அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
மானுட மறுமலர்ச்சிப் பாசறை :::

17.04.2009 மானுட மறுமலர்ச்சிப் பாசறை
சென்னை பெரம்பூரில் இயங்கிவரும் மானுட மறுமலர்ச்சிப் பாசறை என்ற அமைப்பின் சார்பில் 17.04.2009 அன்று நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவும் தமிழர்கள் எழுச்சியும் என்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் அண்ணா ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் உரையாற்றினார். விழா பெரம்பூர் எம்.பால் தலைமையில், க.கந்தன், கோ.பன்னீர் செல்வம் அகியோர் முன்னிலையில் நடைபற்றது. ச.ராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார். எழுத்தாளர் ஓவியா, பாசறையின் அமைப்பாளர் மு.பாலன் ஆகியோர் உரையாற்றினார்கள். பேராசிரியர் சுப.வீ. அவர்கள் பேசும்போது, அண்ணாவின் அரசியலுக்கும் பெரியாரின் அரசியலுக்கும் உள்ள நுணுக்கமான வேறுபாடு ஒன்று உள்ளது. அண்ணாவின் அரசியல் தமிழ் சார்ந்த அரசியல். அதன் மூலம் தமிழர்கள் மத்தியில் பெருத்த எழுச்சியை ஏற்படுத்தினார் என்று தெரிவித்தார். நிறைவாக ஜி.பத்மநாபன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.