அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 4

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

காடு திந்திடவேண்டும்! வளம் பெருகிடவேண்டும்! வேலையற்றோருக்கு வேலை தந்து அவர்களைச் செய்தொழில நேர்த்திகொண்டவர்களாக மற்றிட வேண்டும்! நிலத்தைத் தோண்டி சனிப்பொருட்களை எடுததிடவேண்டும்! சாதாரணப் பொருடகளை மட்டுமல்ல வலலாற்றுப் பொருட்களையும் தோண்டி எடுக்கவேண்டும்.

நான் மனிதத் தன்மையிலே முழுக்க முழுக்க நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மனிதத் தன்மை நிகழ்ந்திடச் செய்வதைக்காட்டிலும் மகத்தான வெற்றி இல்லை.

மக்களின் வாழ்விலே உள்ள பொறுப்புகளுக்கும், கடமைகளுக்கும் ஏற்றபடி, வாழ்க்கைத்திட்டம் அமையவேண்டும. அவரவருக்குள்ள கடமையினின்றும் வழுவாதிருக்கவேண்டும். வாழ உரிமை கொண்டோரே மக்கள் அனைவரும் என்ற பொது நீதியை அழிக்காதிருக்கவேண்டும்.

உடமை உணர்ச்சி என்பது யாருக்கம் எளிதில் குறையாது. வாதம் செய்வதால் உடமை உணர்ச்சி குறைந்துவிடாது.

நிலச்சுவான்தாரர்களுக்கு உள்ள உடமை உணர்ச்சியைக் குறைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நில உடைமைக்கு உச்சவரம்பு கொண்டுவரப்படுகிறது.

காந்தியடிகள் இந்தியாவை மாண்புமிகு நாடு ஆக்கிட விரும்புகிறார். சூதற்ற, சுரண்டலற்ற, வகப்பு பேதமற்ற நாடாக ஆக்க விரும்பினார். அவர் காண விரும்பிய நாடு எத்தகைய நிலையில் இருக்கிறது. வகுப்புக் கலவரம், தீண்டாமை கொடுமை, வலியோர் சிலர், நெறியோர் தமை வதைபுரியும் கொடுமை, கலடம் வெறியும் நகரங்கள், கவலை ததும்பும் கிராமங்கள், அரசியல் சூதுகள், சமுதாயச் சதிகள் எல்லாம் நெளிகின்றன; அடக்குவார் எவர் ஊர் என்று கொக்கரித்தபடி!

மகான்கள், மாவீரர்கள் ஆகியோரின் பிறந்த நாட்களைக் கொண்டாடும் கவர்ச்சி மிகந்த நாடு நம் நாடு. புகழ்பாடுவதில், பூஜைகள் நடத்துவதில் வல்லவர்கள் நாம். ஆனால் யாருக்காக திருநாள் நடத்துகிறோமோ, அவருடைய திருநாமத்தை பூசிக்கிறோமோ அவர்கள் காட்டிய வழியில் நடக்கவேண்டும்.

வாழைப்பழததின் தோலை வழியில் வீசி எறிந்தால், அதன் மீது கால் வைப்பவரை வழுக்கிவிட்டுவிடும். அதுபோல் நாடகத்தை தவறான வழியில் பயன் பத்தினால் அது பயங்கரமாக, மக்களை படுகுறியில் தள்ளிவிடும்.

பாட்டாளியின் உடலிலே சேறு இருக்கும். பாடுபடாதவன் உடலிலே சந்தனம் இருக்கும்.

ஓசை எழுப்பாமல் எழுகின்ற ஊமை உள்ளங்கள் பல. அவற்றின் விம்மல்கள் விளம்பரம் ஆவதில்லை. கண்களிலிருந்து பீறிட்டு பாயும் கண்ணீர் காட்டாறாகச் சீறிட்டுப் பாய்ந்தோடும்போது மட்டும துன்பத்தின் சுமைகளின் ஆழம் இதய ஓசையை நாதம் எழுப்புகிறது.

மனிதன் தான் வாழவேண்டும், தன்னைப் போலவே பிறரும் வாழவேண்டும், மனிதர் எல்லோரும் மனிதராகவே வாழ்ந்திடவேண்டும் என்ற மனப்பண்பைக் கொண்டவனாக இருக்கவேண்டும். அப்படி இருநதால்தான் மனித இனம் ஒன்றுபட்டு நாகரீக வாழ்வு வாழ முடியும்.

