அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

பகுத்தறிவு
பகுதி: 3

பகுதி: 1 2 3 4

» விமானத்தில் பறக்கும் இந்த விஞ்ஞான காலத்திலும் இராமன் காலத்திலே நம்பி சகுனத் தடையை நம்புகிறோம். அரிச்சந்திரன் காலத்துப் பல் சொல் பலனை இப்போதும் நம்புகிறோம். அதன் படியே நடக்கிறோம். சுய மரியாத இயக்கம் இந்தப் போக்கைக் கண்டிக்கிறது. அந்தக் காலத்து கருத்துதான் நமக்குச் சொந்தமானது. அதற்குத்தான் வந்தனை வழிபாடு செய்யவேண்டும். அவை சரியா, தவறா? என்று ஆராய்வதே தெய்வ நிந்தனை என்று பேசப்படும் போக்கை நாங்கள் கண்டிக்கிறோம். கி இரவு மதுரமாயிருந்த பால் காலையில் திரிந்துவிட்டால் சாக்கடைச் சேறாகிறது. மாலையில் மாளிகைகளில் மனோகரிகளின் கூந்தலுடன் கொஞ்சிய மலர், காலையிலே கசங்கயிதும வீசி எறியப்படுகிறது, குப்பையிலே. கொருட்கள் மட்டுமல்ல, எண்ணங்கள், ஏற்பாடுகள், முறைகள் நீதிகள் எனும் எவையும் அப்படித்தான் காலத்துக்கு ஏற்றதாக, சுவைக்கு உதவுவதாகப் பயன் தரத் தக்கதாக, நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்று கூறுகிறோம். இந்த அறிவுப்போர் நடத்தும் எங்களை குறை கூறும் தோழர்கள் உள்ளம் ஒன்று தவிர, ம்ற்றவற்றிலே மாறிவிட்டார்கள்.

» அதை மறைக்கவுமில்லை. இங்கு தவிர மற்ற இடங்களிலே கருத்துக்கள் அவ்வப்போது ஆராயப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டு, புது மெருகிடப்பட்டு, சில நீக்கப்பட்டு, பல புதிதாக ஆறுக்கப்பட்டுள்ளன. செடியிலே மலர் கூத்தாடுகிறது, இணம் வீசுகிறது, மறுநாள் வாடுகிறது, உதிர்கிறது. பிறது வேறோர் மலர் உதிக்கிறது. இரண்டாவது மலர் பூத்திட, அந்தச் செடிக்கு நீர் பாய்ச்சி எருவிட்டுப் பாதுகாத்திடவேண்டும். அப்போதுதான் புதுமல் கிடைக்கும்.
(01.07.1945 - மறுமலர்ச்சி - சிதம்பரம்)

மடங்கள்
கி மடங்கள் சன்மார்க்க சாலையாக, தமிழன் மன்றமாக தமிழர் நல்வாழ்வுக்குப் பயிற்சிக் கூடமாக இருத்தல் வேண்டும் என்பதும், மடத்துச் சொத்துப் பூராவும் இத்தகைய பணிக்கே பயன்படவேண்டிமேயன்றி கையில் அணிந்துள்ள வைர மோதிரத்தின் வெளிச்சம் பச்சை மோதிரத்தின் ஒளியே அடக்க முயன்று தோற்க, அது கண்டு காதுகளிலே தொங்கும் தங்கக் குண்டலம் தகதகவென சிரிக்க, தம்பிரான்கள் காட்சியளிப்பதற்குப் பயன்படக் கூடாது என்ற கருத்துடையோம், நாம் நமது கருத்து காலத்தின் கண்ணாடி என்பதை யாரும் மறுக்கார். தமிழ் மன்னர்கள் அன்று மடாதிபதிகள் மூலம் மக்களின் அறிவும் தன்மையும் வளரவேண்டும் என்றெண்ணியே பெரும் பெரும் சொத்தை ஒப்படைத்தனர். இதனைக் கொண்டு மடாதிபதிகள் மக்களிடை உலவித் தொண்டாற்றி வந்திருப்பின் தமிழ்நாடு எத்தனையோ விதத்தில் முன்னேறியிருக்கும்.
(எங்கள் மடாதிபதி - 06.02.1945)

» மற்றும் கடவுளே இல்லை என்றோ, கடவுள் இருக்கிறார் என்றோ நான் கூறவில்லை. அறிவோடு, ஆற்றலோடு ஆபாசமற்ற கடவுள் இல்லை நமக்கு; இருக்கவில்லை நமக்கு என்பதுதான் கூறுகிறேன். மாசு மறுவற்ற மதம் இல்லை நமக்கு. இனப்பற்று மிகுந்த இலக்கியம் இல்லை நமக்கு. அன்பு தரும், அறிவூட்டும் சமுதாயம் இல்லை நமக்கு. மனிதர் மனித தன்மையோடு வாழச் சுயேச்சை சுதந்திரம் இல்லை நமக்கு.
(நல்ல தீர்ப்பு - பொழிவு - 19.02.1945)

» பகுத்தறிவு என்பது அடிப்படை உண்மைகளையும், வெளிப்படை உண்மைகளையும் மறுதலிப்பதன்று. ஆனால் எண்ணம், செயல் ஆகியவற்றில் உள்ள ஐயுறவு நிலைகளை அழிப்பதாகும். அஃது நூற்றாண்டுகாலமாகப் படிந்துள்ள சிலந்திக் கூடுகளை நீக்க வேண்டியுள்ளதால், துணிச்சலுடன் சலிப்பில்லாமல் உழைத்துப் பகுத்தறிவுனைத் தலையாய நிலையில் நீங்கள் அரசோச்சவேண்டும்
(அண்ணாமலைப் பேருரை, 18.11.1967)

» பகுத்தறிவு வாதத்தில் ஒளிவிளக்கை ஏற்திப் பிடியுங்கள். பகுத்தறிவு வாதம் என்பது அடிப்படை உண்மைகளை நெறிகளை மறுப்பதென்பதில்லை. போலித்தனமான எண்ணடங்களையும் செய்லகளையும் அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு வாதமாகும்.
(அண்ணாமலைப் பேருரை, 1968)

மூடநம்பிக்கை
» அனுப்பிய மணியார்டர் வந்து சேர்ந்ததாக கடிதம் வருவதற்குள் துடி துடிக்கும் அதே மக்கள் மேலுலகம் சென்றுவிட்ட பெரியவர்களுக்கு திவசம் செய்வதன் மூலம் பண்டம் அனுப்பியதாக நம்பிக் கொண்டிருக்கிறார்களே
(கங்கா தீர்த்தம் - 06.06.1965)

கொடுமையும் - கோயில் பூசையும்
அக்ரமம் அநீதி தலை விரித்தாடுகிறது. கொடுமை கொக்கரிக்கிறது கொட்டு முழக்குடன் திருவிழக்களும் நடக்கின்றன சித்தம் உருக பாடிடுவோருக்கு பஞ்சமில்லை செய்த வினையெல்லாம் பொறுத்திடுவாய் சேவற்கொடியோனே என்ற பஜனை பாடிடுவோருக்கு குறைவு இல்லை களவும் நடந்தபடி இருக்கிறது காவல் நிலையமும் புதிதாக அமைந்தபடி இருக்கிறது என்பது போலவேதான் கொடுமையும் இருக்கிறது கோயில்களில் பூசைகளும் குறைவுன்றி நடக்கின்றன என்று இருந்து வருவது! (கிழக்கு வெருத்திடும் வேளை - 21.11.1965)

திந்திக்க
திருப்பதி செல்லும் பஜனை கோவிந்தா, கோவிந்தா என்று முழக்கம் எழுப்புகிறது. பிணத்தை சுமந்து செல்லும்போதும் கோவிந்தா கோவிந்தா கேட்கிறது. ஆனால் அந்த இரண்டு கோவிந்தாவும் ஒன்றா? சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா? - 14.08.1966)

நம்பாதே
பல துறைகளில் பலருக்கு கிடைத்திடும் வெற்றி பொருத்தத்தினாலேயே அமைந்துவிடுவதுமில்லை. தம்பி இவ்விதம் நான் கூறுவதால் அதிஷ்டம் ஜாதகபலன் என்பனபோன்றவைகளை நம்புகிறேன் என்றோ - நம்பச் சொல்கிறேன் என்றோ தவறாக எண்ணிக்கொள்ளாதே!
பொருத்தம் - 17.10.1965

மன வளர்ச்சி
மழலை கேட்டு இன்புறும் தாய் குழந்தை வாலிபனாக பிறகும் சந்தமாமாவை பிடித்துத்தா என்று கேட்டால் மகிழ முடியுமா? மருள்வாள். தாய் மகனுக்கு ஏதோ மனமருள் என்று. அதுபோலத்தான் மனித சமுதாயம் முருக்கேறிய வாலிபப் பருவம் பெற்றிருக்கும் இந்நாளில் குழந்தை பருவத்துக் கதைகளை கற்பனைகளை கூறிக்கொண்டு நம்பிக்கொண்டும் அந்த நம்புக்கையை அடிப்படையாக கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டும் அப்படிபட்ட வாழ்க்கைதான் ஆத்திகம் என்று பேசிக்கொண்டு அதனை சந்தேகிப்பது பாவம் என்று மிரட்டிக்கொண்டும் இருந்தால் மகிழ்ச்சியா பிறக்கும் மதியுள்ளவர்களுக்கு!
(வானுலகவீதியிலே - 05.12.1965)

» அகநானூறு, புறநானூறுகளில் எந்த தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்போது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ, எங்கேயாவது பாடலுண்ட? அல்லது படைகிளம்பி எதிரிகளுடன் போரிடும பொழுதாவது வருணாஸ்திரம், அக்நியாஸ்திரம் ஆகிய அஸ்திரங்களில் எந்த அஸ்திரமாவது எதிரியை வீழ்த்தியபோது உதவியாக எங்காவது பாடல் இருப்பதாகச் சொல்லமுடியுமா?
(பொழிவு - நிலையும், நினைப்பும் - 23.09.1947)

» பழைய காலத்தைப் போல நாம் நடஙகக முடியாது. நடக்கத் தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராக்கிக்கொள்ளவேண்டும்.

» பகுத்தறிவை ஆயுதமாக உடையவர்கள் பயமறியாதவர்கள். இவர்களால்தான் வீழ்ந்த சமுதாயத்தை உயர்த்த முடியும். இதுதான் ஒரே படை - கடைசீபடை. இப்படை வெற்றிபெறும் என்ற நம்புக் எனக்கு உண்டு.

» விஞ்ஞானம் இந்நாட்டில் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது பாலைவனத்தில் வீசியப் பனிக்கட்டிபோல். குருடனிடம் பாடிய சங்கீதம்போல் விஞ்ஞானம் மதிப்பற்று இருக்கிறது.

» நல்ல எண்ணங்களைத் தூவினால்தான் அவை நல்ல பலனைத் தரும். பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்தில் நல்லெண்ணத்தை விதைத்தாலும், அது நல்ல விளைவைத்தராது.

பொதுத்தொண்டு
நாம் துறவிகளாகிவிடவேண்டும்! குடும்பம் இருக்கும், குடிகெடுக்கும் எண்ணம் இருக்காது, துணைவி இருப்பாள், நம் தொண்டுக்கு துணை புரிய, குழந்தைகள் இருக்கும், அன்புக்கான அரிச்சுவடியை உணர்த்த! தொழிலில் ஈடுபடுவோம் வாழ்க்கை நடத்த! மடம் தேடாமல் தாவடம் அணிந்து சம் ஆகாமல் காவி தேடாமல் தொண்டாற்றும் துறவியாக அன்புக்கு இடமளித்து அறநெறியை நாட்டிலே புகுத்தி தொண்டாற்றம் துறவியாக வேண்டும்! (துறவி காவியில்லை - திராவிடநாடு, 04.09.1955)

சமுதாயம்
தென்னை தருவது தானே என்பதான் கள் விரும்பத்தகாததாகிவிடாது அது போலத்தான் தம்பி, செயல் வீரதீரமிக்கது என்பதால் மட்டுமே பாராட்டப்படத்தக்கது, போற்றப்படத்தக்கது என்று கூறிவிடமுடியாது.
(முள்ளுமுனையிலே - 17.04.60)

நீதி
தீர்ப்பு என்றாலே அது நியாயமானது என்று பலர் நினைக்கிறார்கள். தீர்ப்பு நியாயமானது முடியானது என்றால் மீண்டும் நாம் அதற்க மேலுள்ள நீதி மன்றங்களுக்கு ஏன் செல்ல வேண்டும்.

சமதர்மம்
ஏழை என்றும், பணக்காரன் என்றும் இரண்டு வர்கம் இருப்பது பொதுவாகவே சமூகத்திற்கு கேடு; ஆபத்து

மக்களிடம் சகோதரத்துவம் மலரவேண்டும். அதற்கு அப்பு ஆட்சி செய்தல் வேண்டும். ஒரு பகுதி மக்களைச் சேற்றிலும் சகதியிலும் நெளியும்படி விட்டுவைப்பது சமுதாயம் முழுவதையும் நாசம் ஆக்கும்.

ஆண்டான் - அடிமை - உயர்ந்தவன் - தாழ்ந்தவன் - மதகுரு - பக்தன் - மிராசி - உழவன் - பிரபு - பணியாளன் - முதலாளி - தொழிலாளி இவர்கனிடையே ஏற்பட்ட வர்கப்போராட்டங்களே உலக வரலாறாகும்.

வேலை கிடைக்காததால் வேலை செய்யாது இருப்பவர்களுக்கு கிடைத்திருப்பது ஓய்வு அல்ல - திகைப்பு.

மக்களாட்சி
எங்களால் எப்படி ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்று கேட்கலாம். மக்களிடம் உள்ள சக்தி, சாதாரண சக்தி அல்ல! அரசை ஆக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்த சக்தி. அந்த சக்தியை பயன்படுத்தும் விதமாகப் பயன்பத்தினால்தான் அரசு நிலைக்கும்.

ஷேக்ஸ்பியர் சீசரின் மனைவியைக் குறிப்பிடுகையில், சீசரின் மனைவி குற்றங்குறைகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் எனறு கூறியுள்ளார். அதுபோல, பெரிய அரசை நடத்திச் செல்பவர்களும் எந்த விதமான குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

பகுதி: 1 2 3 4

 

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai