செய்திகள்
செயல்பாடுகள்
வெளியீடுகள்
நடந்த
நிகழ்ச்சிகள்
நமது கடமை

அண்ணா பேரவை செய்திகள்

 

03.02.2007, அறிஞர் அண்ணாவின் 38வது நினைவுநாளையொட்டி, அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் டாக்டர். அண்ணா பரிமளம், திரு. மலர்வண்ணன், திருமதி. மலர்வண்ணன், திரு. சௌமியன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

மாலை 6.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அறிஞர் அண்ணாவின் 10 நாடகங்களிலிருந்து ஒவ்வொரு காட்சி நடித்துக் காட்டப்பட்டது. உலகத் தமிழர் பேரவை தலைவர் திரு.ஜனார்தனம் இதை நடத்தினார். அவரே சிவாஜியாக நடித்தார். காயிதேமில்லத் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும், அண்ணா காலத்தில் அண்ணாவுடன் நடித்தவர்களும் இதில் நடித்தார்கள். டாக்டர் அண்ணா பரிமளத் தலமையுரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் மானமிகு.கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அண்ணா நூற்றாண்டு விழா! அண்ணா பேரவையின் முடிவுகள்
அண்ணா நூற்றாண்டு தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அண்ணா பேரவை தீர்மானித்துள்ள விவரம் வருமாறு:

03.02.2007 அன்று அண்ணா இல்லத்தில் நடைபெற்ற அண்ணா பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை அண்ணா பேரவையின் சார்பில் திரைப்படமாக தயாரிப்பது, குறுந்தகட்டில் வெளியிடுவது, அதற்கான தொடக்க விழாவை, வருகிற செப்டம்பர் 15-ல் நடத்துவது.

2. அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், நீதி தேவன் மயக்கம் ஆகிய இரண்டு நாடகங்களையும் குறுந்தகட்டில் வெளியிடுவது.

3. அறிஞர் அண்ணாவின் கொள்கை விளக்கக் கட்டுரைகள், சிறு கதைகளை சிறு புத்தகங்களாக பெருமளவில் வெளியிட்டு அவை எல்லோரிடமும் போய் சேருகின்ற முயற்சியில் ஈடுபடுவது.

4. அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை, முழு நூலாக வெளியிடுவது, அறிர் அண்ணா களஞ்சியம் ஒரு நூலாகக் கொண்டு வருவது, அறிஞர் அண்ணாவின் ஒளிபிபடத் தொகுப்பு, இவற்றை அண்ணாவின் நூற்றாண்டு தொடங்குவதற்குள் (2008 செப்டம்பர்) வெளிக்கொணருவது.

5. அறிஞர் அண்ணாவின் எழுத்துகள், சொற்பொழிவுகள் முழுவதும் டிஜிட்டல் லைபரரி ஒன்று தயாரிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- டாக்டர் அண்ணா பரிமளம் - நன்றி: விடுதலை நாளிதழ்

காஞ்சீபுரம் மாவட்ட அண்ணா பேரவை
காஞ்சீபுரம் மாவட்ட அண்ணா பேரவையின் சார்பில் 22.02.2006 அன்று காஞ்சி பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் அறிஞர் அண்ணாவின் ஆங்கில நூல் அறிமுக விழாவும் திரு.எம்.எஸ்.வெங்கடாசலம், முனைவர் ம.நடராசன் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. அண்ணா பேரவையின் தலைவர் டாக்டர். அண்ணா பரிமளம் தலமையேற்றார். காஞ்சி மாவட்ட அண்ணா பேரவயின் அமைப்பாளர் திரு.தயாளன் வரவேற்புரை ஆற்றினார். அறிஞர் அண்ணாவின் ஆங்கில நூல்களை திரு.இராமநாதன மற்றும் சிலர் பெற்றுக்கொண்டனர். திரு.ஞானாலயா கிருட்டினமூர்த்தி, புதுகை, திரு.சதாசிவம், புதுகை. புலவர்.இளங்கோவன், காஞ்சி ஆகியோர் வாழ்த்துரை நல்க, முனைவர் நடராசன் ஏற்புரை ஆற்றினார். காஞ்சீபுரம் அண்ணா பேரவை அமைப்பாளர் திரு.வி.முனுசாமி நன்றியுரை கூறினார்.

அண்ணா பேரவைத் தொடக்க விழா
25.02.2006 அன்று புதுக்கோட்டை நகர மன்ற அரங்கில் மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை அண்ணா பேரவையின் தொடக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அமைப்பாளர். திரு.சோமசுந்தரம் எம்.ஏ. வரவேற்புரையாற்றினார். அண்ணாபேரவையின் தலைவர் டாக்டர்.அண்ணா பரிமளம் தலமையேற்று பேரவையைத் தொடங்கிவைத்தார். அண்ணா பேரவையின் பொதுச்செயலாளர் எம்.எஸ்.வெங்கடாசலம், எம்.ஏ.பி.எல்., அண்ணா பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் திரு.வீ.சு.இராமலிங்கம் பி.ஏ.பி.எல், புலவர் நாகூர், பேராசிரியர். அ.வெ.பெருமாள், வெ.இராமதாசு, கவிஞர் முத்துப்பாண்டியன், சண்முகப் பழநியப்பன், மு.முத்து சீனிவாசன், சீதா சானகிராமன், திரு.கோபாலகிருட்டினன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். புலவர்.சுப.தமிழ்ச்செல்வன் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.

அண்ணா பேரவை அண்ணா பேரவையின் 16-ம் ஆண்டு விழா, அண்ணாவின் ஒலி, ஒளி குறுந்தகடுகள் அறிமுகவிழாவும், 26.02.2006 ஞாயிறு மாலை 7 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆல்.இராதா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை திரு.இரா.செம்பியன் அண்ணா பேரவை சென்னை மாவட்ட அமைப்பாளர் வரவேற்றார். திரு.வேள் கதிரவன் அண்ணா பேரவை சென்னை மாவட்ட அமைபபாளர் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார். திராவிடர் கழகத் தலைவர் மானமிகு.கி.வீரமணி தலமையேற்றார். அண்ணா பேரவையின் தலைவர் டாக்டர்.அண்ணா பரிமளம் அறிமுக உரையாற்றினார். இலட்சிய நடிகர்.திரு.எஸ்.எஸ்.இராசேந்திரன் குறுந்தகடுகளை வெளியிட, புரட்சித் தமிழன் திரு.சத்யராஜ் அவர்கள் முதல் தொகுப்பை பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர். கி.வீரமணி, இயக்குநர் கார்வண்ணன், குமரன் மருத்துவமனை டாக்டர். பழநிச்சாமி, திரு.ஆற்காடு நாராயணன், தென்னகம் அறக்கட்டளை .திரு.இளங்குமரன், தமிழ்மண் பதிப்பகம் திரு.இளவழகன், தொழிற்சங்கத் தலைவர். திரு.இரத்தினசபாபதி, திரு.மு.கன்னியப்பன், ஆம்பூர் வரதராசன், திரு.இராசகோபால், திரு.சீனிவாசன் திரு.கா.சு.சீனிவாசன். திரு.கண்ணியம் குலோத்துங்கன், திரு.மூவேந்தர் முத்து, டாக்டர். உதயகுமார், திரு.இராசேந்திரன், திரு.சுந்தரபாண்டியன், திரு.சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இலட்சிய நடிகர் திரு.எஸ்.எஸ் இராசேந்திரன் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாஜ்யத்தை திரைப்படமாக எடுப்பேன் அதில் சகோதரர் திரு.சத்யராஜ் நடிப்பார் என்று அறிவித்தார். மேலும் அண்ணாவின் நூற்றாண்டு விழவில் என் பங்கு பாதிக்குமேல் இருக்கும் என அறிவித்தார். திராவிடர் கழகத் தலைவர். மானமிகு.கீ.வீரமணி அவர்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை கொள்கை விழாவாக கொண்டாடுவோம் என பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். குறள்சிற்பம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.வேள் கதிரவன், அண்ணா பேரவையில் இருந்து இந்த ஒலி, ஒளி குறுந்தகடுகயின் விற்பனை உரிமம் பெற்றிருப்பதாக அறிவித்தார். திரு.சந்திரசேகர் நன்றி நவில எழுச்சி விழா இனிதே நிறைவு பெற்றது.

விடுதலை செய்தி

அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்
அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகம் 27.02.2006 அன்று 7 மணி அளவில் நடைபெற்றது. நவபாரத் கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை அக்னி கலைக்குழு இந்த நாடகத்தை நடத்தியது. சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அண்ணா பேரவையின் தலைவர் டாக்டர். அண்ணா பரிமளம், வழக்கறிஞர் திரு.ச.செந்தில் நாதன். நாடக ஆசிரியர். பரளயன், திரு.முகம்.மாமணி ஆகியோர் பேசும்போது இது இன்றய காலகட்டத்துக்கு மிக மிகத் தேவை எனக் கூறி அக்னி கலைக்குழு நடிகர்களையும், நாடக ஆசிரியர் பிரளயன் அவர்களையும் இதை ஏற்பாடு செய்த திரு.பிரின்சு அவர்களையும் மனதார பாராட்டினர். அக்னி கலைக்குழுவைச் சேர்ந்த திரு.பகத்சிங் கண்ணன் திரு.குலேத்துங்கன், திரு.விக்டர்.ரவி, திரு.கண்ணன், திரு.குமார், திரு.பாண்டிதுரை, திரு.யுவபாரதி, திரு.எதுமலை தேவராஜ், திரு.பார்த்தசாரதி, திரு. ரவி, திரு. நாகராஜ், திரு.சீனிவசன், திரு.குடந்தை. நாதன், திரு. .தங்கம், திரு.சீனிவாசுலு, திரு.ரஜினி ஆகியோர் அருமையாக நடித்தனர். சிவாஜி, காகபட்டர், ரங்குபட்டர் ஆகிய வேடமேற்றோர் மிகச் சிறப்பாக நடித்தனர். நாடக ஆசிரியர் பிரளயன் இன்றய காலகட்டத்தின் தேவைக்கேற்ப சில மாற்றங்களை சிறப்பாகச் செய்திருந்தார். பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது. நாடகம் முடிந்ததும், அண்ணா அவர்கள் 61 ஆண்டுகளுக்கு முன் எழுதியது இன்றைக்கும் எப்படிப் பொருந்துகிறது, இது என்றைக்கும் தேவை என்ற எண்ணத்துடன் மக்கள் கலைந்து சென்றனர். நாடகம் முடிவுற்றதும் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் ஒப்பனை கூடத்திற்குச் சென்று எல்லா நடிகர்களை தனித்தனியாகச் சந்தித்து அண்ணா பேரவையின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

தமிழ் தேசம் வலைப்பின்னல்.

ஜப்பான் நாட்டில் வாழும் ளுயஉடி ளுச முயவோய தனது, ஹயேள டுநபயஉல மூலம் யார் அண்ணனுக்கு ஏற்ற தம்பியர் என அனைத்துலகுக்கும் அடையாளம் காட்டுகிறார். அண்ணாவின் கொள்கைளை தமிழ்நாட்டுத் தம்பியர் மறந்தாலும், இருக்கிறார். ஈழநாட்டு தம்பியர், இனமானம் காக்கவென்று நம்பிக்கை ஒளியை நம் நெஞ்சில் பாய்ச்சுகிறார்.

If Anna’s Dravidian Nationalism has to be counted as a failure, then the Gandhian, Roosweltian and Leninist, Stalinist ideals also have met the same fate in their places of origin. However Gandhian ideals were picked up by Martin Luter King Junior in America, and these led to advancement of civil rights for blacks in 1960’s. The liberal democratic ideals of Rooswelt got rooted (however imperfectly) and supplanted the existing tendalistic social arrangment in Japan. Even the Leninist, Stalinist ideals found roots in Cuba under the leadership of Fiedel Castro in 1950’s and is still njot surplanted, despite aggressive willing by Yankee capitalism, similarly through Anna’s ideology of ‘seperate state for Tamils’ became a lost cause in India, it did became a nallying cry for the younger generation of Elam Tamils in mid 1970’s

Thus Anna’s legacy lives in Elam.


. . . தமிழ் தேசம் வலைத் தொகுப்பு றறற.வயஅடையேவடி.டிசப என்ற முகவரியில் கூயஅடைள னுபைவையட சுநஎடிடரவடி உட்பிரிவல் முழுமையாக வெளியிட்டுள்ளது.

. . . தமிழ் தேசம் வலைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அறிஞர் அண்ணாவைப் பற்றிய இன்னொரு கட்டுரையை எழுதியவர் திரு.ஏ.பி.ஜனார்தனம் அவர்கள். ஐந்தாம் உலகத் தமிழ்நாட்டுக்கு 1981-ல் எழுதிய கட்டுரை இது.

. . . தமிழ் மின்னியல் நூலகம் என்ற வலைத்தளம் திரு.கா. கலியாணசுந்தரம் அவர்களால் நடத்தப் பெருகிறது. அதில் சி.என். அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கை வரலாறும், இலக்கியப் படைப்புகளும் என்ற வலைப்பக்கங்களில் இவை வெளியிட்டுள்ளது.

ஸபுதுச்சேரி பல்கலை கழகத்தின் சுப்பிரமணிய பாரதி தமிழ் பொழி இலக்கிய உயராய்வு நிறுவனம் நடத்திய தமிழக அரசு அமைத்த அறிஞர் அண்ணா அறக்கட்டளை சொற்பொழிவின் தலமையுரை 05.10.2000 அன்று திராவிடப் பேரவை பொதுச்செயலாளர் திரு. நந்திவர்மன் அவர்களால் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவின் ஒரு பகுதி இதன் ஆங்கில மொழியாக்கம் ஈழநாடு இணைய தளத்தில் உள்ளது. (02.02.2005 - மாலை பூமி - புதுச்சேரி - மாலை இதழ்)

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
பிரதமர், தென் மாநில முதல்வர்களுக்கு திராவிடப் பேரவை வேண்டுகோள்.

அறிஞர் அண்ணா நூற்றாண்டு 2008-ல் துவங்கி 2009-ல் நிறைவுபெறுகிறது. நூற்றாண்டு தொடங்கி 3 ஆண்டுகளே உள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் இன்னமும் எந்தத் திட்டமும் இல்லாமல் உள்ளனர்.

அறிஞர் அண்ணாவின் மகன் டாக்டர்.பரிமணம் நேற்று திராவிடப் பேரவைப் பொதுச் செயலாளர் திரு.நந்திவர்மனுக்கு ஒரு மடல் விடுத்திருந்தார். இதுபோன்ற மடல் அண்ணா மீது பற்றுடைய பல தலைவர்களுக்கு அனுப்பட்டது.

உடனே திராவிடப் பேரவை அறிஞர் அண்ணா நூற்றாண்டைச் சிறப்புறக் கொண்டாடுவது பற்றி திட்டமிட தேசிய அளவில் குழு ஒன்றை எற்படுத்துமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவசர கடிதம் ஆனுப்பியது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அனைத்துக் கட்சிகளும் கொண்ட நூற்றாண்டு விழாக் குழு ஏற்படுத்தக் கோரி மடல் அனுப்பட்டது. புதுவை கேரளா, கர்நாடகம் ஆந்திரம் ஆகிய தென் மாநில முதல்வர்களுக்கும் திராவிடப் பேரவைப் பொதுச் செயலாளர் நந்திவர்மன் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் பின் வருமாறு

¤ அண்ணா நூற்றாண்டு விழாக்குழுவில் தமிழக, புதுவை, கர்நாடக, கேரளா, ஆந்திரா முல்வர்கள் இடம்பெறவேண்டும்.

¤ மகாராஷ்டிர அரசு பாபாசாகேப் அம்பேத்கார் படைப்புகளை மலிவுப் பதிப்புகளாக்கியும் குறுந்தட்டுகளாக்கியும், இந்திய மொழிகள் அனைத்திலும் மத்ய அரச வெளியிடவேண்டும்.

¤ நேஷனல் மிஷின் அப் மேனஸ்கிரிப்ட் மூலம் அண்ணாவின் அனைத்து கையெழுத்துப் படிகளையும் ஒலிநாடகங்களையும் தேடித் தொகுக்கும் பணியில் மத்ய அரசு ஈடுபடவேண்டும்.

¤ தில்லியில் திராவிடர் கழகம் அமைத்துள்ள பெரியார் மய்யம் பெயரில் அரசுகள் சார்பில் அண்ணா மய்யம் அமைக்கப் பட்டு அண்ணாவின் கருத்துக்கள் வடமாநிலங்களிலும் பரப்பப்படவேண்டும்.

¤ புதுவையில் அறிஞர் அண்ணா அறக்கட்டளை அண்ணா அருங்காட்சியகம் அமைக்க அரசு நிலம் ஒதுக்கப்படவேண்டும்.

¤ உலகச் சிந்தனையாளரும், தத்துவஞானியும் எதிரிகளையும் இளக வைக்கும் ஈர நெஞ்சமிக்க மனித நேயரும் கண்ணியமிகு அரசியலை முன்னெடுத்துச் சென்ற மாபெரும் தலைவர் அண்ணாவுக்கு உரிய தேசிய கௌரவம் வழங்க மத்ய அரசை திராவிடப் பேரவை வற்புறுத்தியுள்ளது.

திராவிடப் பேரவை பொதுச் செயலாளர் திரு.நந்திவர்மன் - வேண்டுகோள்
புதுவை - மாலை பூமி - இதழ் - 05.02.2005


அண்ணா நூற்றாண்டு பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பாய்

அறிஞர் அண்ணாவை நான் நன்கு அறிவேன். எங்களுக்குள் பரஸ்பர பழக்கம் உண்டு. அவருடைய எளிமையும், ஏழைகளுக்கு பாடுபடும் அவர் குணமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் ஒரு சிறந்த தேசியவாதத்தையும் பொழிப்பற்றையும் காண முடிந்தது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அண்ணாவின் நூற்றாண்டு விழா வருகிறது. இந்த விழாவை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கொண்டாட வலியுறுத்துகிறேன்.
- தினத்தந்தி 19.09.2005.
அண்ணா பேரவை அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.


Mr. A.B.Vajpayee (Former Prime Minister of India) tribute to ANNA

He also recalled his association with the former Chief Minister of Tamil Nadu C.N.Annadurai and said he was a staunch nationalist and a champion to Tamil language and Dravidian ethos.

The birth centernary of Annadurai, falling in three years shold be celebrated not only in Tamil Nadu but also throughout the country.

- The Hindu, 18-09-2005

Anna Peravi Thanks Mr. A.B.Vajpayee (Former Prime Minister of India)

 

 

 

 

Website Designed by R.Sembian, Anna Peravai