செய்திகள்
செயல்பாடுகள்
வெளியீடுகள்
நடந்த
நிகழ்ச்சிகள்
நமது கடமை

அண்ணா பேரவையில் இதுவரை நடந்த நிகழ்ச்சிகள்
( டாக்டர். அண்ணா பரிமளம் )

 

அறிஞர் அண்ணாவின் 98-ம் ஆண்டு பிறந்த நாள் விழா
- அண்ணா இல்லம், சென்னை

அறிஞர் அண்ணாவின் 98-ம் ஆண்டு பிறந்த நாள் விழா 15.09.2006 அன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா இல்லத்தில், சரோசா அரங்கத்தில் நடைபெற்றது. அண்ணா பற்றாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள். அண்ணா இல்லத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலையிட்ட பிறகு அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. பிறகு விழா தொடங்கியது. சென்னை மாவட்ட அமைப்பளர்கள், திரு.செம்பியன், திரு.வேள் கதிரவன் ஆகியோர் முறையே வரவேற்புரையும் அறிமுகவுரையும் ஆற்றினார்கள்.

அண்ணா பேரவையின் தலைவர் டாக்டர். அண்ணா பரிமளம் தலைமையுரையாற்றினார். அறிஞர் அண்ணாவின் குறுந்தகடுகள் 15, புத்தகங்கள் 4 வெளியிடப்பட்டன. டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் வெளியிட, டாக்டர் இராம், புரவலர், அண்ணா பேரவை அமைப்பாளர், இலண்டன், திரு.ஆற்காடு நாராயணன், திரு.இரா.செழியன், புலவர்.அறிவுடைநம்பி, திரு.பட்டுக்கோட்டை குமாரவேல், கவிக்கொண்டல் செங்குட்டுவன், கவிஞர் மறைமலையான், முனைவர்.இரா.சேது, திரு.கண்ணியம் குலோத்துங்கன், திரு.வீ.சு.இராமலிங்கம் ஆகியோர் பெற்றுகொண்டனர்.
டாக்டர்.இராம், திரு.கண்ணியம் குலோத்துங்கன், திரு.வீ.சு.இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். திரு. மலர்வண்ணன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.

அறிஞர் அண்ணா 98-ம் பிறந்த நாள் விழா நூல்கள், குறுந்தகடுகள் அறிமுக விழா - காஞ்சிபுரம்

28.09.2006 காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் நகராட்சி விருந்தினர் மாளிகை அரங்கத்தில் காஞ்சிபுரம் அண்ணா பேரவையின் சார்பில் அறிஞர் அண்ணாவின் 98-ம் பிறந்தநாள் விழாவும், அறிஞர் அண்ணாவின் குறுந்தகடுகள், புத்தகங்கள் அறிமுக விழா நடைபெற்றது. தொடங்கதில் காஞ்சி துரை.மூவேந்தனின் வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. திரு.தயாளன் அவர்கள் அவவேற்புரையாற்றினார். டாக்டர்.அண்ணா பரிமளம் தலைமையேற்ற உரை நிகழ்த்தினார். குறுந்தகடுகளை தி.வே.காளத்தி, திரு.வெ.ச.துரையரசன், திரு. கோ.இராசேந்திரன், திரு.செயக்குமார் மற்றும் பலர் பெற்றுக் கொண்டு நிதியளித்தனர். திரு.கோ.தமிழ்வாணன், திரு.சானகிஇராமன், திரு.வெ.ச.துரையரசன், திரு.மா.பன்னீர் செல்வம், திரு.எம்.பி.நடராசன் ஆகியோர் வாழ்த்துரை நல்கினர்.

திரு.வ.முனுசாமி, அண்ணா பேரவையின் காஞ்சி நகரச் செயலாளர் பெறு முயற்சி எடுத்து இவ்விழாவை நடத்தினார். எம்.எஸ்.ஆர் மணி வந்தோர்க்கு மதிய உணவளித்தார். திரு.ஆறுமுகம் அவர்கள் அரங்கச் செலவை ஏற்றார்.
பிறகு திரு.முனுசாமி அவர்கள் நன்றி கூற விழா இனிது முடிவுற்றது

¤ 28.09.2006 காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் நகராட்சி விருந்தினர் மாளிகை அரங்கத்தில் காஞ்சிபுரம் அண்ணா பேரவையின் சார்பில் அறிஞர் அண்ணாவின் 98-ம் பிறந்தநாள் விழாவும், அறிஞர் அண்ணாவின் குறுந்தகடுகள், புத்தகங்கள் அறிமுக விழா நடைபெற்றது. தொடங்கதில் காஞ்சி துரை.மூவேந்தனின் வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. திரு.தயாளன் அவர்கள் அவவேற்புரையாற்றினார். டாக்டர்.அண்ணா பரிமளம் தலைமையேற்ற உரை நிகழ்த்தினார். குறுந்தகடுகளை தி.வே.காளத்தி, திரு.வெ.ச.துரையரசன், திரு. கோ.இராசேந்திரன், திரு.செயக்குமார் மற்றும் பலர் பெற்றுக் கொண்டு நிதியளித்தனர். திரு.கோ.தமிழ்வாணன், திரு.சானகிஇராமன், திரு.வெ.ச.துரையரசன், திரு.மா.பன்னீர் செல்வம், திரு.எம்.பி.நடராசன் ஆகியோர் வாழ்த்துரை நல்கினர்.

திரு.வ.முனுசாமி, அண்ணா பேரவையின் காஞ்சி நகரச் செயலாளர் பெறு முயற்சி எடுத்து இவ்விழாவை நடத்தினார். எம்.எஸ்.ஆர் மணி வந்தோர்க்கு மதிய உணவளித்தார். திரு.ஆறுமுகம் அவர்கள் அரங்கச் செலவை ஏற்றார்.
பிறகு திரு.முனுசாமி அவர்கள் நன்றி கூற விழா இனிது முடிவுற்றது.

¤ அறிஞர் அண்ணாவின் 98-ம் ஆண்டு பிறந்த நாள் விழா 15.09.2006 அன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா இல்லத்தில், சரோசா அரங்கத்தில் நடைபெற்றது. அண்ணா பற்றாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள். அண்ணா இல்லத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலையிட்ட பிறகு அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. பிறகு விழா தொடங்கியது. சென்னை மாவட்ட அமைப்பளர்கள், திரு.செம்பியன், திரு.வேள் கதிரவன் ஆகியோர் முறையே வரவேற்புரையும் அறிமுகவுரையும் ஆற்றினார்கள்.

அண்ணா பேரவையின் தலைவர் டாக்டர். அண்ணா பரிமளம் தலைமையுரையாற்றினார். அறிஞர் அண்ணாவின் குறுந்தகடுகள் 15, புத்தகங்கள் 4 வெளியிடப்பட்டன. டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் வெளியிட, டாக்டர் இராம், புரவலர், அண்ணா பேரவை அமைப்பாளர், இலண்டன், திரு.ஆற்காடு நாராயணன், திரு.இரா.செழியன், புலவர்.அறிவுடைநம்பி, திரு.பட்டுக்கோட்டை குமாரவேல், கவிக்கொண்டல் செங்குட்டுவன், கவிஞர் மறைமலையான், முனைவர்.இரா.சேது, திரு.கண்ணியம் குலோத்துங்கன், திரு.வீ.சு.இராமலிங்கம் ஆகியோர் பெற்றுகொண்டனர்.
டாக்டர்.இராம், திரு.கண்ணியம் குலோத்துங்கன், திரு.வீ.சு.இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். திரு. மலர்வண்ணன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.

¤ தஞ்சை அண்ணா பேரவை
அறிஞர் அண்ணாவின் ஆங்கில நூல்கள் அறிமுக விழாவும், அதைத் தொகுத்த திருச்சிராப்பள்ளி வழக்குரைஞர் திரு. எம்.எஸ்.வெங்கடாசலம், அதை வெளியிட்ட புதிய பார்வை ஆசிரியர் டாக்டர்.ம.நடராசன் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் 24.12.2005 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்றது. அண்ணா பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தஞ்சை வழக்குரைஞர் திரு.வீ.சு.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரையாற்ற, அண்ணா பேரவையின் தலைவர் டாக்டர். அண்ணா பரிமளம் தலமையேற்றார். திரு.தி.ந.இராமசந்திரன், ஞானாலயா திரு.பா.கிருட்டினமூர்த்தி, திரு.க.சதாசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திரு.ம.நடராசன், அண்ணா பேரவையின் செயலாளர் திரு.எம்.எஸ்வெங்கடாசலம் ஆகியோர் ஏற்புரையாற்றினர். திரு.ந.பிரேமசாயி நன்றி கூறினார். விழாவில் அறிஞர் அண்ணாவின் ஒளிப்படத் தொகுப்பு (ஞாடிவடி ஊனு) வெளியிடப்பட்டது.

¤ பேரறிஞர் அண்ணா 97-ம் பிறந்தநாள் விழா, 15.09.2005, மேலூரில் திரு.ந.பெரியய்யா அவர்கள் முயற்சியால் மேலூர் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அண்ணா பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. மேலூரைச் சேர்ந்த பெருமக்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திரு.இளமாறன், திரு.செயராமன், திரு.முருகேசன், திரு.கருணைதாசன், திரு.சாமி, திரு.ஒஞ்சி.ஆறுமுகம், திரு.சின்னக்கண்ணு, திரு.சி.ஆசைத்தம்பி, திரு.சத்யமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ அண்ணா பேரவையின் சார்பில் மேலூரில், 23.05.2005 அன்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு தமிழ்ப் பெயர் பலகை வைக்கக்கோரியும், தமிழை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்யக்கோரியும் ஓர் பொதுக்கூட்டம் ந.பெரியய்யா தலமையில் நடைபெற்றது. திரு.கி.இமேந்திரன், திரு.இராமமனோகரன், திரு.மு.இளமாறன், திரு.கங்காதரன் ஆகிய வழக்குரைஞர்களும், திரு. கருணைதாசன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அண்ணா புத்தகங்கள் அண்ணாவின் சொற்பொழிவுகள் (சி.டி) குறுந்தகடு வெளியிடப்பட்டது. த் தஞ்சையில் 20.05.2005 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா வழக்குரைஞர்.வீ.சு.இராமலிங்கம் அவர்கள் தலமையில் நடைபெற்றது. டாக்டர்.அண்ணா பரிமளம், பேராசிரியர். கு.வெ.பாலசுப்பிரமணியம், டாக்டர் பழநிசாமி(சென்னை குமரன் மருத்துவ மனை) ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். அண்ணாவின் சொற்பொழிவுகள்-குறுந்தகடுகள்-சி.டி.- 5, புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

¤ அண்ணா பேரவையின் சார்பில் காஞ்சீபுரத்தில் அமைந்துள்ள அண்ணா குடிலில் பங்காரு இராசாமணி முதியோர் இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் 97-வது பிறந்தநாள் 15.09.2005 அன்று கொண்டாடப்பட்டது. காஞ்சியைச் சேர்ந்த திரு.ப.கந்தசாமி, திரு.முனுசாமி மற்றும் பலர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். திரு.ப.கந்தசாமி அவர்கள் ஏற்பாடு செய்து ஏழைகளுக்கு உணவு அளித்தார்.
த்06.03.2004-ல் காஞ்சீபுரத்ரில் பெரவையின் சார்பில் அண்ணா தந்த மறுமலர்ச்சி சொற்பொழிவுகளில் எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. திரு.முனுசாமி வரவேற்க, டாக்டர் அண்ணா பரிமளம் தலமையேற்று, அவர் தொகுத்த அந்தப் புத்தகத்தை அவரே வெளியிட காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பெருமக்கள் வாங்கினர். திருமதி.மணிமேகலை, திரு.வ.கந்தசாமி, கோ.அரங்கநாதன், திரு.குப்புசாமி, திரு.சானகி இராமன், திரு.வேணுகோபால், வழக்குரைஞர்.ஏழுமலை, திரு.சந்துரு, திரு.நாத்தீகம் நாகராசன், திரு.துரையரசன், திரு.சன்.இராசேந்திரன், திரு.சிங்கார(முதலியார்), ஆசிரியர் நடராசன், திரு.வீனஸ் உதயகுமார், திரு.சி.என்.ஏ.கௌதமன் ஆகியோர் உரையாற்றினர். த்15.09.2003-ல் தஞ்சையில் பேரவையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 95-ஆம் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர.வீ.சு.இராமலிங்கம், டாக்டர்.அண்ணா பரிமளம், தோப்பூர் திருவேங்கடம், முனைவர் இரா.சேது, திரு.திருச்சி.சௌந்தர்ரதசன், திரு.எஸ்.பால்ராஜ் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

¤ அண்ணா இலக்கியப் பேரவையின் காஞ்சீபுரம் மாவட்ட மாநாடு, அண்ணாவின் 92-ம் ஆண்டு பிறந்தநாள் விழா, நடிகமணி.டி.வி.நாராயணசாமிக்கு அண்ணா விருது வழங்கும் விழா ஆகியவை 20.09.2000-த்தில் காஞ்சீபுரத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. திரு.சி.வி.எம்.அண்ணாமலை அரங்கத்தில் திரு.முனுசாமி, டாக்டர் அண்ணா பரிமளம், திரு.சி.வி.எம்.ஏ.பொன்மொழி, திரு.அரங்கநாதன், திரு.வி.பன்னீர் செல்வம், திரு.ஆர்.சானகிராமன், திரு.வெ.ச.துரையரசன், திரு.சி.வி.எம்.ஏ.சேகர், கலைமாமணி, பட்டுக்கோட்டை குமாரவேல், கவிஞானி மறைமலையான், புலவர்.இளஞ்செழியன், முனைவர்.இரா.சேது ஆகியோர் கருத்தரங்கத்தில் பேசினர். திரு.வை.பழநிவேல், திருமதி.ஜமுனா ஆகியோர் கவியரங்கத்தில் கவிதை பாடினர். திரு.இராதாகிருட்டினன், திரு.பெரியய்யா, சங்கொலி.திருநாவுக்கரசு, திரு.சம்பந்தம் ஆகியோர் பேசினர். நடிகமணி டி.வி.நாராயணசாமிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. இறுதியாக நடிகமணி டி.வி.நாராயணசாமி சிறப்புரையாற்றினார். துரை மாசிலாமணி நன்றி கூறினார். த் அண்ணா இலக்கியப் பேரவையின் முதல் மாநில மாநாடு 05.03.200-த்தில் ஞாயிற்றுக் கிழமை தஞ்சை எஸ்.நடராசன் அரங்கம், தஞ்சை இராமநாதன் மன்றத்தில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற்றது.
காலை முதலில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பிறகு அண்ணா வரலாறு ஒளிப்படக் கண்காட்சி திறக்கப்பட்டது. பிறகு மங்கல இசையுடன் தெடங்கப்பட்டது. டாக்டர். அண்ணா பரிமளம், வழக்குரைஞர்.வீ.சு.இராமலிங்கம், திருக்குறள்.ந.சண்முகநார், திருமிகு.சரோஜா, திரு.கோ.இளங்கோவன், திரு.கு.சுல்தான், திரு.உபயதுல்லா ஆகியோர் காலை நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினர். கருத்தரங்கத்தில் திரு.நல்லரசு, முனைவர்.இரா.சேது, முனைவர். வீரப்பன், முனைவர். இரா.தி.சபாபதிமோகன் ஆகியோர் உரையாற்றினர்.
பிற்பகல் பேராசிரியர். அ.கி.மூர்த்தி, முனைவர்.க.நெடுஞ்செழியன், முனைவர்.கு.வெ.பாலசுப்பிரமணியன், திரு. ராதாகிருட்டினன், முனைவர். ஆறு.அழகப்பன் ஆகியோர் பல தலைப்புகளில் சொற்பொழிவாற்றினர். மாலை கவியரங்கத்தில் கவிஞர்.வந்தவாசி.மு.முருகேஷ், செ.சந்திரஜோதி, சிங்க.சௌந்தர்ராசன், வெற்றிப்பேரொளி, அ.வெண்ணிலா ஆகியோர் கவிதைப் பாடினர்.
மாலை கருத்தரங்கத்தில் முனைவர்.இரா.கலியபெருமாள், திரு.தோப்பூர்.திருவேங்கிடம், திரு.எம்.எஸ்.வெங்கடாசலம், திரு.விருதுநகர். பெ.சீனிவாசன் சொற்பொழிவாற்ற, திரு.சரவண பால்ராஜ் நன்றி கூறினார். வழக்குரைஞர் திரு. வீ.சு.இராமலிங்கம், மிகச்சிறப்பாக இந்த மாநாட்டை முன்னின்று நடத்தி எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். த் 26.02.2000-த்தில் வேலூரில் திரு.தோப்பூர் திருவேங்கடம் எழுதிய நான்கு நூல்கள் அண்ணா இலக்கியப் பேரவை சார்பாக வெளியிடப்பட்டது. டாக்டர்.பரிமளம், திரு.ஷேக் அய்தர், திரு.ஆனூர் ஜகதீசன், திரு. என் வி. என்.செல்வம், வழக்குரைஞர்.எம்.ஏ.ஜெயவேலு, பேராசிரியர்.இரா.சேது, புதுவைக்கவிஞர்.மு.தியாகராசன், பேராசிரியர்.பெருமாள், திரு.வாழி. தட்சிணாமூர்த்தி, திரு. பன்னீர் செல்வம், திரு. வி.என். சண்முகம், திரு.கி.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். த் 18.10.1997 அன்று அறிஞர் அண்ணாவின் 89-ம் பிறந்த நாள் விழா தஞ்சையில் வழக்குரைஞர் வி.சு.இராமலிங்கம் அவர்களால் நடைற்றது. டாக்டர்.அண்ணா பரிமளம், பேராசிரியர்.இரா.சேது, பேராசிரியர்.ஆறு.அழகப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ அண்ணா பேரவையும், சென்னை கலாச்சார சங்கமும் இணைந்து டாக்டர்.பரிமளம் தொகுத்த பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா 25.05.1997 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் கருணாநிதி, திரு.இராம.அரங்கண்ணல், நடிகமணி.டி.வி.நாராயணசாமி, கோவை.செழியன், திரு.ஆற்காடு வீராசாமி, கவிஞர்.வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். த் 11.06.1994-ல் திருத்துறைப்பூண்டியில் பேரவையின் திளை தொடக்கவிழா தமிழ்ப் பெயர் சூட்டுவிழா, இல்லத்தில் படத்திறப்பு விழா ஆகியவை திரு.தங்கத்தமிழன் முயற்சியால் நடைபெற்றது. டாக்டர்.பரிமளம், திருவள்ளுவரடிமை முருகு, கோவை இளஞ்சேரன், தமிழறிஞர்.வி.பொ.பழநிவேலனார், பெ.மணியரசன், திரு.பொ.வேல்சாமி, தமிழறிஞர்.வை.தட்சிணாமூர்த்தி, புலவர்.பி.கார்திகேயன், திரு.நா.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ 14.03.1993-ல் பேரவையும், சென்னை வான்மதி கலை மன்றமும் இணைந்து அறிஞர் அண்ணாவின் அப்போதே சொன்னேன் புதினத்தை நாடகமாக அரங்கேற்றினர். தலமை. டாக்டர்.பரிமளம்.

த் பேரவையின் கிளை வேலூரை அடுத்த ஒடுக்கத்தூரில் 30.05.1993 அன்று திரு.தோப்பூர் திருவேங்கிடம் தலமையில் நடைபெற்றது. டாக்டர். பரிமளம், திருப்பத்தூர் வீரமணி, திரு.சேக் காதர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அணைக்கட்டு பகுதி தி.மு.க.தோழர்களால் டாக்டர்.பரிமளம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

¤ 31.05.1993 அன்று வேலூரில் அண்ணா பேரவையின் கிளை திரு.தோப்பூர் திருவேங்கடம் அவர்கள் தலமையில் தொடங்கப்பட்டது. டாக்டர்.பரிமளம், திருப்த்தூர்.இரா.வீரமணி, திரு.ச.அய்தர், திரு.வெ.சு.மாறன், திரு.பழனி, திரு.பன்னீர்செல்வம், பேராசிரியர் தேவராசன், பேராசிரியர். அயிபூர் ரகீம், நெய்வேலி முரளி, திரு.மு.செந்திலதிபன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ 15.08.1993 அன்று திருச்சி அரியலூர் மாவட்ட வேரவை கிளை தொடங்கப்பட்டது. திரு.டி.ஏ.பழநிசாமி, திரு.கோதண்டராமன், கவிஞர்.முத்தரசன், திரு.பொற்செல்வி இளமுருகு, திருச்சி.எம்.எஸ்.வெங்கடாசலம், திரு.ஆறுமுகம், திரு.சின்னப்பா, திரு.அரங்கபாரி, அண்ணாதாவுத் டேவிட், டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ 16.08.1993 அன்று, மதுரை மாவட்ட பேரவை கிளை மேலூர். திரு. பெரியய்யா அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது. திரு.ந.மணிமொழியன், திரு.எஸ்.கண்ணன், திரு.இரத்தின, திரு.அய்யண்ணன் அம்பலம், டாக்டர்.இராமமூர்த்தி, தோப்பூர். திருவேங்கடம், திரு.சுந்தர்ராசன், திரு.கருணைதாசன், வழக்குரைஞர்.செயராமன், புலவர்.அறிவுடைநம்பி, பேராசிரியர்.தி.அ.சொக்கலிங்கம், டாக்டர்.சாம்பசினார், திரு.இராசரத்தினம், டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ 17.10.1993-ல் மதுரை மாவட்ட காகியப்பட்டியில் பேரவையின் கிளை திரு.ஏ.போஸ் அவர்கள் தலமையில் தொடங்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

¤ 07.02.1992-ல் பேரவையின் சார்பில் காஞ்சி நாடு திங்கள் இதழ், சென்னை மியுசியம் அரங்கில் நடைபெற்றது. நீதியரசர் வேணுகோபால், புலவர்.அறிவுடை நம்பி, திரு.டி.கே.எஸ்.வில்லாளன், திரு.இராம.அரங்கண்ணல், கவிஞர்.வேளவேந்தன், திரு.தில்லை வில்லாளன், திரு.டி.கே.பொன்னுவேல், டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ 29.05.1992-ல் சென்னைப் பெரியார் திடலில் பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தலமையில் நடைபெற்றது. அண்ணாவின் மூத்த மகன் டாக்டர். அண்ணா பரிமளம், அறிஞர் அண்ணா நடித்த காகபட்டர் வேடத்தைத் தாங்கி நடித்தார். மற்ற பாதிரங்களில் நடித்தவர்கள் அண்ணாவுடன் நடித்த காஞ்சி தோழர்களின் மகன்கள் நடித்தனர்.

¤ 15.06.1992-ல் நெல்லையில் பேரவையின் கினைத் தொடங்கப்பட்டது, வயலூரி குமரன் அவர்கள முயற்சியால் பேராசிரியர் திருமாறன், பெராசிரியர் அறிவரசன் வீரவநல்லூர் சுப்பய்யா, திரு.குமார சுப்பிமணியம், திரு. பால் இராசேந்திரன், திரு. நடராசன், திரு.காதர் மொய்தீன், திரு.நெடுஞ்சேரலாதன், திரு.ஏ.எஸ்.சுப்பிரமணியம், திரு.மு.சங்கரலிங்கம், திரு.வேல்முருகன், திரு.சங்கர கணபதி, திரு. நல்லகண்ணு, திரு.வ.எஸ்.பெருமாள், திரு.கே.எஸ்.சண்முகம், திரு.ஆறுமுகம், திரு.பொன்.பசுங்கிளி, டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ பேரவையின் நான்காம் ஆண்டுவிழா பங்காரு.இராமணி திருமணக்வடம் திறப்புவிழா 06.09.1992 இன்று காங்சியில் நடைபெற்றது டாக்டர்.பரிமளம், திரு.சி.வி.எம்.அண்ணாமலை, திரு.கே.டி.எஸ்.மணி, திரு.பெ.சம்பந்தம், திரு.பேம்பய்யன், திரு.இராதாகிருட்டினன், டாக்டர்.நடராசன், திரு.நல்லரசு, திருமதி.மல்லிகா இராமசந்திரன், டாக்டர்.சுப்பய்யா, திருமதி.சரோஜினி குஞ்சிதபாதம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ நெய்வேலியில் 10.10.1992 திரு.சு.முரளி அவர்கள் முயற்சியால் பேரவைக் கிளைத் தொடங்கப்பட்டது. திரு.தியாகராசன், திரு.பொன். சொக்கலிங்கம், முனைவர்.ச.மெய்யப்பன், முனைவர் சிதம்பரம். மயில்வாகனன், திரு.மணவாளன், திரு.மு.அருணகிரி, கவிஞர்.மு.சு.மணி, திரு.ஆ.வந்தியத் தேவன், திரு.மு.செந்திலதிபன், திரு.ந.வி.முத்து, டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ அண்ணா இலக்கியப் பேரவையும் உலகத் தையற் கலைஞர் வாசகர் வட்டமும் இணைந்து 27.12.1992-ல் விழாவில் உவமைக் கவிஞர்.சுரதா, திரு.வெங்கடசுப்பிரமணியம், திரு.மூர்த்தி, முனைவர்.இரா.சேது, டாக்டர்.அண்ணாபரிமளம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


------- த் டாக்டர். பரிமளம், கவிஞானி மறைமலையான், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கயல் தினகரன், பட்டுக்கோட்டை குமாரவேல் மூவேந்தர் முத்து, மு.பி.பாலசுப்பிரமணியம், புலவர். புலமைபித்தன், கோவை செழியன், முனைவர்.இரா.சேது ஆகியோர் கலந்துகொண்டனர்.
அண்ணாவைப் பற்றி பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

¤ 13.05.1991 அன்று சிதம்பரத்தில் முனைவர். மயில்வாகனன் அவர்கள் முயற்சியால் பேரவை தொடங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர்.நீதியரசர் மோகன், முத்தமிழ்க் காவலர்.கி.ஆ.பெ.விசுவநாதம், திரு.தில்லை வில்லானன், திரு.பொன்.கொக்கலிங்கம், திரு.கற்பக கணபதி, பேராசிரியர்.முனைவர்.ச.மெய்யப்பன், டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முனைவர்.ச.மெய்யப்பன் பேரவைக்கு ரூ.5000 நன்கொடை அளித்தார்.

¤ 25.09.1991 - ல் பேராசிரியர் அ.கி.மூர்த்தி அவர்கள் முயற்சியால் பேரவைத் தொடங்கப்பட்டது. திருச்சி.திரு.எம்.எஸ்.வெங்கடாசலம், கோவை.இளஞ்சேரம், திரு.ஏ.வி.பதி, திருமதி.கிரேசி சேவியர், முனைவர்.மயில்வாகனன், திருச்சி.திருக்குறள் சன்முகம், தஞ்சை வழக்குரைஞர். வி.எஸ்.இராமலிங்கம், டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருமதி.கிரேசி சேவியர் பேரவைக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்

¤ 29.09.1991 அன்று திருச்சிராப்பள்ளியில் வழக்குரைஞர்.எம்.எஸ்.வெங்கடாசலம் அவர்கள் முயற்சியால் பேரவைத் தொடங்கப்பட்டது. மறைந்த திரு.அன்பில் தர்மலிங்கம், திரு.தமிழ்குடிமகன், திரு.எஸ்.ஏ.ராபி, மறைந்த இளமுருகு பொற்செல்வி, திருமதி.பொற்செல்வி இளமுருகு, திரு.நாகசுந்தரம், புலவர்.முருகேசன், திரு.ஆதிமூலம், டாக்டர்.பரிமளம் திரு.அன்பில் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ 04.11.1991-ல் பேரவையின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை மியுசிக் அகாதெமி யில் நடைபெற்றது. டாக்டர்.பரிமளம், முனைவர்.பொற்கோ, உவமைக் கவிஞர் சாரதா, கவிஞர்.சாவித்திரி வெங்கட் இராமன், கவிஞர்.பனப்பாக்கம் சீத்தா, முனைவர்.வீரப்பன், திரைப்பட இயக்குநர். சார்வண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். திரைப்பட இயக்குநர். கார்வண்ணன் பேரவைக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார். திருமதி. சரோசா பரிமளம் நன்றி கூறினார்.

¤ 22.01.1990-ல் சென்னை பெரியார் திடலில் பேரவையின் சார்பில் தமிழர் திருநாள் நடைபெற்றது. திரு.கோவை செழியன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பேரறிஞர் அண்ணாவின் ஓரங்க நாடகங்கள் வழக்கு வாபஸ், தேவலோகத்தில் ஆகியவை நடைபெற்றன.

¤ 03.02.1990 காஞ்சி மண்ணில் அண்ணா நினைவு நாளன்று பேரவைக் கிளைத் தொடங்கப்பட்டது. காஞ்சீபுரம் அண்ணா அரங்கத்தில் அண்ணாவின் நாடகங்கள் வழக்கு வாபஸ், தேவலோகத்தில் ஆகியவை நடைபெற்றன. திரு.கே.டி.எஸ்.மணி, திரு.வெ.சம்பந்தம், திரு.காஞ்சி.பன்னீர் செல்வம், டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

¤ 17, 18.08.1990-ல் சென்னை பெரியார் திடலில் பேரறிஞர் அண்ணாவின் நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் ஆகிய நாடகங்கள் நடைபெற்றன. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. திரு.வி.ஜி.சந்தோஷம், திரு.ஏக்நாத், தி.க. தலைவர்.கி.வீரமணி, டாக்டர்.பரிமளம் ஆகியோர் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர்.

¤ பேரவையின் முதலாம் ஆண்டு விழா 20.10.1990-ல் நுங்கம்பாக்கம் எஸ்.ஏ.பி.திருமண மண்டபத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தலமையில் நடைபெற்றது. அண்ணாவின் எழுத்துக்களை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் முனைவர்.ப.ஆறுமுகம், முனைவர்.கு.விவேகாநந்தன் முனைவர். ப.உதயகுமார், முனைவர். பொன்.செல்வகணபதி, முனைவர். இரபி சிங், முனைவர்.இரா.சேது, முவைர். கு.சக்ரவர்த்தி, முனைவர். அம்புஜம் யுவசந்திரா, முவைர்.இரத்தின சபாபதி, முனைவர். டாக்டர். உசேன் பதிப்பகங்கள், பாரி செல்லப்பனார், பூம்புகார் பிரதாப்சிங், பாரதி மணி, முனைவர்.ச.மெய்யப்பன், முனைவர்.மயில்வாகனன், முனைவர்.மா.செல்வராசன், ச.வளர்மதி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

¤ 08.09.1989-ல் பேரவை நிதிக்காக பேராசிரியர் அன்பழகன் அவர்கள் தலமையில் பேரறிஞர் அண்ணாவின் நீதி தேவன் மயக்கம் நாடகம் சென்னை நடிகர் சங்க சங்கரதாஸ் சாமிகள் கலையரங்கத்தில் நடைபெற்றது. த் 13.20.1989-ல் அண்ணா அறிவாலயத்தில் அன்றய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலமையில் பேரவையின் தொடக்க விழா நடைபெற்றது. மறைந்த தன்மானக் கவிஞர் கருணாநந்தம் அவர்கள் முன்னிருந்து தொடங்கி உதவினார்.

வளரும். . .

 

Website Designed by R.Sembian, Anna Peravai