பாரதி வழி

சமச்சீர் கல்வி கொண்டுவந்தவுடனே, இருக்கிற எல்லா மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறார்கள். படிப்பதற்கு நாம் அங்கேதான் போகிறோம்.டி.வி. நிகழ்ச்சியில் சினிமா பாட்டு பாடுகிறான். சினிமா பாட்டு தமிழில் இருக்கிறது. பாடுகிறவன் தமிழ் நாட்டுக்காரன். பாடின ஆள உட்கார்ந்திருக்கிறார். இதற்குத் தொகுத்து வழங்க ஒரு அம்மா வந்திருக்கிறது. அரையும் குறையுமாக. எந்தப் பெண்ணுரிமைப் பேசுகிறவரும் இதைப் பற்றி யாரும் கேட்கவே இல்லை. பெண்கள வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதை ஒரு பெண்ணியம் பேசுகிறவனும் கேட்கவில்லை. அவன் பாரதியைத் திட்டிக் கொண்டிருக்கிறான். காந்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அதில் பாடுகிறவர்கள் தமிழர். நீதிபதிகள் தமிழர்கள். அவரிடம் கேள்வி கேட்பவர்கள் இங்கிலீஷில் கேட்கிறார்கள். நம்முடைய பாடகர்கள் கமென்ட் பூராவும் இங்கிலீஷில்தான் அதற்கு அவர்கள் அது இருக்கு, இது இருக்கு, கெமிஸ்ட்ரி இருக்கு, பிசிக்ஸ் இருக்கு இப்படியே பேசிக் கொண்டிருக்கிறான். இந்த நிகழ்ச்சிக்கு பெண் பிள்ளகள அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இதிலே அவர்களுக்குப் பெரிய சந்தோஷம். ஏன் இந்த அவல நிலை? இது அடிமைத்தனத்தினில் மோகம். வெள்ளக்காரன் போய்விட்டான். ஆனால் வெள்ளக்காரன் மேலிருக்கிற அடிமைத்தனம் போகவில்லை. டைரக்டர் மன்னிக்க வேண்டும். வெள்ளக்காரன் போய்விட்டான். அந்தக் காலனி ஆதிக்கத்தில் வந்த கிரிக்கட் நம்மை விட்டுப் போச்சா? அமெரிக்காக்காரன் வெள்ளக்காரனே; கிரிக்கட் ஆடுவதில்லை. பெர்னாட்ஷா சொன்னார் America and English are two countries which are seperated by same language என்று. அதனால் அமெரிக்காக்காரன் English என்று சொல்வதில்லை. அவன் புதுஷ்உழிஐ என்று சொல்கிறான். சுதந்திர உணர்ச்சி. வெள்ளக்காரனை எதிர்த்துப் போராடிய அமெரிக்காக்காரர்கள், எதெல்லாம் வெள்ளக்காரத்தனமோ, அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டான். ஆங்கிலேயர்களுக்கு உடை உடுப்பதிலே இருந்து எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு உண்டு. ஆனால் அமெரிக்கன் பிரசிடென்ட் ஸ்லாக் போட்டுக்கொண்டு வெளியில் வருவார். எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றினார்கள். அதனாலே அமெரிக்காவில் கிரிக்கட்டே ஆடுவதில்லை. அவன் பேஸ்பால் என்று ஒன்று கண்டுபிடித்தான். ஆனால் எங்கெல்லாம் ஆங்கிலேய ஆதிக்கம் இருந்ததோ, அங்குதான் கிரிக்கட் இருக்கிறது. இன்றைக்கு நிலைமை என்ன? அகில இந்திய வானொலி நிலையம் ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் பத்து மணிநேரம் கிரிக்கட் நேர்முக வர்ணணை கொடுத்துக் கொண்டிருக்கிறது. டைரக்டரால் ஒன்றும் பண்ண முடியாது. ஏனென்றால் டெல்லியிலே செய்கிறார்கள் இதை. எவன் கிரிக்கட் கமென்டரியை ரேடியோவில் கேட்கிறான்? உங்களுக்கு விஷுவல் மீடியா வந்துவிட்டது. வீட்டில் டி.வி. வைத்துக்கொண்டு அவனவன் குதிக்கிறான். எதற்குச் சொல்கிறேன் என்றால், நம்முடைய அடிமைத்தனம் எந்த அளவுக்குப் போயிருக்கிறது. கிரிக்கட் விளயாடுகிறவனுக்கு பாரத ரத்னா கொடு என்கிறான். பாரதத்திற்கு உழைத்தது எல்லாம் யார் என்றே தெரியவில்லை. யார் வரலாறு தெரியும்? மகாதேவ தேசாயை உங்களுக்குத் தெரியுமா? பியாரி லாலை தெரியுமா? வினோபா பாவே பெயர் பூமிதான இயக்கம் என்று வந்து உங்கள் மேல் திணிக்கப்பட்டு விட்டது. தப்பித்துக்கொள்ள முடியவில்லை. மற்ற எந்தத் தியாகியாவது உங்களுக்குத் தெரியுமா? உயிரை விட்டத் தியாகிகளத் தெரியுமா? நம்முடைய வரலாறு தெரியுமா? ஒன்றும் தெரியாது.