மனிதருள் இருந்துகொண்டு சமயம் கிடைக்கும்போதெல்லாம் வெளிவந்து வெறிச் செயலை புரியும் மிருகத்தை அடக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

கொடுமைக்கு ஆளான மக்களின் கொடிய கண்ணீர் ஆதிக்கம், கொடுமைக்கோட்டடைகளைத் தூளாக்கிடும் வெடிகுண்டுகளாயின. இது வல்லூறுகளை விரட்டிய சிட்டுக் குருவிகளை ஒத்திருக்கிறது.

வித்வச் செருக்குதான் ஒரு எழுத்தாளரின் ஆற்றலின் வெளிப்பாடு. அவனது புலமையின் காரணம்.

காவி உடையைக் கண்டு மயங்காதீர்கள். களளனும் காமுகனும் கூடத்தான் காவியுடை அணிந்து சமுதாயத்தை வஞ்சிக்கிறான். சீலராக இருக்கின்றனரா, எனக் கண்டறியச் செயலை கவனியுங்கள்.

இழிமொழிகள், ஏளனம், பழிச்சொல், புறக்கணிப்பு, நயவஞ்சகனின் நாகச் செயல்கள் அத்தனையும் தாங்கிக்கொள்ளுகிறவன்தான் முழுமையான மனிதன்.

வாழ்க்கை என்பது ஒரு ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சியின் படிமங்களைப் பொறுத்தே வாழ்க்கையும் அமையும்.

பேதங்கள் உருவத்தில் இல்லை. இதய்த்தில் உண்டு. மனபேதம் உருவ பேதத்தைவிடக் கொடியது. பல்வேறு உருவில் இந்த மனபேதம் விசுவரூபம் எடுத்து ஆட்டிப் படைக்கும்.

முன்னேற்றப்பாதையில் செல்லும் மாணவர்களாகிய நீங்கள் முதன் முதலாகச் செய்யவேண்டிய கடமை மனிதத்தன்மைக்கு மாறான கருததுரைகள் நாட்டிலே பரவவொட்டாமல் தடுக்கவேண்டும்.

சிந்திக்கத் தொடங்கிய மனிதன் முதல் சிந்தனையாளன் இயற்கை வளத்தை, தனது வாழ்வு வசதியாக அமையும் வகைக்கு பயன்படுத்தத் தொடங்கியதின் விளைவு, நாகரீக வாழ்வின் ஆரம்பக்கட்டம், முதல் அத்தியாயம்.

சிந்திக்க தெரிந்த முதல் சிந்தனையாளன் சுயநலமுள்ளவனாக தன்னைப் பற்றிய எண்ணத்தை மட்டுமே கொண்டவனாக இருந்துவிட்டிருந்தால் ஒன்றய உலகம், நாகசீக உலகம் ஏற்பட்டிருக்க முடியாது.

சூழ்நிலைச் செய்திடும மனநிலைகளை, மாற்றங்களை ஆக்கங்களை, அழிவுகளை, நன்மை துமைகளைக் காணவேண்டும். கண்டு சூழ்நிலை சரிவர, அமைய வேண்டியதின் அவசியத்தை அவசரத்தை உணர்ந்தே ஆகவேண்டும்; உணர்ந்து ஆவன செய்தே தீரவேண்டும்.
(09.02.1952)

வாழ்க்கைக் களத்தில் இறங்குவதற்கு முன்பு பயிற்சியும் பக்குவமும அடிப்படைக கொள்கைகளில் தெளிவும் பெறவேண்டிய பருவம் மாணவப் பருவம்.

மனிதன் உணர்வை மனிதர் பறிப்பது மட்டுமல்ல, மனிதனை மதிக்காத மனப்பான்மை, நிறுத்துப் பாத்ர்திடும் நேர்மையற்ற நிலை - மதம், சாதி, ஆண்டவனின் தூதன், ஆண்டான் அடிமை, புறப்பில் உயர்ந்தோன், பிறப்பால் தாழ்ந்தோன், ஏழை, பணக்காரர் இன்னம் எத்தனை எத்தனையோ முறண்பட்ட கொள்கைகளினிடையே சிக்கிச் சீரழியவில்லைய இன்றய மனித வாழ்வுக்காக.

மனித வாழ்வு - இந்றய மனித வாழ்பு எத்தனையோ மனிதப் போராட்டங்கள் இடையேயும், சுருங்க கூறமிடத்து வசதியையும், வாய்ப்பையும், சமயத்தையும், சந்தர்ப்பத்தையும், அறிவையும், ஆற்றலையும், அறியாமையையும், அஞ்ஞானத்தையும் பெருமளவு விஞ்ஞானத்தைத் துணைகொண்டு நடத்திடும் நிலையிலும் இருக்கிறது.

பெறி - எழுச்சி, ஆர்வர்-ஆவல் இவை வெவ்வேறு வார்த்தைகள். வெறம் வார்த்தை மாற்றங்கள் மட்டுமா இவை! நிலமை மாற்றங்கள்! நினைப்பிலே ஏற்படும் மாறறங்கள்! போக்கிலே மூட்டப்படும் மாற்றங்கள்! இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பிளைவுகள் வெவ்வேறாகின்றன!

எழுச்சிசொண்டவன் வீரன்! தியாக உணர்வுடன் போரிடுபவன் வீரன்! வெறி உணர்ச்சியால் ஆட்டிவைக்கப்படும் நிலையிலே போரிடுபவன் மாவீரன் ஆகான்;மனித மிருகமாகிறான்.

உணர்ச்சியால் உந்தப்படுபவன் மனிதன். அந்த் மனிதன் அருமையான இயந்திரம். அவனுடைய இதத்தில் வலி அவனது கண்களில் கண்ணீர், அவனது உடலில் வாட்டம் காணப்பட்டால், அந்த இயந்திரத்திடமிருந்து முழுப்பயனும் பெறமுடியாது.

வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும். உலகத்தை கிராமத்தாருக்குக் காட்டவேண்டும்.

உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துக்குரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும்.

ஒருவன் திறமைசாலியாக இருக்கலாம். ஆபூர்வமான ஆராய்ச்சியாளனாக இருக்கலாம். ஆனால் அவன் வெற்றிபெற, அந்த வெற்றியினால் பலரும் நன்மைபெற யாரேனும் கருணை உள்ளம், படைத்த ஒருவர் அவனக்கத் தக்க சமயத்தில் கைபொடுதது உதவ முன்வரவேண்டும். இல்லையேல் அவன் திறமை காட்டு மலர் ஆகும். மீட்டுவாரற்ற வீணையாகும்.

தொழிலாளி - கூலிக்காரன் - அடிமை மூன்று விதமான பெயரும் ஏழைதான் பெற முடியும். மூன்று விதமானவர்களம் ஏழைகள். உழைத்தே பிழைக்கவேண்டியவர்கள். ஆனால் மூவருக்கும் நிலமை வேறு.

புதியவனவே எல்லாம் நம் நாட்டு பெரும் பொக்கிஷங்களிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டவை என்ற பேசிப் பூரிப்பதிலே எந்த பெருமையும் இல்லை.

கலை கலை என்று பேசும் அன்பர்கள் இந்நாட்டு மக்களின் நிலை உணர்ந்தனரோ என்று கேட்கிறேன். 100-க்கு 90 பேர் இங்கு பாமரர். எழுத்தறிவே அறற பொது மக்கள். இராமாயணம் என்றதும் விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஓங்கி வளர்ந்த அனுமன் அடி விழவும, சூரியரை வணங்கவும் அறிவரேயன்றி யாப்பும் அணியும், தெரிந்த இராமகாதை கற்பனை அதிலே உள்ள கவித்திறனைக் கண்டு களிப்பதே முறைமை என்றா எண்ணுகின்றனர்.

மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால் அதை ஏற்று கோள்வதற்கு அங்கே ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொள்வார்கள். ஆனால் இங்கோ ஒருவரை அறிவாளி என்று சொன்னால், என்ன அறிவு பெரிய அறிவு என்று தன் அறிவை காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.

குறிக்கோள் தெளிவாக அமைந்திடின் மாணவர்களிடம் மாண்புமிக செலினை எதிர்பார்க்க முடியும்.

நியாத்தை மட்டுமே கவனித்து எந்த நாட்டிலும் ஆட்சியாளர்கள் நடப்பதில்லை. நியாயத்தை நிலை நாட்ட பலம் துணையாக இருக்கிறது என்றால் மட்டுமே காரியம் பலிக்கும்.

 

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai