அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
வேலூர் தமிழ்ச் சங்கம் :::

02.11.2008 - வேலூர் தமிழ்ச் சங்கம்

வேலூர் தமிழ்ச்சங்கம் அண்ணா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. 02.11.2008 காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை வேலூர் அண்ணா கலை அரங்கில் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது.

காலை 10.00 மணிக்கு நடைபெற்ற தொடக்கவிழாவை வேலுர் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், வி.ஐ.டி.யின் வேந்தருமான திரு.கோ.விசுவநாதன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். தொடக்கவுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.செழியன் வழங்கினார். பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்புரையாற்றினார். மேயர் ப.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

மாலை 4.00 மணியளவில் சங்கத்தின் பொருளாளர் புலவர் வே.பதுமனார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கழிஞ்சூர் மு.கோதண்டம் அவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது.

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவை சங்கத்தின் செயலாளர் திரு.தெ.சமரசம் அவர்கள் வரவேற்றார். வி.ஐ.டி. இணைவேந்தர் திரு.ஜி.வி.செல்வம் தலைமையுரையாற்றினார்.

திரு.தோப்பூர் திருவேங்கடம் அவர்கள் முன்னிலையில் இலட்சிய நடிகர் திரு. எஸ்.எஸ்.ஆர் அவர்கள் 1962 ஆம் ஆண்டு விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டு அறிஞர் அண்ணாவுடன் சிறையிலிருக்கும் பேறு பெற்றமைக்காகப் பாராட்டும் விருதும் வழங்கி சிறப்புரையாற்றினார். திருச்சி. எம்.எஸ்.வெங்கடாசலம், திரு.ந.சுப்பிரமணி, திரு.மு.சுகுமார் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

நிகழ்ச்சிகளை திரு.மு.சுகுமார், பேராசிரியர் பொன்.செல்வக்குமார், கவிதாயினி உருக்குமணி பன்னீர் செல்வம் ஆகியோர் அழகாகத் தொகுத்து வழங்கினர்.

திருக்குறள் திரு.இராஜேந்திரன் நன்றியுரையாற்ற விழா சிறப்பாக நடந்தேறியது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.