அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
தமிழ்ப் பல்கலைக் கழகம் :::

தமிழ்ப் பல்கலைக்கழகம் - அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தஞ்சாவூர்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தின் அயல்நாட்டுத தமிழ்க் கல்வித்துறை 24.08.2009 அன்று அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடியது.
விழாவின் தொடக்கத்தில் 'இசை'யில் அண்ணாவின் சிந்தனைகளை மையமாகக் கொண்ட பாடல்களை திருவாரூர் இசைச்சித்தன் மற்றும் முனியாண்டி ஆகியோர் வழங்கினர்.
'திரை'யில் கோவி.லெனின் இயக்கிய அண்ணா பெருங்கடலின் சில துளிகள் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
'உரை'யில் முனைவர் ஆ.கார்த்திகேயன் அறிமுகவுரையாற்றினார். துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். 'அண்ணாவின் உலகப்பார்வை' என்ற தலைப்பில் திரு.மு.சீ.வெங்கடாசலம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் - ஓலைச்சுவடித்துறை, தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகம் - ஓலைச்சுவடித்துறை, தஞ்சாவூர் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் திரு.சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடத்தியது. 11.08.2009 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் தலைமையில், 'பேரறிஞர் அண்ணாவின் பேச்சும் பதிவுகளும்' என்ற தலைப்பில் திரு.வீ.சு.இராமலிங்கம் அவர்கள் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றினார்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் - கட்டடக்கலைத் துறை, தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகம் - கட்டடக்கலைத் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் 'திராவிடக் கட்டடக்கலை மரபு' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. துணைவேந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடக் கட்டடக்கலை மரவூம் தொழில் நுட்ப அறிவியலும்' என்ற தலைப்பில் பத்மபூஷன் முனைவர் வை.கணபதி ஸ்தபதி அவர்கர் சிறப்புரை வழங்கினார். 'மெக்சிகோ மாயன் நாகரிகத்தில் திராவிடக் கட்டடக்கலை மரபு என்ற தலைப்பில் முனைவர் எஸ்.பத்மநாபன் அவர்கள் கள ஆய்வுரை வழங்கினார்.


11.08.2009 தமிழ்ப் பல்கலைக்கழகம் - ஓலைச்சுவடித்துறை, தஞ்சாவூர்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித்துறை சார்பில் 11.08.2009 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு தஞ்சாவூர் திரு.சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்புச் சொற்பொழிவாக, தஞ்சை வழக்கறிஞரும், தஞ்சாவூர் அண்ணா பேரவைத் தலைவருமான திரு. வீ.சு.இராமலிங்கம் அவர்கள் 'பேரறிஞர் அண்ணாவின் பேச்சும் பதிவுகளும்' என்ற தலைப்பில் சுமார் ஒன்றேமுக்கால் மணிநேரம் சிறப்பானதொரு உரையாற்றினார். துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்கள் தலைமையேற்றார். மாண்புமிகு வணிகவரித்துறை அமைச்சர் திரு.சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

செப்டம்பர் 15, 2008 - தமிழ்ப் பல்கலைக் கழகம் - அண்ணாவின் செவ்வாழை நாடகம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் அண்ணா நூற்றாண்டுவிழாவை அண்ணா பிறந்த நாளன்று தொடங்கியது. கருத்தரங்கம், கவியரங்கம் நடத்தப்பட்டது. இறுதியாக அண்ணாவின் செவ்வாழை என்ற சிறுகதை நாடகமாக சிறப்பாக நடத்தப்பட்டது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.