பழமைப ழமையென்று
பாவனை பேசலன்றிப் பழமையி ருந்தநிலை கிளியே
பாமர ரேதறிவார்?

என்று பாரதியார் கேட்டார். அவர் கேட்காத விஷயம் இல்லை. தொடாத விஷயமில்லை. சங்கீத விஷயம் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சங்கீதம் பாடுகிறார்கள் எடுத்துப் படிக்கவேண்டும். அதிலே சொல்கிறார்,பொய்க் குரலிலே பாடாதீர்கள். வாயைத் திறந்து ஆ என்றுப் பாடுங்கள். எத்தனை வித்வான் அப்படிப் பாடுகிறார்கள்? இன்றைக்கு மதுரை சோமு உண்டா? பழைய வித்வான் பாடினது மாதிரி மூன்று மணிநேரம் நான்கு மணிநேரம் பாடுகிறவர்கள் உண்டா? ஏன்? நாம் எல்லாவற்றிலும் சலித்துப்போய்விட்டோம். எல்லாவற்றையும் காசாகப் பார்க்கிறோம். மதுரை சோமுவுக்கு பிள்ளயார் கோவிலில் கச்சேரி வைத்தால் ஐந்து மணிநேரம் பாடுவார். பாடி ஆர்வம் முடியாது. கச்சேரி முடிந்துவிடும். போய் எங்கே தங்கியிருக்கிறாரோ, அங்கே தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பார். சங்கீதமாகவே வாழ்ந்தார்கள். இன்றைக்கு ஒரு மணிநேரம் பாடினால் இவ்வளவு ரூபாய் என்று எல்லாம் காசாகிவிட்டது. பாரதியைப் படித்தால், பாரதியைப் பயின்றால், நாம் மனிதர்களாக இருப்போம். நாம் தமிழர்களாக இருப்போம். அவர் சொன்னதுபோல ஒரு இந்திய ஒற்றுமையை யாரும் சொல்லவில்லை. தாகூர் கூட சொல்லவில்லை. அப்படி சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. பாரதியார் பாடினார்,

வங்கத்தில் ஒடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

என்ற பாடலில் அவர் இந்தியா முழுமையையும் பாடினார். இந்தியாவை முழுமையாகப் பார்க்கும்போது தாம் தமிழன் என்பதை அவர் மறக்கவில்லை.

வாழிய செந்தமிழ், வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு,
வாழிய பாரத மணித்திரு நாடு,

எப்போது? தமிழர் நற்றமிழராக வாழ்வதற்கு, செந்தமிழ் வாழக்கூடிய பாரதம் வேண்டும். தமிழை அழிக்கக்கூடிய பாரதம் அல்ல. தமிழனின் முகவரியை நீக்கக்கூடிய பாரதம் அல்ல. ஒவ்வொருவனும் அப்படி இருக்கவேண்டும். இதைத்தான் காந்தியும் சொன்னார். யாருக்காவது ஆர்வம் இருக்குமானால், ஒரு மாணவர் தமிழை ஆய்கிறவர் அல்லது சமூகவியல் மாணவர்கள் யாராவது இருந்தால் மகாகவி பாரதியும் மகாத்மாவும் என்று நீங்கள் ஆய்வை எடுத்துக்கொண்டால், ஆயிரம் பக்கத்திற்கு புத்தம் எழுதலாம். இருவருடைய கருத்துக்களுடைய ஒற்றுமையை நீங்கள் ஆய்வு செய்யலாம். பாரதியார் கவிதையிலும் கட்டுரையிலும் எந்தக் கருத்துக்களச் சொல்லிவிட்டு மறைந்தாரோ, அதை விரிவுப்பத்தினால் காந்தியம் வெளிப்படும். பாரதியார் நமக்குச் சொன்னார், வன்முறையிலே நம்பிக்கை வைக்காதீர்கள். இந்த வெடிக்காய் விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று. வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டபோது பாரதியார் துணிச்சலாக எழுதினார். அந்த ஆஷ் மனைவியோடு வந்தார். பரமசிவன் பார்வதியைப் போல் வந்தவரை சுட்டுக்கொன்றதை நம்மால் ஏற்கமுடியவில்லை என்று பாரதி எழுதினார். அவர் என்ன தேசத் துரோகியா? வன்முறையை எப்பொழுதும் எதிர்த்தார். இன்றைக்குக் காலையில் செய்தி, தீவிரவாதி என்று ஒரு வார்த்தை, தயவு செய்து டைரட்டரிடம் கேட்டுக்கொள்கிறேன், இந்த பயங்கரவாதத்தை தீவிரவாதம் என்ற பெயரால் சொல்லாதீர்கள். தீவிரவாதம் என்பது வேறு, பயங்கரவாதம் என்பது வேறு. இவர்கள் பயங்கரவாதிகள் சமூக விரோதிகள். தீவிரவாதம் என்றால் குறிக்கோளில் ஒரு நல்லது இருக்கிறது என்று அர்த்தம். காங்கிரஸில் மிதவாதம், தீவிரவாதம் இருந்தது. குறிக்கோள் இந்திய சுதந்திரம். ஆக குறிக்கோளில் ஒரு நம்மை இருக்கிறது. இவர்களத் தீவிரவாதி என்று சொன்னால் இவர்கள் நோக்கத்திலே ஏதோ நல்லது இருப்பதுபோல ஒரு தவறான கருத்தை நாம் உருவாக்குகிறோம். எப்பொழுது ஒரு உயிரைக் கொல்லத் துணிகிறானோ, அவன் பயங்கரவாதி. அது எப்படி தீவிரவாதம் ஆகும்? அப்படி தீவிரவாதம் என்கிற ஒரு நம்பிக்கையை உருவாக்கியதால்தான் இன்றைக்கும் அந்த பயங்கரவாதம் நிலைக்கிறது.

பாரதியார் சொன்னார் நீங்கள் உழவேண்டாம், பயிர்செய்யவேண்டாம், ஊனுடலை வருத்தாதீர். உணவு இயற்கை கொடுக்கும். நீ என் மதத்தைக் கைக்கொணமின். இங்கு உங்களுக்குத் தொழில் அன்பு செய்தல் கண்டீர். அன்பு செய்தல், அன்பு காட்டுவதில்லை. அன்பு என்பது நீங்கள் வெறுமனே வீட்டிலிருப்பதில்லை. வெளியே வந்து துன்பம் செய்பவனுக்கு உதவி செய்கிறீர்கள அது அன்பு செய்தல். பாரதி நம்முடைய இராமலிங்க வள்ளலாரை மாடலாக வைத்துக் கொண்டார். அவர்தான் சொன்னார், ஆருயிர்கட்கெல்லாம் நாம் அன்பு செயல் வேண்டும் அதனால்தான் அன்னசாலை வைத்தார்.

பேசாப்பொருள பேசநான் துணிந்தேன் அவருக்குத் தெரியும் யாரும் பேசவில்லை என்று கேட்காவரத்தைக் கேட்க நான் துணிந்தேன் என்ன வரம்?

மண்மீதுள்ள மக்கள் பறவைகள் விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையாலிடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட னிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டுந் தேவ தேவா!

எவ்வளவு பெரிய ஆசை. வள்ளலாருக்கு வந்த ஆசை. எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும். எப்படி இருக்க வேண்டும். யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே. அதற்கு நாம் உழைக்க வேண்டும். காந்தி சொன்ன நிர்மானத் திட்டம் இதுதான். மக்கள் நல்வாழ்வு வாழ நான் உழைக்க வேண்டும்.

ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ்
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க என்பேன் இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
அங்ஙனே யாகுக என்பாய், ஐயனே!

ததாஸ்து. ததாஸ்து என்பது ஸமஸ்கிருத வார்த்தைக்கு பொருள் அங்ஙனே ஆகுக. இவர் கட்டளயிடுகிறார், கணபதிக்கு. அங்ஙனே ஆகுக ஐயனே! எப்பேர்பட்ட ஆசை! எப்பேர்பட்ட கனவு! யோகத்துக்கும் யாகத்துக்கும் விளக்கம் சொன்னார்.

ஊருக் குழைத்திடல் யோகம் நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் உளம்
பொங்கல்இல் லாத அமைதிமெய்ஞ் ஞானம்

வேறு என்ன சொல்ல முடியும்? உங்களுடைய வேதம், வேதாந்தம் இருக்கிற அத்தனைத் தத்துவங்களுடைய பிழிவை, இன்றைக்குத் தேவையானதை பாரதி அன்றே சொன்னார். பாரதியார் சொன்னார், தெய்வத்தை, மற்றவர்களுக்கு தொண்டு செய்து உணர்ந்துகொள் என்று. எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றான் கண்ணபெருமான் என்றார் பாரதியார். எல்லா உயிர்களிலும் கண்ணபெருமான் இருக்கிறார், பிறகு கண்ணனை எதற்குத் தேடிக்கொண்டுப் போகவேண்டும். எதிரிலே இருக்கிறவனுக்கு தொண்டு செய். சிவனடியார்களுக்கு செய்வதுதான் நாகேஸ்ரவ பூஜை எல்லாருக்கும் சோறு போடுவதல்லை. பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதல்லை. சிவனடியார்களுக்கு உணவு பாலித்ததுதான் நாகேஸ்ரவ பூஜை. ஆனால் பாரதி, எல்லா உயிர்களுக்கும் நீ அன்பு செய்தால் மோட்சம் என்று சொன்னார். ஊருக்கு உழைத்திடல் யோகம். வீட்டுக்குள்ள உட்கார்ந்து மந்திரம் சொல்வது அல்ல. நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம். வேறு எதுவும் செய்ய வேண்டாம். இப்படி மணிமணியாக முத்து முத்தாக திருக்குறளப்போல் நமக்கு நீதி உபதேசித்தார் பாரதியார். பாரதியார் கவிதைகளப் படியுங்கள். எதுவும் பொழுதுபோக்கு அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சி தருவதற்காக கவிதைகள எழுதியிருக்கிறார். உங்கள் உள்ளம் மேம்படுவதற்காக கவிதைகள் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதைகள்கூட உங்கள மேம்படுத்தும், பண்படுத்தும், மகிழ்ச்சியிலே ஆழ்த்தும். இலக்கியத்தினுடைய நோக்கம் என்ன? மனிதத்தை உயர்த்துவது. மனிதர்களப் பண்படுத்துவது. மனிதர்களுக்கு அமரத்துவம் கொடுப்பது. எது உயர்த்துமோ அது இலக்கியம்.

பாரதியார் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். நீங்கள் அன்போடு இருந்தால் உங்களுக்கு சைந்யம் தேவையில்லை. உங்களுக்கு இராணுவம் தேவையில்லை.

அன்பென்று கொட்டு முரசே
நிகரென்று கொட்டு முரசே இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

21ல் அவரது மறைவுக்கு முன்னால் பாரதியார் சொன்னார். நான் உங்களக் கேட்கிறேன், உங்களுடைய உரிமையுடைய இந்தியாவில், உரிமை உரிமை என்று தினம் சத்தம் போடுகிறார்கள அவர்களப் பார்த்துக் கேட்கிறேன், ஜாதி ஒழிந்ததா? யாராவது ஜாதி வேண்டாம் என்று போராடுகிறீர்களா? (க்ஷிற்துழிஐ ஷ்ஆஜுமிவி உலிற்ஐஉஷ்யி) வைத்துக்கொண்டு அதில் எத்தனை வக்கீல், எத்தனை தீர்ப்பு! யார் ஜாதி வேண்டாம் என்கிறீர்கள்? முஸ்லீம்களுக்கு தனியாக தொகுதி வேண்டும். பள்ளருக்குத் தொகுதி, பறையருக்குத் தொகுதி. செட்யூல்டு காஸ்டுக்கென்று தொகுதி ஒதுக்கினால் எனக்கு சக்கிளியனுக்கு ஒதுக்கு. எங்கேடா ஜாதி ஒழியும்? எப்போ ஒழியும்? சேர்ந்து வாழ வேண்டாமா? எப்போ உங்களுக்கு அந்தப் புத்தி வரும்? பாரதியைப் படியுங்கள்.

நிகரென்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்பவ ரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

நமக்கு வேதம், இன்றைக்குத் தேவைப்படுகிற அறிவு. வேதத்தை நம்பிய பாரதி, வேதங்களப் பயின்று தேர்ந்த பாரதி நமக்குச் சொன்னார். கண்ணன் பாட்டில்

வேதம் என்னும் கதைத் திரளில்
சில வேதங்கள் கோர்த்து வைத்தான்

வேதம் என்றால் அறிவு. நீ வேதம் என்று சொல்கிற கதைத் திறளில் சில வேதங்கள் கோர்த்து வைத்தான். இந்தத் துணிச்சல் யாருக்கும் வருமா?

உண்மையின் பேர்தெய்வம் என்போம் அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்

வேதம் என்றால் உண்மை. உண்மைக்குப் பொருத்தம் இல்லையா, அதைத் தூக்கி எறிந்து விடு. முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள என்று கேட்டால், உனக்கு முன்னால் முட்டாள்கள் பிறந்ததில்லையோ? என்றார் பாரதி. அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக எவன் உப்புத் தண்ணீரைக் குடிப்பான் என்று கேட்டான். எனவே சுதந்திரமான சிந்தனை, தூய அறிவு, கொஞ்சம் கூட மங்காத அறிவு, வறுமையிலே வாழ்ந்த செம்மையான வாழ்க்கை. பாரதியை நீங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் வாழ்க்கையைப் படியுங்கள். பாரதியினுடைய வாழ்க்கை முழுமையானது. சொல், செயல், சிந்தனை அத்தனையும் ஒருமை உடையன. முறண்பாடு இல்லாத வாழ்க்கை. அதனால்தான் பாரதிதாசன் தன்னை, பாரதிதாசன் என்று வைத்துக்கொண்டார். பல மூடர்கள் பாரதிதாசன் என்ற பேரைச் சொல்லாமல் மறைக்கிறார்கள். இது யாரும் அவருக்கு வைத்தப் பெயரில்லை. பாரதிதாசன் தனக்கு வைத்துக்கொண்டப் பெயர். கனக சுப்பு ரத்தினம் தனக்கு வைத்துக்கொண்ட பெயர் பாரதிதாசன். புலவர் கனக சுப்பு ரத்தினத்தை புரட்சிக் கவிஞனாக மாற்றியது மகாகவி பாரதியார். அதனால்தான் பாரதிதாசன் சொன்னார்.

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்

பாரதி தமிழைத் தூக்கிப் பிடித்தார் இதை நான் சொல்லவில்லை. தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் மகா வாக்கியம்.

பாரதியைப் பயிலுங்கள்! நீங்கள் வாழுங்கள்!

(திருச்சி அகில இந்திய வானொலி நிலையம், தஞ்சாவூர் பாரதி சங்கம், திருவையாறு பாரதி இயக்கம் இணைந்து நடத்திய பாரதியாருடைய 130ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் பேசியது 11.12.2011)