அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

பகுத்தறிவு
பகுதி: 2

பகுதி: 1 2 3 4

» பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட புறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.

» பழைய இலக்கியங்கள் காவிய சுவை ததும்பலாம். நடையழகு நன்றாக இருக்கலாம். ஆனால் தீட்டியவர்கள் வல்லவராகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்காக அவற்றில் காணப்படும் கருத்துக்கள் என்றும் மாற்ற முடியாதவை என்று கூறமுடியுமா?
(09.02.1952)

» அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காட்டுமிராண்டித்தனங்களால் மனிதன் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறான். இந்த அடிமை விலங்கொடிக்க வன்செயல்களை படியவைக்க பகுத்தறிவு தலைதூக்கவேண்டும்.

» புதிய கருத்துக்கள் பல தோன்ற வேண்டிய நேரம் இரு வேறு லோகத்தில் இருப்பதைப்பற்றிய சந்தேகங்களை இந்த லோகத்தில் கேட்பது தவறாகும்.

» வேதாந்த விசாரத்தில் மூழ்குகிறோமே தவிர, வேதாந்த விசாரத்தை தொட்டுத் தழுவும் மூளையின் பலத்தையும், பலவீனத்தையும் இறமைப்படுத்திப் பார்க்கிறோமா?

» நல்ல எண்ணங்கள தூவினால்தான் அவை நல்ல பலனைத்தரும். பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்திலும் நல்லெண்ணத்தை விதைத்தாலும் அது நல்ல விளைவைத் தராது.

» நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்தில் புது முறுக்கு ஏற்படும்.

» ஏழைகள் இதயத்திலே களிப்பூட்டும் பணிபுரிதலே, பகவானுக்குத் தேர் திருவிழா யாவும்! தூய உள்ளமே கோவில். நலிந்தோரை தேற்றுவதே தோத்திரம்.

» தேவையற்றவை, துது தருபரை, பொருளற்றவை, பொருத்தமற்றவை, இவையெல்லாம் பழமையின் பெயர் கொண்டோ, நமது உடமை என்ற பாசம் காட்டியோ தெளிந்திடக் கண்டிடின் விட்டுவைத்திடாமல், அவற்றினை நீக்கிடும் அறப்போரினை தொடுத்திடல் வேண்டும்.

» சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்பொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால் நாட்டிலே பரவிக்கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே.

» நமது மனம் ஒரு மியூசியம்போல் இருக்கிறது. எது கொள்ளத் தக்கதோ, அதை ஏற்றுக்கொள்ளுங்கள். எது தள்ளத்தக்கதோ அதைத் தள்ளிவிடுங்கள்.

» சில குணம் எப்படி தன்னால் மடிந்தொழியும். கடவுள் அதனை ஒரு நாள் அழித்தே தீருவார் என்று எண்ணிப் பயனில்லை. தீய குணத்தை ஒழித்திட நாம் தீவிரமாகப் பணியாற்றி தீரவேண்டும். கடவுள் தூய சக்திகளை ஒழிப்பதில் வெற்றிபெறவில்லை. அவரை மூலைக்கு ஒதுக்கிவிட்டு தீய சக்தி மணிமாடத்தில் கொலுவிருக்கிறது. எனவே, கடவுளின் காரியத்தைச்செய்ய தன்னலத்தை விட்டொழித்து பணிபுரிய வேண்டும் துறவிகள் வேண்டும், தூய மனத்துடன் தொண்டு புரிய.

» கண்மூடிப் பழக்கமெல்லாம், மண்மூடிப்போகவேண்டும் என்று மெய்சிலிர்க்கப் பாடுகின்றோம். ஆனால் நம் கண்முன்னே காணப்படும். காலத்துக்கொவ்வாத கண்மூடிப் பழக்கங்களைக் கண்டிப்பதில்லை. கண்டும் காணாததுபோல் கவலையற்று வாய்மூடி மௌனியாகக் கிடக்கிறோம். இது நியாயமா?

» விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு, தீங்கு.

» மக்களிடையே மத மூடநம்பிக்கைகளைப் போக்கி சாதி, சமய பேதங்களை அகற்றி சமத்துவத்தையும் சன்மார்க்த்தையும் ஏற்படுத்தி, அஞ்ஞானத்தை நீக்கி விஞ்ஞான உணர்வை ஊட்டி, தன்னம்பிக்கையும் தளராத உழைப்பையும், ஊக்கத்தையும் உண்டாக்கித் தீரவேண்டும்.

» புதிய சாதனங்களால், பழைய கருத்துக்களைப் பரப்பிட, பயன்படுத்திடத் தவறவில்லை. அதே நேரத்தில் புதுமைக் கருத்துக்களுக்கு வித்திடும் விவேகப் புத்தியைக் கையாண்டிட மறுத்திடும் நிலை! மூட நம்பிக்கையில் முற்போக்கு இலக்கியங்களுக்கு முட்டுக்கட்டை போடும் நிலை! இந்த நிலை மாறவேண்டாமா? மாற்றப்படவேண்டாமா?

» மாறுதலைக்கண்டு மக்கள் மறுண்டனர். மாறுதலே தேவை இல்லை என்றும் கூட எண்ணினர், மனித வாழ்விலே மாறுதலுக்கான அறிகுறி ஆரம்பித்த நேரத்திலே.

» உலகம் தட்டையல்ல! நீண்ட சதுர வடிவமானதல்லை! தட்டைப்போலத்தான் கண்ணுக்குத் தொன்றுகிறது. ஆனால் கருத்தூன்றி கவனித்து உலம் ஒரு உருண்டை, உருண்டை வடிவமானது என்று முதன் முதலில் கூறிய கலீலியோ கல்லடிப்பட்டார். ககூன் - கடவுள் தன்மைக்கே விரோதி என்ற தூற்றுதல் மொழிகளுக்கெல்லாம் ஆளானான். (09.02.1952)

» சிறுக சிறுக ஆளையே விழுங்கிடும் நோய் உடலின் சத்தான பகுதிகளைச் சிறுக அரித்தே ஆளைச் சாகடித்துவிடும். நமது அடிப்படை பண்பையே அழித்திடும் நோய் நம்மை பிடித்திருக்கிறது. எனவே நம்மை நாமே உணர்ந்தாகவேண்டும். சிந்தனைச் சோலையில் மறுமலர்க்சி பூத்திடச்செய்யவேண்டும்.

» காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் சிலருக்குத் தம் சொந்த வாழ்க்கையிலேயே நேரிடும் சில, பல சம்பவங்கள் மனமாற்றத்தை ஆச்சர்யமான விதத்திலும் வேகத்துடனும் தந்துவிடுகின்றன.

» நாகரீக நாட்கள் மலிந்துவிட்டதாகக் கூறுகிறோம். ஆனால் இன்னும்கூட நடையிலே, உடையிலே நாகரீகத்தைக் காண்கிறோமே தவிர, எண்ணத்திலே பேச்சிலே, பழய நஞ்சு அப்படியே இருக்கிறது.

» காலத்துக்கேற்ற கருத்துகளே தேவை! கருத்துகளுக்கேற்ற காலம் அல்ல. காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை ஒதுக்கவேண்டும், போக்கவேண்டும்.

» வாழ்வுச் சிக்கல்களைச் சீர்படுத்தி, செப்பனிட்டு முரண்பட்ட கொள்கைகளிலே தெளிவடைந்து, மூடநம்பிக்கைகளை முறியடித்துச் சுய சிந்தனையாளனாக மனிதன் மாறிடவேண்டாமா?

» நாகரீக வாழ்வு - நல்வாழ்வு வாழ்ந்திட, மக்களைத் தயார்செய்திடுவதே இன்றய பணி, முதற்பணி, முக்கியப்ணி, மக்கட் பணி, மனிதாபமானம் படைத்த வெரும் இந்த முயற்சியில் ஈடுபடத் தயங்கிடவோ, மயங்கிடவோ, மருண்டிடவோ கூடாழது, கூடாது!

» பயன் தரும் எந்தக் காரியமும், தரமுள்ளவையாகத்தான் இருந்திடவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. துவக்கத்தில், பயன் பெரியதாகவும் தரம் சிறியதாகவும் இருக்கலாம். பயன்பெருகப் பெருக, தரத்தை உயர்த்தி பண்படுத்திட முடியுமே!

மதப்போர்பை
எவ்வளவோ அறிவுத் தெளிவும் ஆராய்ச்சி திறனும் வளர்ந்துள்ள இந்த நாட்களில் மக்களிடம் கப்பிக்கொண்டுள்ள ஏமாளித்னத்தை பயன்படுத்திக்கொள்ள எத்தர்களால் முடிகிறதே! உருவத்தைக் கண்டும் புளைந்திடும் கோலம் கண்டும் பேசிடும் மொழியின் பாங்கு கண்டும், புனிதத் தன்மை பற்றிய பேச்சைக் கேட்டும் மக்கள் மயங்கிப் போகிறார்களே என்று எண்ணி கவலை மிகக் கொண்டேன். மதப் போர்வை அத்தகைய மன மயக்கத்தை தருகிறது. புரிகிறது! எதனை நாம் புனிதமானது என்று நம்பி போற்றுகிறோமோ. அந்த புனிதத்தையே புரட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் புல்லர்கள் உலவியபடிதான் இருக்கிறார்கள். விழிப்புடன் இருந்தாலொழிய எத்தர்கள் கிளம்பியபடிதான் இருப்பார்கள் மக்களை ஏமாளியாக்கியபடிதான் இருப்பார்கள்.
(கழுகும் கிளியும் - 17.07.1966)

» கிடைத்த பாலை குழந்தைக்கு தந்து மகிழ்ந்திடும் மதியூகியும் உண்டு. பாம்பு புற்றுக்கு வார்த்துவிட்டு பரமபதத்துப்பேரேட்டிலே பெயர் பதிவாகிவிட்டது என்று எண்ணிக்கொள்ளும் ஏமாளியும் உண்டு!
குற்றம் பாலில் இல்லை!
(கடிதம், 23.09.1956)

» . . . . . கேவலமான பழக்கங்களையும், அர்த்தமற்ற திருவிழக்களையும், பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான், நாம் உண்மையிலேயே முன்னேறமுடியும். ஆகவேதான் சீர்திருத்த திருமணங்கள் நடப்பதின் மூலம் அறிவுப்பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிறதென்று குறிப்பிடுகிறோம். சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவி கிடக்கும் மூடக் கொள்கைகளை தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! . . . . . இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக் கூடாதா? என்று சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். இப்படிப்பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத்தான் மாட்டோம்; பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துவிடுகிறேன். அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும் ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோரத் தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.

மக்கள் வாழவேண்டும், உலகம் உருப்படவேண்டும், வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்கவேண்டும் என எந்த முனிவராவது எந்த பக்தனாவது, எந்த நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்கமாட்டார்கள்.

. . . . . வைகுந்த பதவியும், சிவலோக வாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும் அவர்கள் பாடிய பாடல்களையும், இந்தத் திருமணத்தில் அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றது.

. . . . . இராமர் காலத்தில் இரயில் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிட முடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள், இருக்க முடியும்! இராமர் காலத்தில் இல்லாத இரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப் போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய பிமானம் இல்லையென்று ஆகாய விமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராசா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா தள்ளிவிடுகிறார்கள், கிடையாதே!

எனவே அந்தக் காலம், அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்காலப் பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பிடிவாதம் செய்வதும், பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.

எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தோயானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப பின்பற்றவேண்டுமே தவிர, அந்தக் காலப்பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும் பொருத்தமில்லாமலும் பின்பற்றக் கூடாது.
(பொழிவு - சுயமரியாதைத் திருமணம் ஏன்?)

» கல்யாண செலவுக்காகப் பெற்றுவந்தக் கடன் தொகையைக்கொண்டு, காவடித் திருவிழா நடத்திவிட்டால் கலியாணந்ததான் நடக்குமா? பட்ட கடனைத் தீர்க்கத்தான் வழி கிடைக்குமா? கந்தன் அருள் கிடைக்கலாம் அங்கே! மேலே! இங்கே கடன் கொடுத்தவன் பிடிவாரண்ட் அல்லவா அனுப்புவான்!
(கடிதம் - 23.05.1965)

பகுதி: 1 2 3 4


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai