அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

பகுத்தறிவு
பகுதி: 4

பகுதி: 1 2 3 4

ஏழ்மை
இந்த உலகில் நாம் காணுகின்ற பேருண்மைகளில், ஒன்று - இங்கே ஏழையும் வாழ முடியாது, பணக்காரனும் வாழமுடியாது.

சிரிப்பு
ஒருவன் சிரிக்கிறான், அவனோடு ஆயிரம் பேர் சிரிக்கிறார்கள். இது இருக்கவேண்டிய சிரிப்பு. ஒருவன் சிரிக்கிறான், அதனால் ஆயிரம் பேர் அழுகிறார்கள், இது அழியவேண்டிய சிரிப்பு.

காலம்
நிகழ்காலத்தில் அழிந்திருப்பதைவிட்டு, தயைத் தூக்கி வரங்காலத்தைக் கொஞ்சம் நோக்கம் பண்பு பெற்றவர்களே வரலாற்றுச் சுவடிகளில் என்றென்றம் நிலைத்துநிற்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

தாய்மொழி
நமது தாய் மொழியான தமிழ் உயர்வு தனிச் செம்மொழி; இது உலகில் வேறு எந்த இனத்துக்காவது தாய்மொழியாக இருந்திருந்தால், இத்தனைக் காலத்திற்குள் உலக பொது மொழியாகி இருக்கும்.

உழைப்பு
பொதுவாக நமது நாட்டில் படித்தவன் உழைக்க மாட்டான், உழைப்பவன் படித்திருக்கமாட்டான் என்ற மனோ நிலை நிலவுகின்றது. இதுவே இந்த நாட்டின் நலிவுகளுக்கும் ஒரு காரணமாக விளங்குகிறது. இந்நிலை மாறவேண்டும். படிப்பது நன்றாக உழைத்திட என்ற எண்ணம் ஏற்படவேண்டும்.

நல்ல காலம்!
இப்பொழுது தமிழிலே பாடுகின்ற தமிழுக்காக உழைக்கின்ற எல்லா கவிவாணர்களையும், தமிழ்நாடு வரவேற்கின்றது. எக்கட்சியினராயினம் எம்மதத்தினராயினும், எப்கொள்கையினராயினும் செய்கிற தொண்டு தமிழுகும் தமிழ் நாட்டிற்கம் பயன்படுகிறதென்றால், தமிழனுடைய உள்ளம் குளிர்கிறது, உடனே கவிகளை அணைக்கத் தனது இருகரங்களையும் நீட்டுகிறான்; பாராட்டுகிறான்; பரிசளிக்கிறான், இது நாட்டின் நற்காலத்திற்கோர் எடுத்துக்காட்டு!

இந்தியா
ஒற்றுமையான இற்தியா வேண்டுமென்றால் பதினான்கு தேசியமொழிகளும் ஆட்சி மொழிகளாகும் வரை மொழிப்பிரச்சினையில் ஒரு திருப்திகரமான நிரந்தரமான முடிவு ஏற்படபொதில்லை. பண்மொழிகளை ஆட்சி மொழிகளாக்குவது இந்தியாவை ஒன்றுபட்டவராக கலந்துக்கொள்ள நாம் தரும் சிலை என்ற கொள்ளவேண்டும்.
இந்தியாவின் மூலம் ஒற்றுமையைக் குலைத்த இந்தியாவைத்தாம் பெறமுடியும். ஒற்றுமை இந்தியர் என்று இருக்கத்தான் வேண்டும் என்றால் ஒரு வட்டாரம் மற்றொரு வட்டாரத்தை அடக்குகிறது என்று எவரும் கருதும் வகையில் எத்தகை நிலையிலும் இருக்கக் கூடாது.

வெற்றி
வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்! அறிவாலும், ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை; அறிவும், ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்.

» வியாபாரிகள் பலர் தரும் காணிக்கை வசூல் செய்கிறார்கள். வசூல் செய்து கோயில்களுக்கு அளித்தார்களே தவிர, யாராவது ஒருவர் உயர்ந்தால் பள்ளி கட்டியிருக்கிறார்களா? ஆஸ்பத்திரி கட்டியிருக்கிறார்களா? வாசச் சாலை அமைத்திருக்கிறார்களா? அதுதானே இல்லை.

» விதி விதியென்று மக்களின் மதியை மாய்க்கம் ஏடுகளல்ல நமக்கு தேவை. தமிழ் பேசும் சமூகத்தை தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை. தன்னம்பிக்கை ஊட்டும் ஏடுகள் தேவை. மதியைப் பெருக்கி விதியை தொலைக்கும் ஏடுகள் தேவை.

தேவையுள்ள பழைய எண்ணங்கள் நசித்துப் போய்க்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் புதிய எண்ணத்தை நாம் கைப்பற்றவும் இல்லை. இடைக்கால நிலையிலேதான் இருக்கின்றோம்.

நாள், கோள், நட்சத்திரம், சகுனம், சாத்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடை கற்கள்.
(புதிய நாயனார்-சிறுகதை - 1950)

பகவத்சிங் பிணமாகாமலிருக்க (தாய்நாட்டுக்காக உயிர்நீத்தவர்) பகவான் அருளவில்லை! திருப்பூர் குமரனை தடிகொண்டு தாக்கியபோது, பாண்டியன் தந்த பிரம்படி (புராணம்) அனைத்து உயிர் மீதும் பட்டது போன்ற அற்பிதம் நிகழ்த்தி அவனை ஆண்டவன் காப்பாற்றவில்லை!? வ.உ.சிதம்பரனார் செக்கிழுத்தபோது, நந்தன் தூங்கும்போது சிவகரணங்கள் உழவுவேலைச் செய்ததுபோல (புராணம்), சிதம்பரனால் செக்கு தானாகச் சுற்றவில்லை; அவரேதான் இழுத்தார்!
(திராவிடநாடு இதழ்)

உணர்ச்சி ஒரு விதமான கொந்தளிப்பு; பகுத்தறிவு என்பது கொதிப்பை கிளரிக் கிளரிப் பார்த்து, உள்ள பொருள் என்ன என்ன நிலையில் அது உள்ளது என்பதைக் கண்டறிவது உணர்ச்சியே வாழ்க்கைக் கப்பலை உந்தித்தள்ளும் காற்றென்றால், பகத்தறிவுதான் அதை ஓட்டும் மாலுமி; காற்று இன்றேல் கப்பல் நகராது! மாலுமி இன்றேல் மூழ்கிவிடும்.
(காஞ்சி - இதழ் 15.08.1965)

பழமையின் பிடியிலிருந்து நீங்க - விதியின் சுழலினின்றம் விடுபட - மேலுலக வாழ்வுப் போதையிலிருந்து தெளிந்திட - உலகியல் அறிவுச் சுடர்கள், பகுத்தறிவுப் புத்தகங்கள், ஏராளமாகப் பரப்பப்படவேண்டும் மக்களிடையே.

பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai