந்தொண்டு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
நடுவண் அரசின் நிதித்துறை இணையமைச்சர் மாண்புமிகு ச.சு.பழனிமாணிக்கம் அவர்கள் நிறைவுரையாற்று பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
தொடக்கத்தில் அனைவரையும், கலைஞர் அறக்கட்டளைத் தலைவர், முனைவர் பி.விருத்தாசலம் அவர்கள் வரவேற்றார்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.