அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் காக்கும் பெரும் கடமை

தையற்கலை சுந்தரம்,
1963-ம் ஆண்டு அண்ணாவுடன் இந்தி எதிர்ப்பில் சிறை சென்றவர்
(11.07.1981)


அறிஞர் அண்ணா அவர்களிடம் நீண்டகாலம் நெருக்கமாக பழகியவர்களுக்கும் அண்ணா அவர்களால் வளர்ந்து சிறப்பு மிக்க இடத்தில் அமர்ந்து இருந்தவர்களுக்கும், மற்றும் அண்ணா அவர்களிடம் உண்மையான பற்றும் பாசமும் கொண்டுள்ள தம்பிமார்களுக்கும் கீழே குறிப்பிட்டுள்ள அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் காக்கும் பெரும் கடமைகளை நிறைவேற்றி வைக்க வேண்டுமென கனிவுடன் வேண்டுகிறேன்.

» பேரறிஞர் அண்ணா ஆய்வுக் கூடம் ஒன்று நிறுவப் பெறவேண்டும். சிறப்பாக ஆய்வுக்கூடத்தின் சீரிய முயற்சியால் பின் வரும் ஆக்கப் பணிகள் நடைபெற வேண்டும்.

» அண்ணாவின் விரிவான வாழ்க்கை வரலாறு எழுதப்படவேண்டும். இந்த வரலாற்றை எவ்வளவு ஆதாரங்களுடனும், எவ்வளவு படங்களுடனும், விளக்கங்களுடனும் எழுத முடியுமோ, அவ்வளவு ஆதாரங்களுடனும், அவ்வளவு படங்களுடனும் அவ்வளவு விளக்கங்களுடனும் எழுதவேண்டும்.

» அண்ணா வானொலியில் பேசிய பேச்சுக்களும் பொது மேடையில் பேசிய பேச்சுக்களும் கிடைக்கக் கூடிய ஒலிப் பதிவுகளை வரிசைப்படுத்தி தொகுக்கும்படி செய்து பாதுகாக்கவேண்டும்.

» அண்ணா இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தொகுக்கவேண்டும். நாளிதழ்களில் அறிக்கை விட்டு நண்பர்களிடத்தும், நிலையங்களிடத்தும் இருக்கும் புகைப்படங்கள் பலவற்றையும் தொகுக்க வேண்டும். இந்தத் தொகுப்பை கால முறைப்படி வரையறை செய்து இந்திய, அரசு மகாத்மா காந்தி என்ற தலைபில் வெளியிட்டுள்ள பெரும் படத் தொகுப்பு ஒன்றை முன் மாதிரியாகக் கொண்டு அண்ணா படத் தொகுப்பு ஒன்று வெளியிடவேண்டும்.

» அண்ணா ஆய்வுக் கூடத்தில் அவர் படித்த நூல்களும், தாழ்களும், அண்ணாவைப் பற்றி பிறர் இகழ்ந்தும், புகழ்ந்தும் எழுதியனவையும், பேசியனவையும், அண்ணா பயன்படுத்தியப் பொருள்களும் தொகுக்கப்படவேண்டும். கி அண்ணா ஆய்வுக் கூடத்தில் அண்ணா இருக்கும் திரைப்படங்கள், அண்ணா கதை, உரையாடல் எழுதியத் திரைப்படங்கள் அவ்வப்போது காட்டப் பெறுவதற்காக தொகுக்கப்படவேண்டும்.

» சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்கி நினைவுச் சொற்பொழிவுகள் நிறுவப்பெற்றுள்ளதுபோல் அண்ணா நினைவுச் சொற்பொழிவுகள் நிறுவப்பெற்று ஆண்டுதோறும் அவர் பற்றியும், அவர் பற்றியனைப் பற்றியும் ஆய்வுரைகள் நிகழ ஏற்பாடு செய்யவேண்டும். கி பல்வேறு தலைப்புகளில் அண்ணாவின் எண்ணங்களை பாகுபடுத்தி அண்ணா கலைக் களஞ்சியம் ஒன்று வெளியிடப்பெறவேண்டும்.

» அண்ணா ஆய்வுக் கூடத்தில் அண்ணா பற்றிய விவரங்களைச் சேர்பதற்கென்றே ஒரு ஆய்வுக்குழு அமையவேண்டும். அதன் அறிவுரைக்கேற்ப மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற ஆய்வாளர்கள் சிலர் நியமனம் பெறவேண்டும். அவர்கள் தவமெனக் கருதி - தமிழகம் முழுவதும் சுற்றி தம் கடமைகளைச் செய்து புகழ்பெறவேண்டும்.



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai