அன்பே சிவம்

அந்த அன்பு என்ன சாதாரண விஷயமா? அன்பு என்ற ஒன்று இல்லாததுதான், இன்றைக்கு உலகை ஆட்டிப் படைக்கிறது. இந்தியா அல்ல உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. அன்பு என்ற ஒன்றுதான் இந்த மனித குலத்தை வாழவைக்கும் என்பது வள்ளலார் மட்டுமல்ல உலகத்திலே இருக்கிற அத்தனை ஞானிகளும் கண்டுகொண்ட உண்மை. ஆர்னால்டு ஜோசப் டாயின்பி என்கிற ஒரு வரலாற்றுப் பேராசிரியர், அவர் பெரிய ஞானி. உலக வரலாறுகள், சமயங்கள், தத்துவங்கள் அத்தனையும் படித்துக் கரைதேர்ந்து வரலாறு போதிக்கிற தத்துவம் என்ன என்று காட்டுவதற்காக பத்து நூல்களாக A study of History என்று எழுதினார். அந்த ஆர்னால்டு டாயின்பி தன்னுடைய இறுதிக் காலத்திலே ஒரு புத்தகம் எழுதினார், An Historian’s Approach to Religion, ஒரு சமயத்தைப் பற்றிய வரலாற்று ஆசிரியரின் பார்வை. அதிலே அவர் சொன்னார் இந்த உலகத்திலே ஒன்றே ஒன்றுதான் நித்தியம். மற்றது எல்லாம் அநித்தியம். அது எது என்றால், அன்பு. இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. யாராது சொல்ல முடியுமா? ஏன் இந்த வாழ்க்கை, சொல்ல முடியுமா? ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்ற ஜெர்மானிய ஞானி சொன்னார் The life is meaningless, at the same time it is full of meaning பொருளற்ற இந்த வாழ்க்கை பொருள் நிறைந்ததாக இருக்கிறது. பொருள் நிறைவைக் கொடுப்பது எது? மனிதனுடைய வாழ்க்கை. இல்லாவிட்டால் விலங்குகளுக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு? அவைகளும் உண்கின்றன, உறங்குகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, மடிகின்றன. நமக்கும் அவைகளுக்கும் உள்ள வேறுபாடு, நம்மிடம் ஆன்மா இருக்கிறது. இது வளர்கிறது. அது உணர்த்துவது என்ன? அன்புதான். விலங்குகள் ஒன்றை ஒன்று அன்போடு பார்க்கிறதோ இல்லையோ தெரியாது. உங்களுடைய அறிவு அன்பு வழியிலே செயல்படவேண்டும். ஒரு புத்தகத்திலே டாயின்பி சொல்கிறார், ஒரு கேள்வி பதில். ஒரு ஜப்பானிய ஞானியும் அவரும் பேசினார்கள். ஜப்பானில் கேள்வி கேட்டார்கள். அதற்குப் பதில் சொன்னதாக ஒரு புத்தகம் வந்தது. அதிலே சொல்கிறார். What should man live for? This question is perticularly acute for the end. மனிதன் எதற்காக வாழவேண்டும்? இன்றைய இளஞர்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்வி எல்லோருக்கும் உதிக்கிறது. நாம் ஏன் வாழ்கிறோம்? டாயின்பி சொல்கிறார். I Would say that man should live for living, for understanding and for creating. He should spend all his ability, all his strenghth and persuing all these three aims. And he should sacrifies himself, if necessary for the sack of achieving them. Anything worthwhile may demand, self sacrifice. And if you think it worthwhile you will be prepared to make the sacrifice. அன்பு செலுத்த, அறிந்துகொள்ள, சிருஷ்டிக்க. ளீழிமிஷ்ஐஆ என்றால் புதிதாக ஒன்றை உருவாக்க. மனிதன் இதற்காக வாழவேண்டும். இந்த அன்பு செய்ய என்பதில்தான் அறிந்துகொள்வதும் வருகிறது. நீங்கள் அன்பும் அறிவும் கலந்துகொண்டு உழிமி செய்தால் சிற்பம் வரும்; ஓவியம் வரும்; கோயில் வரும்; சிறந்தக் கட்டிடங்கள் வரும்; மனித வாழ்க்கை உருவாகும். அன்பில்லாமல் வெறும் அறிவோடு மட்டுமே நீங்கள் படைக்க நினைத்தால் அணுகுண்டுதான் வரும். அன்பு என்ன செய்யும்? அவர் சொல்கிறார், இந்த மூன்றுக்காகவும் உங்களுடைய திறமை அனைத்தையும் செலவிடுங்கள். அன்பு செலுத்தவும், அறிவு பெறவும், உருவாக்கவும் உங்கள் திறமை அத்தனையையும் நீங்கள் செலவிடுங்கள். தேவையானால் உங்கள பலிகொடுங்கள். தேவையென்றால் நீங்கள் உங்கள இழந்துவிடுங்கள். வியிக்ஷூ விழிஉஷ்க்ஷூஷ்உ அப்படி கொடுக்கிற அந்த தியாகத்தில்தான் உங்களயே நீங்கள் அடுத்தவர்களுக்காக ஒப்புவிக்கிற தியாகத்தில் உன்னத இன்பம் இருக்கிறது. அதுவே மோட்சம். அதுவே பேரின்பம். ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்கிற ஒரு ஞானி முப்பது வயதிற்குள்ளாக இசைக் கலையிலே தேர்ந்தார். அதில் டாக்டர் பட்டம் வாங்கினார். சமயத்துறையிலே டாக்டர் பட்டம் வாங்கினார். தத்துவத் துறையிலே டாக்டரேட் வாங்கினார். ஒரு ஜெர்மானியப் பல்கலைக் கழகத்தில். மூன்று டாக்டர் பட்டத்தைப் பெற்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் முப்பது வயதுக்கு மேலே, அப்போது பாதிரிமார்கள் எல்லாம் ஆப்பிரிக்காவுக்கும், எத்தனையோ பின்னடைந்த நாடுகள், நாகரிகம் இல்லாத மக்கள் மத்தியிலே தொண்டு செய்து அவர்கள கிருத்துவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள். மதம் மாற்றுவதிலே ஆல்பர்ட் ஸ்வைட்சருக்கு ஆர்வம் இல்லை. மக்களுக்குத் தொண்டு செய்ய அவருக்கு ஆர்வம். என்னத் தொண்டு செய்யலாம்? ஒரு மிஷன் ஆப்பிரிக்காவுக்குப் போனது. ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதி லாம்ரன் என்பது அந்தப் பகுதியின் பெயர். போகிறபோத அவரிடம் நானும் வருகிறேன் தொண்டு செய்ய என்றார்கள். நான் மலைப் பிரசங்கத்திற்கு வரமுடியாது. வேறு என்ன செய்யலாம் என்று கேட்டார். நீங்கள் மருத்துவராக வரலாம் என்றார்கள். பேராசிரியராக இருக்கிற ஒருவர் மருத்துவத்திலே மாணவராக மாறினார். முப்பது வயதில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே, தத்துவம் போதித்துக் கொண்டே, இசையைப் போதித்துக்கொண்டே, சமயத்தைப் போதித்துக்கொண்டே, மருத்துவ மாணவராக மாறினார். மருத்துவப் படிப்பு முடிந்ததுதான் தெரியும், அவர் கொஞ்சம் உடல் ஊனம் உள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். கணவனும் மனைவியுமாக அந்தக் காட்டுக்குள்ள போனார்கள். சாகிற வரையில் லாம்ரன் காட்டுக்குள்ள நீக்ரோ மக்கள் மத்தியிலேயே தன் வாழ்நாள் முழுவதும் அந்த மக்களுக்குப் பாடுபட்டு அங்கேயே மடிந்தார். அவருடைய சமாதி இவ்வளவு உயரத்தில் உள்ளது. அவரைப் பாடுபடச் செய்தது எது? இந்த இரக்கம், உயிர் இரக்கம். அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும். சுவாமி கேட்பது என்ன? பொன்னும் மணியுமா? ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும். அன்பு என்பது அன்பாக இருப்பதில்லை. அன்பு செய்வது, ஆப்ரிக்காவில் உள்ள அந்தக் காட்டுக்குள்ள அந்த நீக்ரோக்களுக்கு வந்த வியாதிகள் இருக்கின்றதே யாரும் அதுவரை ஆராய்ச்சி செய்யாத வியாதிகள். களிம்பு கொண்டுபோய் கொடுத்தார். அந்தக் காட்டுக்குள்ள மருந்து கொண்டுபோவது கூட கஷ்டம். அவருடைய நூல்களயெல்லாம் அவருக்கு வரும் பார்சலில் வரும் பேப்பர்களின் பின்பக்கம் எழுதினார். எல்லோரும் உறங்கப்போகிற நேரத்தில் அவர் தம்முடைய பியானோவை வாசிப்பார். அந்த இசையிலே அந்தக் காட்டு மக்கள் உறங்கிய பின்னால்தான் அவர் உறங்குவார். விலங்குக்கு இணையாக வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், திடீரென்று அவனுக்குத் தலைவலி வரும், மன்னனுக்குள்ள தலையைப் புதைத்துக்கொண்டு செத்துப் போவான். அப்படிக் கொடுமையான காடு அதற்குள்ள போய் வாழ்ந்தார். நோபல் பரிசு கொடுத்தார்கள். கொடுத்தவுடனே, அந்தப் பணத்தையெல்லாம், அந்த மருத்துவமனைக்கு செலவு செய்தார். அவருக்குப் பணம் தேவைப்பட்டால், அமெரிக்காவுக்குப் போவார், ஐரோப்பாவுக்கு வருவார். அங்கு அவர் பியானோ கச்சேரி நடக்கும். அவர் ஆர்கன் வாசிப்பார். இசைக் கச்சேரிகள் நடத்தி பணத்தை வசூல்செய்து மறுபடியும் காட்டுக்குப் போவார். அந்தக் காட்டிலேதான் அறுபதுகளிலே இறந்தார். அவர் இறந்தபொழுது, நானும் என்னுடைய நண்பர் ஒருவர் இருந்தார். அருணாசலம் என்று வழக்கறிஞர், நாங்கள் இரண்டுபேர் மட்டும்தான் கருப்பு பேட்ஜ் குத்திக்கொண்டோம். அந்த மகான் நாகரிகத்திற்கு என்ன அடிப்படை என்று ஆய்வுசெய்யத் தொடங்கினார். ஒருநாள் அவர் கப்பலிலே போய்க்கொண்டிருக்கிறபோது அந்தக் கருத்து அவருக்கு தோன்றியது. அந்த மையக்கருத்து ஸஐஉ க்ஷூலி யிஷ்க்ஷூ. உயிர்களுக்கு மரியாதை. எல்லா உயிர்களும் மதிப்புடையன. எல்லா உயிரையும் மதிக்கவேண்டும். குட்டிச் சுவர், வண்ணான், கழுதை எல்லாம் ஒரே ஆன்மா என்றார் பாரதியார் ஒரு உரைநடையில். இந்த ஞானம் வரவேண்டும். அதனுடைய விளவு என்ன? இயற்கையிலே ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. என்ன என்றால், ஒரு உயிர் இன்னொரு உயிரை சாப்பிட்டுத்தான் வாழவேண்டும். இறைவன் அப்படி வைத்திருக்கிறான். ஒரு உயிர் இன்னொரு ஜடத்தை சாப்பிட முடியாது. ஆகையினால்தான் சித்தர் பாடினார் கல்லைத்தான் மண்ணைத்தான காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா சாப்பிட முடியாது. மக்கிப்போன நெல்லை நீங்கள் சாப்பிட முடியாது. உயிர்ச்சத்து உள்ள நெல்லில் உள்ள அரிசியைத்தான் நீங்கள் சாப்பிடவேண்டும். இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. என்ன செய்யலாம்? கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற பழமொழிக்கு சைவ சித்தாந்தத்தில் ஒரு அர்த்தம் உண்டு. நான் வேறு தினுசாக அதை வாங்கிக்கொண்டேன். அதற்குப் பொருள், கொன்றதால் வரும் பாபம் அந்த வினைக்கான விளவைத் திண்றால் போகும் நான் முன்பே சொன்னேன். ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய வினைக்கான விளவைப் புசிக்கவேண்டும். அப்பொழுதுதான் முக்தி வரும், இறைவனடியைச் சேரமுடியும். ஆனால் இது எப்படி என்றால் கொன்றால் பாவம் தின்றால் போச்சு. திண்பதற்காகக் கொன்றால்தான் அது பாவம். அப்பொழுதும் பாவம்தான். ஸ்வைட்சர் சொன்னார் உயிர் கொலை பாவம் ஆனால் வேறு வழியில்லாமல் நீங்கள் கொல்லுகிறீர்கள் உண்டே ஆகவேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் வாழமுடியும். இயற்கையின் விதி அப்படி இருக்கிறது. புலி ஆட்டைக் கொல்கிறது. நாம் என்ன செய்யலாம்? உயிர் கொலையை எப்படிக் குறைக்கலாம்? றூழிதுஷ்ஐஆ என்று ஒன்று இருக்கிறது. வேட்டை ஆடுதல். அது நமக்கு உல்லாசப் பொழுதுபோக்கு. யூஸஐஉ க்ஷூலி யிஷ்க்ஷூ என்கிற இந்தக் கருத்து இருக்குமானால் அவன் தேவைக்குத் தவிர அடுத்த உயிரைக் கொல்லமாட்டான். விளயாட்டுக்காகக் கொல்ல மாட்டான். அப்படி வாழ்ந்தால்தான் இந்த நாகரிகம் வாழ்கிறது என்பதை ஸ்வைட்ஸர் கண்டுபிடித்தார். அதற்குக்கூட சுவாமி உயிர்கொலை கூடாது என்பதைக் கற்பிப்பதற்காக, எந்த ஊரிலே சொல்கிறார், எந்த மக்கள் மத்தியிலே சொல்கிறார். நம்முடைய எல்லா கடவுள்களுக்கும் ஆடு கோழியை பலியிடுவதே நம்முடைய வாழ்க்கை முறை. அவர் காலத்திலே வாழ்ந்த பிராமணர்களுக்கு அவர் சொல்லவில்லை. சாதாரண படிப்பறிவில்லாத மாக்களாக வாழ்ந்துகொண்டிருக்கிற நம்முடைய மக்கள் முன்னாலே வந்து உயிர்கொலை கூடாது என்று சொன்னார். எவ்வளவு பெரிய வேலை! அரசாங்கம் சட்டம் போட்டே நிற்கவில்லை. ஆனால் அதை அவர் கற்பித்தார். அதைக் கற்பிப்பதற்கு, நான் சொல்கிற லாஜிக்குக்கு சாமி பதில் சொல்லியிருக்கிறார், ஷ்ஐமியிஉமிற்ழியி ஆக நான் திருப்தி அடையவில்லை. எனக்கு அது முக்கியமில்லை. அவர் அதற்கு விளக்கம் கொடுத்து விட்டாரா, என்னைத்திருப்தி செய்துவிட்டாரா என்பது முக்கியமில்லை. அவருடைய நோக்கம் என்ன? உயிர்களிடத்தில் அன்பு செலுத்துகிற அந்த அன்பு உள்ளம் இருக்கிறதே, அந்த பாப உணர்ச்சி இருக்கிறதே அதுதான் நமக்கு வெளிப்படுகிறது. எனவே ஜீவகாருண்யத்தில் அவர் விட்ட அறிக்கையில் நீங்கள் சைவ உணவை மட்டுமே உண்ணவேண்டும் அதற்கு ஏகப்பட்ட லாஜிக் சொல்கிறார். ஒரு உயிரைக் கொன்று சாப்பிடுவதற்கும், தாவரங்கள சாப்பிடுவதற்கும் என்ன வேறுபாடு என்று ரொம்ப லாஜிக்கலாக விளக்கம் சொல்லியிருக்கிறார்.

சாமி இறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரையிலே அவர் ஜீவிக்கிறார். அவருடைய தத்துவம் வாழ்கிறது. காரணம் அவர் வாழ்க்கை. மற்றவர்களப்போல எழுதி வைத்துவிட்டு அவர் மடிந்து விடவில்லை. சாதித்துக் காட்டினார். அன்பிலே இருக்கிற ஒரு பெரிய வசதி கொடுக்கக் கொடுக்க வளரும். அன்பு என்பது இன்ப மயமானது. நீங்க அன்போடு ஒரு விஷயத்தைப் பாருங்கள். உங்களுக்கு மகழ்ச்சி வரும். அன்போடு அடுத்தவரோடு பேசுங்கள். நீங்கள் அன்பாகவே இருந்துவிட்டு ஒரு நாள் தூங்கப் போங்கள். நிம்மதியாகத் தூங்குவீர்கள். அனுபவத்திலேயே பார்க்கலாம். ஒருவரோடு சண்டை போட்டு விட்டு, மோசமாகத் திட்டிவிட்டு நீங்கள் படுக்கப் போங்கள். தூக்கம் வராது. அன்பு உங்கள் உள்ளத்தை லேசாக்கி விடுகிறது. Relax please என்ற ஒரு தத்துவமும் வேண்டாம். பாரதியார் சொன்னார். அதை பைபிளிலிருந்து அதை எடுத்திருக்கிறார். ஆனால் கருத்து ரொம்ப முக்கியம். ஒரு பாட்டிலே சொல்கிறார்.

இந்தப் புவிதனில் வாழும ரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களச் சூழ்ந்த கொடிகளும்
ஒளடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில்செய்து வாழ்வன வோ

மானுடரு ழாவிடினும் வித்துநடா விடினும்
வரம்புகட்டா விடினுமன்றி நீர்பாய்ச்சா விடினும்
வானலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றே?

இது வள்ளலாரின் வழியிலே வந்து அவரிடம் அருள்பெற்ற பாரதியார், அவரைப் படித்து உணர்ந்த பாரதியார். இதுவரையிலே மரபிலே இல்லாத ஒரு புதிய ஞான பரபை உருவாக்கியவர் வள்ளலார் அந்த மரபின் வழித்தோன்றல் பாரதியார். நீங்கள் மனதில் அதை வைத்துக்கொள்ளவேண்டும். மற்ற கவிஞர் எல்லாம் சிறக்காமல் பாரதி மட்டும் மகாகவி ஆனது ஏன்? வள்ளலாருடைய ஞான மரபிலே வந்தவர் பாரதியார். அவர் சொல்கிறார் யான் எதற்கும் அஞ்சுகிலேன்; நான் முன்பு படித்தேனே எனக்கு பயம் இல்லை வள்ளலார் சொன்னாரே அதே வார்த்தை.

யானெதற்கு மஞ்சுகிலேன் மானுடரே நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின் பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர் உணவியற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழிலிங்கு அன்பு செய்தல் கண்டீர்

நீ செய்யவேண்டிய வேலை என்ன? அன்பு செயல் கண்டீர். இந்த அன்பு என்ற ஒன்றுதான் நிலையாக உங்கள வளர்த்துக்கொண்டே இருக்கிறது. உள்ளத்திலே அன்பு இருக்குமானால் நமக்கு வேறு எதுவும் வேண்டாம். எல்லாம் தெளிவாகத் தெரியும். வஞ்சனை பொறாமை சூது, அன்பு இல்லாததால் வருவது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு

நீங்கள் கொடுக்கக் கொடுக்க வளர்வது ஒன்றுதான். ஒன்று அன்பு இன்னொன்று அறிவு. செல்வத்தைக் கொடுத்தால் அது தேயும். உங்கள் உடல் வலிமை போகும். சொத்து சுகங்கள் போகும். ஆனால் அன்பு கொடுக்கக் கொடுக்க வளரும். இரண்டும்தான் கொடுப்பவனுக்கும் இன்பம் வாங்குபவனுக்கும் இன்பம். அறிவு என்பது அடுத்தவனுக்குக் கொடுக்காமல் இருக்குமானால் அது பாசிப் பிடித்துப்போகும். ஒரு ஆசிரியன் கற்றுக்கொடுக்காமல் இருப்பானானால் அவனுக்கு கல்வி மறந்துபோகும். அன்பு கொடுக்காமல் இருந்தால் இவன் அன்பற்றவன் ஆகிவிடுவான். அன்பு கொடுக்கக் கொடுக்க வளர்கிறது. ஆகவேதான் அன்பு செயல் வேண்டும். அது ஒன்றை மட்டும்தான் நாம் செய்வதே இல்லை.

இன்றைக்கு இருக்கிற அவ்வளவு துன்பங்களுக்கும் காரணம் என்ன? வள்ளல் பெருமான் எல்லாவற்றையும் ஆழமாகப் பார்த்தார். சாத்திரக் குப்பையை எறுவாக்கிப் போட்டு என்றார். அவர் கல்லாத சாத்திரமா? அவர் கல்லாத கல்வியா? அவருக்குத் தெரியாத தத்துவமா? எத்தனையோ பேரிடம் தத்துவ வாதங்களச் செய்திருக்கிறார். எவ்வளவோ ஞானிகளாடு வாதப்போரிலே வென்றிருக்கிறார். அவர் எப்படிப் படித்தார்? அவர் கல்லாமல் கல்வி கற்றிருக்கிறார். ஈசனே அவருக்கு ஆசானாக இருந்து போதித்திருக்கிறார். அப்படித்தான் சுவாமி சொல்கிறார். அதை நான் ஏன் சந்தேகப்படவேண்டும்? இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. உலகத்தையெல்லாம் இராமகிருஷ்ணருக்காக வென்றுவந்த விவேகானந்தர் எவ்வளவோ படித்தவர். ஆனால் அவருடைய குருவான இராமகிருஷ்ணர் படிப்பறிவில்லாதவர். அவரைவிட ஞானம் உண்டா? ஆனால் சுவாமி அப்படிக் கூட இல்லை. இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு மேலே. எத்தனை வகையான பாடல்கள்! எத்தனை அகத்தினைப் பாடல்கள்! எத்தனை சிந்துப் பாடல்கள்! தமிழ் இலக்கிய வகைகளிலே பிரபந்த வகைகள் எத்தனை உளவோ அத்தனையிலும் பாடல்கள்! தமிழ் கரடுமுறடானப் பாடல். தொழுவூர் வேலாயுத முதலியார், தானே சில பாடல்கள இயற்றிக்கொண்டு மாணவர் ஆசிரியரை சோதித்தார். ஆசிரியர்தான் இவனுக்குப் பாடம் சொல்லலாமா என்று சோதித்து இவன் பாத்திரமா? இவனுக்கு சொல்லிக்கொடுக்கலாமா? என்று முடிவு சொல்லவேண்டும். ஆனால் தொழுவூர் வேலாயுத முதலியார் இவர் தான் கொள்ளத் தகுந்த குருவா என்று சோதிக்க, இவர் அறிவை சோதிக்க நல்லப் பாடல்களக் கட்டிக்கொண்டு சங்கப்பாடல்கள் என்று கொடுத்தார். பெருமான் அதைப் பார்த்தார். இது சங்கப் பாடல்கள அல்ல. தெரியாத ஒரு பிள்ளமைத் தனமாக எழுதியப் பாடல்கள். இதிலே இவ்வளவு தப்பு இருக்கிறது என்று சொன்னார். அவ்வளவு ஞானம். எல்லாத் தத்துவங்களயும் பயின்று அதற்கு மேலே அவர் தன்னுடைய சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

தன்னுடைய தத்துவத்தைச் சொன்னார். உருவ வணக்கம் செய்ய வேண்டும் என்று பிரம்ம சமாஜ அறிஞர்களாடு வாதம் செய்தார். அந்தந்த பக்குவம் உள்ள ஆன்மாக்களுக்குத் தகுந்தார்போல் உருவ வணக்கம் அருவ வணக்கம் அருஉரு வணக்கம் என்று சொல்லியிருக்கிறார். சுவாமி வாதாடினார். ஆனால் அவருக்கு உருவம் தேவையில்லை. கடவுள ஒளியாகக் காண்பதை கடைசியாக அவர் நிறுவினார். அதற்குப் போவதற்கு என்ன வேண்டும்? முஸ்லீம் போகலாம்; கிருத்தவன் போகலாம்; புத்தன் போகலாம். கடவுள் நம்பிக்கை உடைய யாரும் போகலாம். அருள் ஜோதியாக. இறைவனை சொல்லுகிற எல்லா மதங்களும் இறைவனை ஜோதி என்றே சொல்கிறது. இறைவன் இருட்டு என்று எங்காவது இருக்கிறதா? பைபிளில் சொல்கிற கதையில் மோஸஸ் கடவுளக் காண மலையிலே போகிறபோது, புதரிலே ஒளியாக யகோவா வந்தார். எனவே எல்லா மதங்களும் ஒத்துக்கொள்கிற ஒரு தன்மையை, குணங்களற்ற இறைவனுக்கு குணமாக நாம் கொள்கிற ஒன்று. இறைவனுக்கு குணம் கிடையாது. ஆனால் எதைக் குணமாகக் கொள்கிறோம்? அவர் பேரொளியாக விளங்குகிறவர். எனவே அவர் ஒளியாக வைத்தார். எல்லா சடங்குகளயும் விட்டு, உள்ளத்திலே அன்போடு, உயிர் இரக்கத்தோடு நீங்கள் ஜோதியை வணங்கினால், எல்லா புண்ணியமும் உங்களுக்கு வரும். இதற்கு வள்ளல் பெருமான் நமக்கு வழிகாட்டினார். அதைவிட, வாயாலே சொல்லிவிட்டுப் போய்விடலாம் ஒரு துறவி. அவரே வரிந்து கட்டிக்கொண்டு அன்னசாலை வைத்தாரே! அவர் இன்னொன்றைக் காட்டுகிறார் நமக்கு. அன்பு என்ற ஒன்று உங்களுக்கு இருக்குமானால், உலகத்திலே அதற்குப் பிரதிபலிப்பு இருக்கும். அன்பு அன்பைக் கொடுக்கும் ஆதரவு பெருகும். நான் அன்பு செய்கிறேன். ஒருவன் அன்பு செய்யவில்லை என்று சொன்னால், அடுத்தவன் அன்பு செய்கிறானா? என்றுப் பார்த்து செய்வது அன்பு அன்று. அவனுக்கு என்னைப் பிடிக்கிறதா இல்லையா என்று பார்த்து செய்வது அன்பு அல்ல. ணூமி ஷ்வி விற்லி யிலிஸ அது பொய் அன்பு. அரசியல்வாதி ஓட்டுக்கு காட்டுகிற அன்பு. பிறன் என்ன செய்கிறான் என்று தெரியாமல் செய்வதுதான் உண்மையான அன்பு. அந்த அன்பு இருக்குமானால், அது கல்மனத்தைக் கரைக்கும். சுவாமிகள் வடலூரிலே போய் மடம் வைக்கவேண்டும் என்று கேட்டபோது, என்பது காணி நிலத்தை நாற்பது பேர் கொடுத்தார்கள். அதிலே 23 பேர் கீரல், இனாம் சாசனம் எழுதிக் கொடுத்தார்கள். கொடுத்தவர் அத்தனை பேரும் பெரிய தனவந்தன் அல்ல. ஜமீன்தார் அல்ல. பேரைப் படித்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அதிலே. பல ஜாதிக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு ஏக்கருக்குக் குறைவான நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் அவர்களுடைய ஜீவனாக இருந்திருக்கும். எப்படிக் கொடுத்தார்கள்? வள்ளல் பெருமானிடம் பொங்கி வழிந்த அன்பு. அவர்கள அந்த நிலத்தைக் கொடுக்க வைத்தது. இன்றளவும் சோறு போடுகிறார்கள எந்தக் கோடீஸ்வரர்கள் கொடுக்கிற பணம்? எனக்குத் தெரிய எங்கள் ஊரிலே எங்களுக்கு வேண்டியவர் ஒருவர் இருக்கிறார். இப்போது பழவண்டி வியாபாரத்தோடு நிறுத்தி விட்டார். தைப்பூசம் தவறாமல் அங்கு போவார். அவரிடம்தான் நான் பணம் கொடுப்பேன். எத்தனை லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசத்திற்கு அங்கே கூடுகிறார்கள்! எவ்வளவு பேர் கொடுக்கிறார்கள். எப்படி அது நடைபெறுகிறது? ஒவ்வொரு ஆண்டும் வளர்கிறதே, எப்படி அது வளர்கிறது? வள்ளல் பெருமானுடைய உண்மையான அன்பு. அவருடைய தெய்வத் தன்மை. அந்தத் தெய்வத்தன்மை அன்பாக வெளிப்பட்டது. வெறும் சடங்காக அல்ல. வெறும் சாஸ்த்திரங்களாக அல்ல. எழுத்திலே அல்ல. உண்மையில் செயலில். தத்துவத்தை சொல்லிக் கொண்டிருப்பதிலே என்னப் பயன்? நீங்கள் வாழவேண்டும். சாமி வாழ்ந்து காட்டினார். ஊர் ஊராகப் போய் பேசியிருக்கிறார் இல்லற வாழ்வு நடத்தவில்லை. அவருக்கு அதிலே ஈடுபாடு இல்லை. ஆனால் யாரும் திருமணம் செய்துகொள்ளகூடாது என்று வள்ளலார் சொல்லவில்லை. எத்தனையோ இல்லறத்தார் அவருக்கு சீடர்கள். அவருக்கு அதிலே ஈடுபாடு இல்லை. அதற்கு யார் என்ன பண்ணமுடியும்? நம்முடைய மரபிலே எல்லா ஞானிகளும், துறவிகளாகவும் இருந்திருக்கிறார்கள். இல்லறத்திலும் இருந்திருக்கிறார்கள். வள்ளல் பெருமான், துறவி வேஷத்தைப் போடவில்லை. தனக்கு ஆடை அலங்காரம் புனைவுகள் இல்லை. சந்நிதானங்களப் போல, சடங்குகள வைத்துக்கொண்டு தங்க சிம்மாசனத்தில் அமரவில்லை. சாமிகள் போகிறபோது யாரும் பாதுகாப்புக்குப் போகவில்லை. அவர் கையிலே ஒரு பைசா இருந்ததா? அவருக்கு இருந்த மூலதனம் எல்லாம், அவரிடம் இருந்த அன்பும் அருளும்தான். அது எதைக் காட்டுகிறது? இன்றைக்கும் என்றைக்கும், அந்த சத்தியமும் அன்பும் இருந்தால் நடைபெறும். தம்பையா அவர்களுக்கு என்ன சொத்து இருக்கிறது என்பது தெரியாது. ஆனால் நம் கண் முன்னால் இது நடக்கிறதே! இது ஏன் எங்கும் நடக்கக்கூடாது? இந்த அன்பும் இந்த கருணையும் ஏன் எங்கும் பரவக்கூடாது? நாம் உண்மையிலேயே அன்பை செலுத்தத் தொடங்கினால், எல்லா ஆரவாரங்களும் ஒழிந்து, எல்லா வேற்றுமைகளும் ஒழிந்து, வன்முறைகள் நிச்சயமாக ஒழியும். ஆனால் அன்பு நமக்கு முக்கியமில்லை. நம் மதங்களல்லாம் என்ன சொல்கிறது? போய் நீங்கள் சாமி கும்பிடுங்கள். இறைவன் அருளப் பெருங்கள் என்று சொன்னால் நியாயம். ஏன் கிருத்துவன் போகிறான், முஸ்லிம் போகிறான். என்ன நியாயம் இது? அவன் போவதைப் பார்த்துத்தான் இவன் போகிறேன் என்கிறான். கடவுளிடம் ஈடுபாடு இல்லை. வேறு ஒருவன் மீது இருக்கிற வெறுப்பை கொட்டித் தீர்ப்பதற்கு இவன் கோயிலுக்கு போகிறான். எப்படி அன்பு இருக்கும். நீங்கள் எப்படி இறைவனோடு கலக்க முடியும்? நீங்கள் உங்கள் வழியிலே அன்பைச் செலுத்தினால் எல்லா இடத்திலும் அது பிரதிபலிக்கும்.

பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று பாரதியார் சொன்னாரே. மகாகவியை இவர் ஏன் போற்றினார். வள்ளலாருக்குப் பிறகு அடுத்தவர்களுக்கு உயிரைவிட துடித்த ஒரே ஜீவன் பாரதியார்தான்.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
துஞ்சி மடிகின்றாரே இவர்
துயர்களத் தீர்க்கவோர் வழியில்லையே

அந்தப் பாடலில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பாடலின் பிரதிபலிப்பை நீங்கள் உணரலாம்.

பேசாப் பொருள பேசநான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்

என்ன வரம் கேட்டார்?

மண்மீ துள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே

வள்ளலார் அங்கு நிற்கிறார். அவர்தானே இதைக் கேட்டார்.

ஈடில் மானிகளாய் ஏழைகளாய்

என்று பாடிவிட்டுப் போகவில்லை. அந்த பசியைத் தீர்க்கப் பாடுபட்டார்.

பாரதியார் சொன்னார்,

யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே.

பாடிவிட்டுப் போகாதே, நீ செய். அப்படி செய்தால் இறைவன் உனக்குத் துணை நிற்பான். தன்னுடைய செயல் எல்லாம் இறைவனுடைய செயல் என்றே வள்ளலார் செய்தார். இறைவன் செயல் என்று அவர் சொல்வது உண்மையா பொய்யா என்பது வேண்டாம். விளவைப் பாருங்கள். வள்ளலார் பெயரைச் சொல்லி அடித்துக்கொள்ள முடியுமா? வள்ளலார் உங்கள் உள்ளத்திலே இருந்தால் இன்னொருவரை அடிக்க கை ஓங்க முடியுமா? எந்த முரடனாக இருந்தாலும் அருட்பாவைப் படித்து விட்டால் அன்றைக்காவது அவன் முரட்டுத்தனம் நீங்கி இருப்பான். நீங்கள் அனுபவிக்கலாம். அதை வாழவேண்டும். அன்பு என்ற ஒன்று இல்லை என்றால் மனிதனை மனிதனாகப் பார்க்காமல், எல்லா மனிதனும் இறைவனுடைய உருவங்கள். வள்ளலாருக்கு எப்படி அந்த அன்பு வந்தது? அவர் இறைவனை மனித உருவத்திலே பார்த்தார். ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செயல்வேண்டும். அதுதான் தெய்வ வணக்கம். அதுவே இறைவனுக்கு செய்கிற தொண்டு. இல்லாவிட்டால் ஏன் அவர் அடுப்பு பற்றவைத்து தர்மச் சாலை உருவாக்கவேண்டும்? அவருடைய சங்கமும், ஜீவகாருண்ய ஒழுக்கமும் இன்னொருவரை பழிப்பதற்கு அன்று. இன்னொருவரை எதிர்ப்பதற்காக அன்று. ஆனால் அவையெல்லாம் பிள்ள விளயாட்டு என்றார். நடைவண்டியைக் கையில் வைத்துக்கொண்டு நடந்துகொண்டு போகிறான். பெரிய பிள்ளயாகப் போனபிறகு நடைவண்டி வைத்துக்கொள்வானா? அப்புறம் அவனே ஓடுகிறான். அப்புறம் அவன் கார் ஓட்டுகிறான். நான் முன்பு ஓட்டியது நடைவண்டியாச்சே என்று கையில் வைத்துக்கொண்டிருக்க முடியுமா? எனவே உங்களுடைய படிப்பு எல்லாம் உங்கள் சாஸ்திரங்கள் எல்லாம் பிள்ள விளயாட்டு என்றார். இந்த சமயங்கள் எல்லாம் பிள்ள விளயாட்டு என்றார். அதனால் சமயம் என்று சொல்லுகிற எல்லாம் அயோக்கியத்தனம் என்று நான் சொல்ல வரவில்லை. லிங்கம் என்பதற்கே என்ன அடையாளம்? என்ன பொருள்? சொல்லுகிறார்கள், அது ஒரு குறியீடு. இறைவனைக் காட்டுகிற ஒரு குறியீடு. அதுவே இறைவனன்று. இறை உணர்வு உங்களுக்கு முழுமையாக வந்துவிடுமானால், அது தேவையில்லை.

அதனால்தான் சித்தர் பாடினார்.

கண்டக் கண்ட கோவிலில் கையெடுப்பதில்லையே

நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று
சொல்லும் மந்திரமேதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?

திருமூலர் சொன்னார் பெரிய சாஸ்திர நூல். சித்தாந்த சாஸ்திரம் சொல்கிற எல்லாரும் அது தோத்திர நூலாகவும், சாஸ்திர நூலாகவும் கொள்ளப்படுகிற ஞான நூல், திருமூலர். அவரைவிட என்ன சொல்லவேண்டும்?

உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவர் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காலா மணிவிளக்கே

உடலை நீங்கள் ஓம்பினாலே உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார். உயிர் என்பது, ஆங்கிலத்தில் யிஷ்க்ஷூ என்று ஒன்று இருக்கிறது, விலிற்யி என்று ஒன்று இருக்கிறது. ஆனால் தமிழில் இரண்டும் ஒன்றுதான். உயிர் என்பது ஆன்மாவையும் குறிக்கும், ஸ்ரீஜுதீவிஷ்உழியி ஆக உயிரையும் குறிக்கும். அதுமட்டும் அல்லாமல் திருமூலர் நான் முன்னால் தொடங்குகிறபொழுது, திருமூலருடைய பாட்டைச் சொன்னேன். அந்தப் பாட்டுக்கு மேலே அவர் அழுத்தமாகவும் சொன்னார்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே

நீங்கள் என்ன செய்தாலும் சரி, அன்போடு உருகினால் தவிர நீங்கள் இறைவனை அடைய மாட்டீர்கள்.

என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே.

இறைவனுக்கு நீங்கள் அன்பு செய்யச் செய்ய, ஐயா அவர்கள் முதலிலேயே சொன்னார்கள். இந்தத் திருமந்திரத்தை

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

வாழ்க்கை பணம் பொருள் என்று நீங்கள் அலைய அலைய உங்களுக்கு பவத்தொடக்கைதான் வரும். எப்பொழுது பவத் தொடக்கைப் போகும்? இறைவனைச் சேர்கிறபொழுது. இறைவனை நீங்கள் எப்பொழுது சேர்வீர்கள்? அன்பால் நீங்கள் உருக உருக இறைவனை நாடுவீர்கள். அன்பு என்பது என்ன? வெறும் வெளியிலே சொல்லுவதா? அன்பு என்பது உங்கள் செயலிலே வெளிப்படவேண்டும். கடிந்து பேசாமல் இருப்பதுகூட அன்புதான். நீங்கள் நேரே அன்போடு கலந்து பேசினால்? குழந்தைதான் டெஸ்ட். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டுப் போனால் அது ஓடுகிறது. சிலரைப் பார்த்தால் அது தானே வருகிறது. தாயைப் பார்த்தால் போகிறக் குழந்தை தந்தையைப் பார்த்தால் வருவதில்லை. தாயிடம் கிடைக்கிற அன்பு தந்தையின் முகத்திலே தெரியவில்லை. அது உள்ளத்துக்குத் தெரியவேண்டும். அன்பு என்பது தெரியும் உங்கள் பேச்சிலே செயலிலே எல்லாவற்றிலும் அன்பு வெளிப்படும். அப்படி வெளிப்படுவது எப்பொழுது வரும். உங்கள் உள்ளத்தை பேரன்பால் நிறைத்துக்கொண்டு நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும் அதனுள்ள அன்பு விளயும். அப்படிக் காரியங்கள நாம் செய்வதுதான் வள்ளல் பெருமானை நாம் உண்மையிலேயே வாழ்கிறோம். வணங்குகிறோம் என்று பொருள்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி

வள்ளலார் திருவடிகள சரணம்.

(தஞ்சாவூர், வள்ளலார் அறக்கட்டளயில் ஆற்றிய உரை)